கண்ணில் | பதிவாகும் | மனத்தில் | உருவாகும் |
கனவின் | நிழலாகும் | எது | – ஒரு |
காந்த | இழுப்பாகி | நீந்தத் | தடுமாறி |
கலங்கி | நின்றிடுமே | அது! | |
பெற்ற | தாய்தந்தை | சுற்றம் | அறியாமல் |
மறைவில் | நடப்பது | எது | – மனத் |
திரையை | மூடிக்கொண்டு | ஓர | விழிநடத்தும் |
ஓரங்க | நாடகம் | அது! | |
பூத்த | அழகு;மணம் | காற்றில் | பரப்பமனம் |
ஏங்கித் | தவித்திருப்ப | தெது | – வரும் |
அச்சம் | நாணமெனும் | மிச்ச | உணர்களால் |
அடங்கிக் | கிடந்திடுமே | அது! | |
கொஞ்சி | மொழிபேசி | வஞ்சி | உறவாட |
அஞ்சி | நடக்கவரும் | எது | – அது |
அவனை | நினைந்தயிவள் | மனத்தில் | நிலைத்த அவன் |
உறவுக் | காதலென்ப | தது! |