எங்கள் நாடு தமிழ் நாடு

தெங்குகன்னல்வாழைபலாசேர்ந்ததெங்கள்நாடு
சீருலாபோல்காருலாவும்சிறப்புமிகுநாடு
மங்களஞ்சேர்மஞ்சளிஞ்சிமாங்கனிகளோடு
மணமிகுந்தசந்தனமும்அகில்விளையும்நாடு
பொங்குபுனல்பாயும்ஆறுபுகழ்மிகுந்தநாடு
பொதிகையெனும் மலைதழுவிதென்றல்தரும்நாடு
தட்டினாலும்தங்கமெங்கும்வெட்டினாலும்வெள்ளி
பிளாட்டினமுமிரும்புமலுமினியமுள்ளநாடு
தங்குபுகழ்தாங்கிநிற்கும்தனிச்சிறப்புநாடு
தாவும்அலைமேவுகடல்முத்துகொண்டநாடு
சிங்கமொத்தவீரமக்கள்சிறந்திருக்கும்நாடு
சேரசோழபாண்டிமன்னர்ஆண்டிருந்தநாடு
கங்கையோடுகடாரமீழம்வெற்றிகொண்டநாடு
காரிமயஉச்சியிலேகொடிபொறித்தநாடு
கனகனையும்விஜயனையும்கல்சுமக்கவைத்து
கண்ணகிக்குச்சிலைவடித்தகாட்சிகண்டநாடு
வாரணங்கள்போரடிக்கசோறுடைத்தநாடு
பாரதப்போர்நடந்தபோதும்பசியொழித்தநாடு
முத்துமணிபவளம்ஏலம்மயில்தோகையோடு
மிதந்துகடல்கடந்துதந்தம்விற்றுவந்தநாடு
எட்டுத்தொகைபத்துப்பாட்டுப்பதினெண்கணக்கும்
இயலுமிசைகூத்துகுறள்இனிதுயர்ந்தநாடு
கம்பரொட்டக்கூத்தர்புகழேந்தியவ்வையோடு
கபிலரிளங்கோவாழ்ந்தபுலவர்மிகுநாடு
மொழிவளர்க்கச்சங்கமாய்ந்தமூத்ததமிழ்நாடு
விழித்திருந்துமொழிகாத்துவிருதுகொண்டநாடு
உலகமெல்லாம்செம்மொழியாய்உயர்ந்ததமிழ்நாடு
உண்டுபலமதமெனினும்ஒன்றிவாழும்நாடு
மாரியொத்தபாரிஓரிகாரிவள்ளல்நாடு
மீறிடாதமனிதநேயம்மிகுந்திருக்கும்நாடு
பிச்சையாளர்தொழுநோயாளிஆதரவில்லாதார்
பெருமையுடன்மகிழ்ந்துவாழவழிவகுத்தநாடு
கஞ்சியூற்றஆளிலாதமுதியோரினைத்தாங்கி
காலமெலாம்உதவித்தொகைவழங்குகின்றநாடு
கண்கண்ணாடிகாற்செருப்புகருணையில்லம்தந்து
காப்புறுதிதந்துநோயைத்தோற்கடித்தநாடு
ஏழைவாழகுடிசைமாற்றிவீடுதரும்நாடு
இரந்துஉண்டுவாழ்வோரிலாஏற்றமிகுநாடு
வேட்டிசேலைதுணியணிகள்ஏழைகளுக்கீந்து
வீட்டுக்கொருவிளக்கெரியவழிவகுத்தநாடு
ஒருரூபாய்கிலோஅரிசிஉவந்துதரும்நாடு
உணவளித்துமுட்டையுடன்கல்விதரும்நாடு
கிணற்றுக்கிலவசமின்சாரம்கிடைக்கச்செயும்நாடு
கேட்காமலேவிவசாயிதன்கடன்தீர்க்கும்நாடு
நாடில்லாதநரிக்குறவர்வீடுபெற்றநாடு
நாலுவகைப்படிப்பறிவைஅவர்க்களித்தநாடு
ஏழைகளும்சிரித்திருக்கஏற்றதொண்டுசெய்தே
இறைவனையேகுடிசைக்குள்இருக்கவிட்டநாடு
இந்தநாடு“எங்கள்நாடு”இனியதமிழ்நாடு
ஏற்றமிக்கநாடுவேறுஇதற்குஇல்லைஈடு!

2011 ஜனவரி 22-23 தேதியில் திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கவிஞர்கள் பேரவை – மற்றும் – தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் இணைந்து ஆய்வுசெய்து தேர்ந்து கவிஞர் அறந்தைத் திருமாறனுக்கு கவிமாமணி விருது வழங்கினார்கள். ஆய்விற்கு எடுத்துக் கொண்ட கவிதை இது…

Back to Top