Skip to content
அவன்:- | கட்டழகே | தென்றலுன்னைத் | தொட்டுவிட்டதா | – அந்த |
| காமன்மலர் | அம்புவந்து | பட்டுவிட்டதா? | |
| பேதையேநீ | போதைமீறி | ஏங்குவதென்ன | – அங்கே |
| பேதலித்த | நெஞ்சுகதை | கூறுவதென்ன | |
அவள்:- | ஆணழகில் | நான்மயங்க | அச்சம்வந்தது | – அதை |
| அடைந்துவிட | துணிந்தபோது | நாணம் | வந்தது |
| தேன்ததும்பி | இன்பமிங்கே | பொங்கிநிற்குது | – இதன் |
| தேவைதன்னை | தேவன்கூட | அறியவில்லையே | |
அவன்:- | அல்லிமலர் | வெண்மதிமேல் | ஆசைவைக்குது | – அந்த |
| ஆதவன்மேல் | தாமரையும் | பாசம் | வைக்குது |
| பூத்தமலர் | வண்டுக்காக | காத்திருக்குது | – இது |
| புதுக்கதையா | பழங்கதையா | முடிவு | இல்லையா |
அவள்:- | கட்டுப்பாடு | தடுக்குதுமனம் | கலங்கிநிற்குது | – என்னைக் |
| காவல்மீறி | எல்லைதாண்ட | ஆசை | தூண்டுது |
| இச்சையெந்தன் | லெட்சியத்தை | இடித்துநொறுக்குது | – மனது |
| இருக்கிறதா | சாகிறதா | எனத்தவிக்குது. | |
அவன்:- | பகலிரவும் | சேர்ந்தொருநாள் | ஆனதில்லையா | – நல்ல |
| பாலும் | தேனும் | கலந்துசுவை | சேர்த்ததில்லையா |
| ஆவதென்ன | போவதென்ன | முடிவுகாண்கிறேன் | – உணர்ச்சி |
| அணையுடைத்து | பெருக்கெடுக்குது | தயக்க | மேனடி. |
Back to Top