சொக்குதடி என்மனசு

“பூ”வெடுத்துநீவரவோ!பொன்னெடுத்துநான்தரவோ!
“பா”வெடுத்துநீவரவோ!பண்ணெடுத்துநான்தரவோ!
“நா”வெடுத்துநீவரவோ!நல்லதமிழ்நான்தரவோ!
தேனெடுத்துநீவரவோ!தீருமட்டும்நான்பெறவோ!
வில்லெடுத்துபுருவத்தால்விழியம்பைவீசுறியே!
மல்லெடுக்கத்தயங்காதமார்பகத்தால்மயக்குறியே!
கல்லெடுத்துஅடிப்பதுபோல்கண்ணடித்துப்போடுறியே!
சொல்லிருக்கு;பேச்சு;இல்லைசொக்குதடிஎன்மனசு!
பேருக்குநீயாரோ!பிறருக்குநான்யாரோ!
ஊருக்குத்தெரியாது;உன்உறவு!என்உறவு!
சீரிருக்குநம்உறவில்;சிறப்பிருக்குயார்அறிவார்!
நேருக்குநேர்சேர்வோம்;நெருக்கமாய்வாகண்ணே!
கோவைக்கனிதின்னுதற்குக்கொத்தும்கிளிநான் வாரேன்!
பாவையேகன்னத்தைப்பத்திரமாய்வைத்திடடீ!
தேவையைநிறைவேற்றத்தேடிவாரேன்உன்னிடத்தில்!
தீர்வைநீதரவேண்டும்சிந்தாமல்சிதறாமல்!
கொஞ்சுமொழிஅஞ்சுகமேகோமளமே!ரஞ்சிதமே!
வஞ்சிமலரேயெனக்குவாழ்வுதரவருபவளே!
நெஞ்சில்எனைச்சேர்த்தவளே!நீக்கமறஏற்றவளே!
செஞ்செடுத்தசிலைவடிவே!செந்தமிழே!வாகண்ணே!
காரிருக்கும்நாள்வரைக்கும்கடலிருக்கும்நாள்வரைக்கும்
சூரியசந்திரரெல்லாம்சுழன்றிருக்கும்நாள்வரைக்கும்
ஊரிருக்கும்நாள்வரைக்கும் உறவிருக்கும்நாள்வரைக்கும்
பாரிருக்கும்நாள்வரைக்கும் பாகாலம்வாழ்ந்திருப்போம்!
Back to Top