அமராவதி கதி அதோகதி

தாமரைகூடதவமிருக்கும்– அவள்
தங்கமுகத்தைப்பார்ப்பதற்கு!
ரோஜாமலரும்தவமிருக்கும்– அவள்
மேனியின்நிறத்தைப்பார்ப்பதற்கு!
முத்துகள்கூடத்தவமிருக்கும்– அவள்
முல்லைப்பல்லைப்பார்ப்பதற்கு!
கத்தும்குயிலும்காத்துக்கிடக்கும்– அவள்
கனியினும்இனிதாம்குரல்கேட்க!
மானும்மயிலும்தவமிருக்கும்– அவள்
மையல்சாயல்கணிப்பதற்கு!
வானவில்கூடத்தவமிருக்கும்– அவள்
வளைந்தபுருவம்ரசிப்பதற்கு!
கடலும்வானும்தவமிருக்கும்– அவள்
கண்ணில்நீலம்பார்ப்பதற்கு!
அம்பும்மீனும்தவமிருக்கும்– அவள்
அழகியகண்களைப்பார்ப்பதற்கு!
நிலவுகூடத்தவமிருக்கும்– அவள்
நெற்றியில்பிறையைக்காண்பதற்கு!
உலவும்தென்றலும்தவமிருக்கும்– அவள்
உடலைமெதுவாய்த்தொடுவதற்கு!
வலம்வரும்மேகமும்காத்திருக்கும்– அவள்
வளர்கருங்கூந்தலைப்பார்ப்பதற்கு!
மலையும்குன்றும்தவமிருக்கும்– அவள்
பருவஅழகைரசிப்பதற்கு!
நான்மறைமுனிவரும்தவமிருப்பார்– அவள்
நடையுடைபாவனைரசிப்பதற்கு!
சித்தரும்பித்தராய்மாறிடுவார்– அவள்
சிறுநகைகடைவிழிதாக்குதலால்!
பிரமன்இந்திரன்தவமிருப்பார்– அவள்
பேரழகிளமையைரசிப்பதற்கு!
செத்தவர்கூடபிழைத்தெழுவார்– அவள்
சிற்றடிசதங்கைஓசையிலே!
அம்பிகாபதிகூடஇன்றிருந்தால்– அந்த
அமராவதிகதிஅதோகதிதான்!
மஜ்னுகூடஇன்றிருந்தால்– அந்த
லைலாகதியும்எக்கதியோ!
அக்பர்மகன்சலீம்இவளைக்கண்டால்– அந்த
அனார்க்கலிநிலைமையாரறிவார்!
தேவதாஸ்கூடபார்வதிமறப்பான்இந்தத்
தேவதைஅருகேஇருந்துவிட்டால்!
Back to Top