Skip to content
வெற்றி | என்பது | உழைப்பின் | வித்து! |
உழைப்பு | என்பதோ | உறுதியின் | வித்து! |
உறுதி | என்பது | தெளிவின் | வித்து! |
தெளிவு | என்பது | அறிவின் | வித்து! |
அறிவு | என்பது | ஆய்வின் | வித்து! |
ஆய்வு | என்பதோ | தேடலின் | வித்து! |
தேடல் | என்பது | தூண்டலின் | வித்து! |
தூண்டல் | என்பதோ | உணர்வின் | வித்து! |
உணர்வு | என்பது | கடவுளின் | ஆக்கம் |
கடவுள் | என்பதோ | கடந்துள் | செல்வது! |
கடப்பது | என்பது | ஐம்புலன் | ஒடுக்கம்! |
ஐம்புலம் | என்பதோ | ஜீவனில் | அடக்கம்! |
ஜீவன் | என்பது | ஆத்மா | தொடக்கம்! |
ஆத்மா | என்பதோ | ஆதிவி | நோதம்! |
ஆதி | என்பது | அனாதி | யானது! |
அனாதி | என்பதோ | பிரபஞ் | சமாகும்! |
பிரபஞ் | சமென்பது | அழிவை | வென்றது! |
அழியா | ஆற்றலோ | சக்தியின் | ஊற்று! |
சக்தி | என்பது | ஜீவனின் | இயக்கம்! |
ஜீவன் | என்பதோ | சிவனாய் | விளங்கும்! |
சிவனே | என்பது | செயல்களின் | துடிப்பு! |
செயல்கள் | என்பதோ | இயக்க | மாகும்! |
இயக்கம் | என்பது | சுழற்றும் | ஆற்றல்! |
சுழற்றல் | என்பதோ | மனத்தின் | வேகம்! |
மனது | என்பது | மந்திர | ஈர்ப்பு! |
மந்திரம் | என்பதோ | மனத்திற | மாகும்! |
மனத்திறம் | என்பது | மாயைத் | தேக்கம்! |
மாயம் | என்பதோ | மயக்கத் | தொடக்கம்! |
மயக்கம் | என்பது | சூன்ய | வெற்றிடம்! |
சூன்யம் | என்பதோ | பேரின் | பம்தரும்! |
பேரின் | பமென்பது | பரமா | னந்தம்! |
பரமா | னந்தமோ | பரம்பொருட் | சோதி! |
சோதி | என்பது | ஆன்ம | சுடரொளி |
ஆன்மா | ஓமெனும் | நமசி | வாய |
சிவாயம் | என்பது | மெய்யைக் | குறிக்கும் |
மெய்யென் | பதுவோ | பொய்யா | லானது |
பொய்என் | பதுவோ | பூஜ்ய | மானது |
பூஜ்ய | மென்பது | ஞான | திறவுகோல் |
ஞான | மென்பது | தன்னை | அறிவது |
தன்னை | அறிவதே | இறைவனை | அறிவது! |
Back to Top