Skip to content
ஒடிச்சுப் | போட்ட | இலையைத் | தின்னு |
ஊத்தி | வச்ச | கழனிகுடிச்சு | |
ஒங்கபின்னே | சுத்திவந்த | ஆடுங்க | –நாங்க |
உண்மையிலே | நம்பிவந்தோம் | பாருங்க | |
| | | |
கெடயைப் | போட்டு | வயல் | வெளியிலே |
புளுக்கை | சிறுநீர் | எருவா | மாத்தி |
விடிஞ்சதுமே | தண்ணிகாட்டி | விட்டீங்க | –எங்களை |
விரட்டிநல்லா | புல்வெளியிலே | விட்டீங்க | |
| | | |
ஆத்து | ஓரம் | காட்டு | ஓரம் |
அருகி | ருக்கும் | செடியின் | ஓரம் |
மாத்திமாத்தி | மேயவிட்டீங்க | எங்களை | –நாங்க |
மறக்கமாட்டோம் | உயிருள்ளவரை | உங்களை | |
| | | |
நம்பி | வந்த | எங்க | ளுக்கு |
நல்ல | தையே | செய்த | நீங்க |
அன்புகாட்டத் | தவறினது | என்னங்க | –கழுத்தை |
அறுத்துயெங்கள் | உயிர்பறிப்பது | என்னங்க | |
| | | |
காலு | நாலைக் | கட்டிப் | போட்டு |
கழுத் | தறுத்த | போது | முங்கள் |
கருணையைத்தான் | நினைச்சிருப்போம் | அய்யாவே | –நாங்க |
கதறுவதுஉங்க | நினைப்பிலே | மெய்யாவே | |
| | | |
காந்தி | புத்தர் | மகா | வீரர் |
கருணை | ராம | லிங்க | அடிகள் |
சாந்திமார்க்கம் | சத்தியத்தைச் | சொன்னீங்க | –எங்களைச் |
சந்தைக்கடையில் | கழுத்தறுத்துக் | கொன்றீங்க. | |
| | | |
உலகத் | திற்கே | சாமா | தானம் |
ஒற்று | மையோ | டிஹிம்சை | கூறி |
கலகமின்றி | கொலைதடுத்தது | நீங்கதான் | –எங்களை |
கழுத்தறுத்து | போடுறதும் | நீங்கதான். | |
| | | |
காட்டில் | வாழும் | மிருகங் | களும் |
ஓடி | ஒளிந்து | பிழைக் | குதுங்க |
வீட்டில்உங்க | கூட | வாழ்ந்தோம் | நாங்களே |
வெட்டிப்பலி | கொடுபபதுவோ | நீங்களே | |
Back to Top