வாடிவிட்ட மலருக்கு தேனீ வருமா

கள்ளிருக்கும்உன்னிதழைவண்ணமலரே – வண்டு
கண்டுசுற்றிவட்டமிட்டதென்னமலரே!
உன்னழகைக்கண்டுவண்டுஉள்ளேவந்தா&உன்னில்
ஊறிவரும்தேன்குடிக்கஓடிவந்ததா!
காதலெனச்சொல்லுகிறார்என்னமலரே – கண்ணில்
கண்டபெண்ணைரசிக்கிறார்சொல்லுமலரே!
பேதமின்றிபலமலரில்தேனீஅமரும்-அந்தப்
பாதையிங்கேசரிதானாசொல்லுமலரே!
வாடிவிட்டமலர்தேடித்தேனீவருமா – அந்த
வாசல்வழிபறக்குமாசொல்லுமலரே!
கட்டுடலும்கெட்டழகுவிட்டபின்னங்கே – காதல்
மொட்டுவிட்டுமலருமாசொல்லுமலரே!
காதலென்னபருவத்தின்மயக்கமல்லவா – அது
மாறிஉருமாறிவயதேறிமீறினால்
ஆசைபாசம்அன்புநட்புகாதலெலாமே – ஒரு
கானலென்னும்மாயையாவதுண்மையல்லவா!
அம்பிகாபதிஅமராவதிசலீமொடு-அந்த
அனார்க்கலிமஜ்னுலைலாகண்டதுமென்ன
காதலென்றார்காதல்போயின்சாதலேயென்றார் அந்த
காதல் பாதையார் தொடர்ந்தார்; கடந்த துண்டுமா?
Back to Top