மா | தந்தது | கன்ன | மல்லவோ! |
மதி | தந்தது | முக | மல்லவோ! |
பூ | தந்தது | நிற | மல்லவோ! |
புதுமை | தந்தது | இளமை | யல்லவோ! |
மின்னல் | தந்தது | பார்வை | யல்லவோ! |
மேகம் | தந்தது | கூந்த | லல்லவோ! |
கன்னல் | தந்தது | பேச்சு | அல்லவோ! |
கருணை | தந்தது | இறைவ | னல்லவோ! |
உதடு | தந்தது | ஊர்வசி | யல்லோ |
தனம் | தந்தது | மேனகை | யல்லோ |
நகை | தந்தது | ரம்பை | யல்லவோ |
நளினம் | தந்தது | திலோத்தமை | யல்லோ |
நீலம் | தந்தது | கண்க | ளல்லவோ! |
நெருப்பு | தந்தது | கற்பு | அல்லவோ! |
ஆசை | தந்தது | உறவு | அல்லவோ! |
அன்பு | தந்தது | பாச | மல்லவோ! |
அச்சம் | தந்தது | அடக்க | மல்லவோ! |
நாணம் | தந்தது | பெண்மை | யல்லவோ! |
மடம் | தந்தது | மரபு | அல்லவோ! |
பயிர்ப்பு | தந்தது | பண்பு | அல்லவோ! |