Skip to content
உனக்கொரு | காலம் | உண்டடா | மனிதா |
கவலையை | விட்டுவிடு | –உன்னை | |
இகழ்ந்தவர் | புகழ்ந்திட | வாழ்ந்து | காட்டிடு |
தலையை | நிமிர்த்திவிடு | | |
| | | |
தாழ்ந்தவன் | உயர்வதும் | உயர்ந்தவன் | தாழ்வதும் |
தலைவிதி | இல்லையடா | – அறிவு | |
தன்னை | வளர்த்திடு; | உழைப்பில் | நிலைத்திடு |
தழைத்திடும் | வாழ்க்கையடா! | | |
| | | |
விழியைத் | திறந்திடு; | விதியை | மறந்திடு |
விடிந்திடும் | வாழ்க்கையடா | – உனக்குள் | |
உறுதியும் | இருக்குது; | உணர்வும் | இருக்குது |
உயர்த்திடும் | உன்னையடா! | | |
| | | |
படிப்படி | யாகவே | நீஉயர் | அதுதரும் |
வெற்றித் | திலகமடா | – உன்னைப் | |
பழித்து | நகைத்தவர் | வியந்து | அடங்குவார் |
பகட்டு | உலகமடா! | | |
| | | |
தூண்டில் | போடு; | கண் | மிதவை |
மீனைப் | பிடித்திடடா | - கொஞ்சம் | |
பாதை | மாறினால் | தேடிய | கோடியும் |
பாழாய்ப் | போகுமடா! | | |
| | | |
செல்வம் | சேர்ந்ததும் | செருக்கும் | சேர்ந்திடும் |
தூரத் | துரத்திடடா | – அதுஉன் | |
சீரையும் | கெடுக்கும் | பேரையும் | கெடுக்கும் |
சிந்தனை | செய்திடடா! | | |
| | | |
அடக்கம் | வள்ளுவர் | குறள்நெறி | கூறும் |
அதுதான் | வாழ்க்கையடா | – இதை | |
அறிந்தே | வாழ்ந்திடு; | அறியா | மூடர்கள் |
அழிவார் | உண்மையடா! | | |
| | | |
பணமும் | குணமும் | பலருக் | குதவனும் |
பசிப்பிணி | போக்கிடடா | – ஏழைகள் | |
பலன்பெற | நலம்பெற | பாங்குடன் | வாழ்ந்திடப் |
பாதை | திறந்திடடா!! | | |
| | | |
புத்தரே | சுநபி | காந்தி | வள்ளலார் |
போதனை | ஏற்றிடடா | – உனது | |
முத்திரை | உழைப்பின் | அமுத | சுரபியால் |
முடவர்க்கும் | உதவிடடா! | | |
Back to Top