இருகனியில் முக்கனிச்சுவை

அத்தானைத்தேடிவந்தமானே-ஒன்றாய்
ஆலாலம்பாடலாம்வாதேனே
முத்தாரப்பல்வரிசைகாட்டி-என்னை
பித்தாக்கினாய்காதல்ஊட்டி
தடையாருவிடைகூறுதமிழ்தாங்கிவருவேன்
இடையூறுஇனியேதுவா-இளங்
கொடிமுல்லைஇடைநெளியபடைவெல்லும் விழியோடு
விடிவெள்ளியொளிகூட்டிவா-என்னுடன்
விளையாடஉறவாடவா
மாஞ்சோலைகுயில்கூவமயில்கூடிநடமாட
பூஞ்சோலைஇளங்காற்றேவா-அமுத
சாந்தத்தைமுகத்திலேகாந்தத்தைக்கண்ணிலே
சேர்ந்திணைத்தசிலையே நீவா– எழில்
சித்திரப்புதையலேவா
இருகனியில்முக்கனியின்சுவைகூட்டித் தருமழகே
இன்பத்தேன்சுவையூற்றேவா-அரும்
திருக்குறளின்பொருளாககவிகம்பன்பாட்டாக
சேர்ந்தசெந்தமிழே நீவா-என்னைச்
சேர்ந்தென்றும்துணையிருக்கவா.
Back to Top