Skip to content
காக்கையொடு | குயிலினமும் | யானை | மற்றும் |
கருப்பாடு | கருங்குரங்கு | கரடி | தானும் |
பார்க்கும்விழி | நெருப்பான் | கருஞ்சி | றுத்தை |
பால்கொடுக்கும் | எருமைமுதல் | கரிச்சான் | எல்லாம் |
நோக்குநிறம் | கடுங்கருப்பு | ஆன | தாலே |
நொந்துமனம் | வெந்ததுண்டா? | மனிதன் | மட்டும் |
தீக்குள்விரல் | வைத்ததைப்போல் | கருப்புப் | பெண்ணை |
தீண்டாப்பொரு | ளாக்கியதை | ஒதுக்க | லாமா? |
| | | |
| | | |
சந்தனத்தைத் | தரும்மரமும் | அழகோ; | முத்தைத் |
தருகின்ற | சிப்பியென்ன | அழகோ; | தங்கம் |
தந்தசுரங் | கம்என்ன | அழகோ; | பூத்த |
தாமரைவாழ் | சேறென்ன | அழகோ; | வைரம் |
எந்தவிதம் | அழகாகும் | பட்டை | இன்றி |
இனியதேன் | அழகோ; ஈ | மொய்த்த | தன்றோ! |
பந்தங்கள் | தொடர்கதையாய் | வளர்த்துக் | காக்கும் |
பாசமலர் | கருப்பென்றால் | குறையோ | சொல்வீர்! |
| | | |
| | | |
கருப்பாக | குயிலிருந்தும் | குரலி | லினிமை |
காட்டாமல் | போனதுண்டோ? | தங்கம் | மண்ணில் |
இருந்தாலும் | வைரமொடு | ஒளிகூட் | டாதோ? |
எழில்முத்து | அதன்மதிப்பு | குறைவ | துண்டோ? |
மருந்துக்கும், | விருந்துக்கும் | தேனே | யன்றோ! |
மணங்கமழச் | சந்தனந்தான் | மறுத்த | துண்டோ? |
கருப்பாக | இருக்கும்பெண் | சமுதா | யத்தைக் |
காக்கின்ற | குலமகள்தான் | வெறுக்க | லாமோ? |
| | | |
| | | |
படைப்பினிலே | கருப்பென்ன, | சிவப்பு | என்ன? |
பண்பு | “குண நலன்” | மாறிப் | போவ துண்டோ? |
எடைபோட்டுப் | பார்க்கின்றீர்! | அவளும் | தாய்மை |
எய்திப்பின் | சந்ததியை | வளர்த்தல் | காண்பீர்! |
தடைபோடும் | மணப்புழுக்கம் | தாண்டி | வாரீர்! |
தளிருடலாள் | இரத்தம்அது | சிவப்பு | காண்பீர்! |
கடையோரம் | மனதிலிதை | ஏற்றுக் | கொண்டு |
கருணையுடன் | வாழ்வளிப்பீர்! | பெருமை | சேரும்! |
Back to Top