மாயக்காரியோ

இல்லைஇடை;அவள்நடையில்தெரியுது!
ஈக்காற்றுக்கிவள்இடையும்நெளியுது!
பல்லினைமுத்தும்பார்த்துஏங்குது!
பவளம்செவ்விதழ்நிறத்தில்மயங்குது!
மார்பைப்பார்த்துமாங்கனிமலைக்குது!
மணிமொழிகேட்டிடத்தேன்தவமிருக்குது!
கொள்ளைஅழகின்குவியலோஇவளுடல்!
கூறுவதெப்படி?கூப்பிடுகவிஞரை!
கண்ணதாசன்மருதகாசி
கவிஞர்வாலிபட்டுக்கோட்டை
வைரமுத்துஉடுமலைக்கவிஞர்
இவர்கள்பார்வையில்எப்படிதப்பினாள்
செப்படிவித்தைமாயக்காரியோ
ஈரேழுலகிலும்இவள்பேரழகியோ
தந்திரமந்திரபுன்னகைமோகினி
நால்வரில்எவள்;இவள்உருவில்வந்தவள்
பஞ்சின்மென்மைப்பசுந்தளிர்பாதம்
அன்னநடைபயின்றசைந்துகுலுங்க
வஞ்சிவந்தவள்;வஞ்சமனத்தவள்!
நஞ்சுபோன்றவள்;என்றுகம்பரும்
சூர்ப்பனகைதனைச்சுட்டிக்காட்டினார்!
அந்தஅழகியோஇங்குவந்தவள்!
பார்க்கும்இடமெலாம்பாவையின்தோற்றம்!
பரவசம்;நவரசம்;பாய்ந்துதாக்குதே!
மலர்ந்தஇவள்முகம்மதியோ!ரதியோ!
மாராப்புக்குள்குமுதமோ!அமுதமோ!
வளர்ந்தகுழல்கருநாகமோ!மேகமோ!
வாயிதழ்உமிழ்நீர்சுரபியோ!அமுதமோ!
கண்களென்னகணையோ!வினையோ!
காலன்தூதோ!ஆலமோ!சூலமோ!
பெண்கள்இவள்முன்எதிரியோ!உதிரியோ!
பேரழகில்இவள்மயிலோ!புயலோ!
கள்ளப்பார்வைகாந்தமோ!சுடரோ!
உள்ளம்உருகுதே!உணர்வுதுடிக்குதே!
புன்சிரிப்பெழிலோபொசுக்குதே!எரிக்குதே!
போதைஏற்றியேமயக்கிச்சாய்க்குதே!
மாலைத்தென்றல்மனதைஆட்டுதே!
மதுவோ!மாதோ!சிந்தைமயங்குதே!
முல்லைமலர்க்கணைதொடுத்துமன்மதன்!
வில்லைவளைத்தேவீசுறான்ஆயிரம்!
Back to Top