மொட்டுக் | குள்ளே | மணமும் | தூங்குது |
முக்கனிக் | குள்ளே | சுவைகள் | தூங்குது |
கொட்டைக் | குள்ளே | மரமும் | தூங்குது |
குமுறும் | இடியில் | மின்னல் | தூங்குது |
முட்டைக் | குள்ளே | குஞ்சு | தூங்குது |
மேகத் | துக்குள் | மழைநீர் | தூங்குது |
கொட்டுது | அருவிமின் | சாரம் | தூங்குது |
குழலுக் | குள்ளே | நாதம் | தூங்குது |
மண்ணுக் | குள்ளே | வைரம் | தூங்குது |
மலையின் | முகட்டில் | மணிகள் | தூங்குது |
பண்ணுக் | குள்ளே | இசையும் | தூங்குது |
பாட்டுக் | குள்ளே | பொருளும் | தூங்குது |
மாம்பழத் | துள்ளே | வண்டு | தூங்குது |
மதியும் | ரவியும் | அரைநாள் | தூங்குது |
கருப்பைக் | குள்ளே | குழந்தை | தூங்குது |
கல்லுக் | குள்ளே | சிலைகள் | தூங்குது |
பாலையில் | லெரிபொருள் | பதுங்கித் | தூங்குது |
பனியிம | யத்தில் | ஆறு | தூங்குது |
ஆழியி | லுப்பு | அடங்கித் | தூங்குது |
ஆலைக் | கரும்பி | லினிப்பு | தூங்குது |
பாலில் | வெண்ணை | நெய்யும் | தூங்குது |
பவளம் | முத்து | கடலில் | தூங்குது |
நூற்களி | லுலகறி | வெல்லாம் | தூங்குது |
நோக்க | மறந்தவிஞ் | ஞானம் | தூங்குது |
சேரிக் | குள்சுகா | தாரம் | தூங்குது |
சிந்தனைக் | குள்ளே | கருத்து | தூங்குது |
போருக் | குள்ளே | வெற்றி | தூங்குது |
புரட்சிக் | குள்ளே | விடியல் | தூங்குது |
ஏழ்மைக் | குள்ளே | ஏக்கம் | தூங்குது |
ஏக்கத் | துக்குள் | எழுச்சி | தூங்குது |
எழுச்சிக் | குள்ளே | விழிப்பு | தூங்குது |
விழிப்புக் | குள்ளே | மலர்ச்சி | தூங்குது |
பாறைக் | குள்ளே | தேரை | தூங்குது |
பட்டுப் | பூச்சியில் | நூலும் | தூங்குது |
பஞ்சுக் | குள்ளே | ஆடை | தூங்குது |
பகுத்தறி | விற்குள் | புதுமை | தூங்குது |
மூளையில் | ஆயிரம் | சிந்தனை | தூங்குது |
முயற்சியில் | லாதவர் | செயல்கள் | தூங்குது |
இத்தனை | தூக்கமும் | விழிக்குமே | ஓர்நாள் |
இதயமி | லாதவர் | விழிப்பது | எப்போ |
Category: தத்துவம்
எழு – விழி
முன்னேற்றம் | தந்திடுமே | முயற்சி; | அதனை |
முறையாக | மேற்கொண்டால் | உயர்ச்சி; | நல்ல |
எண்ணோட்டம் | வேண்டுமடா | உனக்கு; | இதுவே |
எப்போதும் | உனைஉயர்த்தும் | கணக்கு; | அறிவுக் |
கண்ணோட்டம் | கரையேற்றும் | பாரு! | ஆழ்ந்த |
கருத்தோட்டம் | மதிப்புயுர்த்தும் | சீரு! | என்றும் |
தன்னோட்டம் | தடம்மாறாப் | போக்கு; | முயன்று |
தாங்கிப்பார் | வாழ்வுயரும் | வறுமை | நீங்கும்! |
பாடுபடு | பலனுண்டு; | மண்ணை | வெட்டி |
பகுத்துப்பார் | தங்கமொடு | வைரம் | உண்டு! |
கேடுவிடு; | பிறர்வாழத் | தொண்டு | செய்நீ! |
கேட்காத | போதுமிறை | அருள்கி | டைக்கும்! |
ஆடுவிட | காடுகெடும்; | நாணல் | இட்டால் |
ஆறுகெடும்; | இதுபோன்ற | செயல்கள் | நீக்கு! |
ஈடுபடு; | ஊறுபடா | செயல்கள் | செய்நீ! |
எப்போதும் | வாழ்வினிக்கும் | இன்பம் | தேங்கும்! |
அறுவடைதான் | வேண்டுமெனில் | விதைக்க | வேண்டும் |
அறுபடையான் | விதைவிதையான் | வினைதான் | தீர்ப்பான்! |
உருப்படியாய் | ஓர்ந்துபார் | ஓலம் | வேண்டாம் |
உன்னுழைப்பு | நேர்மைதான் | உயர்த்திக் | காட்டும்! |
ஒருவிடையும் | காணாத | கேள்வி | உண்டா! |
ஒவ்வொன்றாய்க் | கேட்டுப்பார் | நிகரே | நீதான்! |
வரும்பொருளாய் | இறைவனத்தில் | ஏற்றம் | சேர்ப்பான்! |
வற்றாத | வளவாழ்வு | அமையும் | காண்பாய்! |
தொட்டால்தான் | செயல்துலங்கும்; | தூர | நின்று |
துதிபாடிப் | பயனில்லை; | இனிப்பு | தன்னை |
எட்டவைத்துப் | பார்த்திருந்தால் | சுவைதான் | உண்டா! |
இப்போதே | எழுவிழிநீ | செயலை | நோக்கு! |
அட்டியில்லை | வெற்றியினை | அடைந்தே | தீர்வாய்! |
அதைத்தடுக்க | எவருண்டு | புதுமை | செய்நீ |
பெட்டியிலே | அடைபட்டுக் | கிடந்தி | டாதே |
புறப்படுநீ | சிறப்புடனே | ஏற்றம் | காண்பாய்! |
மூழ்கினவன் | முத்தெடுப்பான்; | நூல்கள் | தன்னை |
முறையாகப் | பயின்றவன்தான் | வெற்றி | காண்பான் |
ஏழ்மையினைக் | தகர்த்தெறிநீ | ஏற்றம் | கொள்வாய் |
இன்சொல்நற் | பண்புழைப்பு | கொள்வாய் | வெல்வாய் |
ஆள்வதற்கு | ஆற்றல்கொள்; | ஆமை | யாநீ! |
ஐந்தடங்கி | ஒடுங்கிடாதே; | அடிமை | நீக்கு |
தாழ்ந்துழலும் | எண்ணத்தை | அறுத்து | வீசு |
தலைநிமிரு; | எழுகதிராய்; | தயக்கம் | ஏனோ |
கோபுரம்போல் | நீஉயரு; | கொள்கை | மாறாக் |
குணக்குன்றாய் | வாழ்ந்திடுநீ; | பயிர்கள் | வாழ்த்தும் |
காவிரிபோல் | வளங்கூட்டு; | வானம் | தந்த |
கருணைமிகு, | மழையாகு, | எளியர் | ஏழை |
ஆவியுள்ள | வரைமறவா | உதவி | செய்நீ |
அரும்பசிக்கு | உணவளிநீ; | தெய்வம் | வாழ்த்தும் |
தீயவர்கள் | உறவுவிடு; | நல்லோர் | நாடு |
திருவருளும் | அறம்பொருளும் | சிறக்கும் | காண்பாய் |
பகை நொறுக்கிப் போடு
வாடாதே | மனிதா; | உனைத் | தாழ்த்திப் |
வஞ்சகர்க்கு | அஞ்சாதே; | துணிந்து | நில்லு! |
மூடாதே | முயற்சிதனை; | விதையின் | ஓட்டை |
முட்டியுடைத் | திளந்தளிரும் | துளிர்க்கும் | பாரு! |
நாடாது | தோல்வியுனை; | கல்பி | ளந்து |
நாட்டிடுதே | மரம்வேரை | இதனைத் | தேரு! |
ஓடாதே! | உனைப்பழிப்போர் | ஓய்ந்து | போவார்! |
ஓய்வின்றி | நேர்மையுடன் | உழைத்தால் | வெல்வாய் |
பணமிருந்தால் | பத்துப்பேர் | புகழ்வார்; | உன்னைப் |
பாராட்டி | இந்திரன்சந் | திரனென் | பார்கள்! |
பணமில்லா | நிலைகண்டால்; | பார்க்கா | தார்போல் |
பாதைதனை | மாற்றியவர் | மறைந்து | போவார்! |
குணம்நாடிப் | பார்ப்பவர்கள் | எவரும் | இல்லை |
குறைகூறிப் | பழித்திகழப் | பலபே | ருண்டு! |
இனங்கண்டு | முன்னேறு; | உனக்குப் | பின்னால் |
எவரெவரோ | துதிபாடி | வந்து | நிற்பார்! |
அச்சத்தை | விட்டொழிநீ; | மடமை | நீக்கு |
ஆளுமையைப் | பெற்றிடுநீ; | உலகில் | உன்னை |
துச்சமென | இகழ்ந்தவர்கள் | புகழக் | காண்பாய் |
தூய்மை | அறச் | செயல்கள்உனை | உச்சம் |
நிச்சயமாய் | நல்லதுசெய் | நலிந்தோர் | வாழ |
நிலைத்தசெயல் | செய்துபார்; | உலகம் | போற்றும்! |
கொச்சைபட | உன்புகழை | நசுக்கிப் | போட்ட |
கொடியவர்கள் | தலைதாழ்ந்து | வணங்கி | எற்பார்! |
உன்னை | நீநம்பு; | உன்செய | லைநம்பு |
உன்னாற்றல் | வலிமைதனை | உலகே | மெச்சும்! |
தன்னையறி, | துணிந்தியங்கு; | செயலை | நாட்டு! |
தானாக | முன்னேற்றம் | உன்னை | நாடும்! |
பின்னிருந்து | குழிபறிக்கும் | நரிகள் | கூட்டம் |
பிடரிதலை | கால்படவே | ஓடும் | காண்பாய்! |
எண்ணரிய | சாதனைகள் | செய்யத் | தானே |
இவ்வுலகில் | நீபிறந்தாய்; | பழிக்கஞ் | சாதே! |
போர் | நடத்து; | சூழ்ச்சி; | பழி; |
புறமுதுகிட் | டோடப்பகை | நொறுக்கிப் | போடு! |
யாருனக்கு | வழிகாட்டி; | நேர்மை | நீதி |
நியாயம்;உழைப் | பென்றாலோ, | அதுவே | வெல்லும்! |
தேருதலை | நீயுனக்கே | தேற்றிக் | கொள்ளு! |
தேம்பியழு | வார்;பழித்தோர்; | தொலைந்தே | போவார்! |
ஆறுதலைப் | பெறுமனிதா; | ஆறு | தேரு |
அருகிருக்கு | வெற்றி;இதைத் | தடுப்பார் | யாரு! |
அறிவின் வித்து!
வெற்றி | என்பது | உழைப்பின் | வித்து! |
உழைப்பு | என்பதோ | உறுதியின் | வித்து! |
உறுதி | என்பது | தெளிவின் | வித்து! |
தெளிவு | என்பது | அறிவின் | வித்து! |
அறிவு | என்பது | ஆய்வின் | வித்து! |
ஆய்வு | என்பதோ | தேடலின் | வித்து! |
தேடல் | என்பது | தூண்டலின் | வித்து! |
தூண்டல் | என்பதோ | உணர்வின் | வித்து! |
உணர்வு | என்பது | கடவுளின் | ஆக்கம் |
கடவுள் | என்பதோ | கடந்துள் | செல்வது! |
கடப்பது | என்பது | ஐம்புலன் | ஒடுக்கம்! |
ஐம்புலம் | என்பதோ | ஜீவனில் | அடக்கம்! |
ஜீவன் | என்பது | ஆத்மா | தொடக்கம்! |
ஆத்மா | என்பதோ | ஆதிவி | நோதம்! |
ஆதி | என்பது | அனாதி | யானது! |
அனாதி | என்பதோ | பிரபஞ் | சமாகும்! |
பிரபஞ் | சமென்பது | அழிவை | வென்றது! |
அழியா | ஆற்றலோ | சக்தியின் | ஊற்று! |
சக்தி | என்பது | ஜீவனின் | இயக்கம்! |
ஜீவன் | என்பதோ | சிவனாய் | விளங்கும்! |
சிவனே | என்பது | செயல்களின் | துடிப்பு! |
செயல்கள் | என்பதோ | இயக்க | மாகும்! |
இயக்கம் | என்பது | சுழற்றும் | ஆற்றல்! |
சுழற்றல் | என்பதோ | மனத்தின் | வேகம்! |
மனது | என்பது | மந்திர | ஈர்ப்பு! |
மந்திரம் | என்பதோ | மனத்திற | மாகும்! |
மனத்திறம் | என்பது | மாயைத் | தேக்கம்! |
மாயம் | என்பதோ | மயக்கத் | தொடக்கம்! |
மயக்கம் | என்பது | சூன்ய | வெற்றிடம்! |
சூன்யம் | என்பதோ | பேரின் | பம்தரும்! |
பேரின் | பமென்பது | பரமா | னந்தம்! |
பரமா | னந்தமோ | பரம்பொருட் | சோதி! |
சோதி | என்பது | ஆன்ம | சுடரொளி |
ஆன்மா | ஓமெனும் | நமசி | வாய |
சிவாயம் | என்பது | மெய்யைக் | குறிக்கும் |
மெய்யென் | பதுவோ | பொய்யா | லானது |
பொய்என் | பதுவோ | பூஜ்ய | மானது |
பூஜ்ய | மென்பது | ஞான | திறவுகோல் |
ஞான | மென்பது | தன்னை | அறிவது |
தன்னை | அறிவதே | இறைவனை | அறிவது! |
எது உன்னால் முடியாது
புலிவாழும் | காட்டினிலே | மான்கள் | கூடி |
பெற்றுத்தன் | குட்டியுடன் | மகிழ்ந்து | வாழும்! |
எலிகூட | பூனையுள | வீட்டில் | தானே |
ஏராளக் | குட்டியுடன் | பேரன் | பெற்று |
கிலியின்றி | வாழ்கிறது; | பாம்பின் | முன்னே |
கிளைஞருடன் | தவளைகளும் | வாழ்தல் | கண்டோம்! |
வலியனெனும் | வல்லூறு | பறக்கக் | கண்டும் |
வாழ்கிறதே | கோழிக்குஞ்சு | துணிச்ச | லோடு! |
வலியவரைக் | கண்டுடனே | அஞ்சிக் | கெஞ்சி |
வணங்கியடி | வருடுவது | வெட்கக் | கேடு! |
புலியிருக்க; | மான்வாழ்வை; | புரிந்து | தேறு |
பேடிநிலை | நீங்கிவிடும்; | மானம் | மிஞ்சும் |
கிலிபிடித்து | வாழ்வதுவும் | வாழ்வா? | உன்னைக் |
கீழாக | எண்ணாதே; | நிமிர்ந்து | நில்லு! |
எளியவனும் | வலியவனும் | ஒன்று; | சட்டம் |
இப்படித்தான் | சொல்கிறது; | துணையும் | நிற்கும்! |
வாழ்வதென்று | முடிவுசெய்; | துன்பம் | உன்னை |
வாட்டிடினும் | துணிவுகொள்; | அறிவை | நாட்டு |
தாழ்வுன்னைத் | தாக்காது; | தாங்கிக் | காக்கும்! |
சமுதாய | மேம்பாட்டில் | உயர்த்தி | வைக்கும்! |
ஏழ்மைதனை | எண்ணாதே; | உயர்வே | எண்ணு! |
எண்ணம்போல் | நீஉயர்வாய்; | ஏற்றம் | காண்பாய்! |
கோழையென | மனங்குன்றி | தாழ்ந்தா | யானால் |
கோழிகூட | உனைஎதிர்க்கும்; | அறிந்து | வெல்லு! |
ஆழிஅலை | தொடர்ந்தடிக்கும்; | படகி | லேறி |
அன்றாடம் | மீன்பிடிப்போர் | துணிவைப் | பாரு! |
பாளையிலே | வடிகள்ளை | மீட்க | அங்கே |
பனைதென்னை | ஏறிடுவோர் | பாட்டைப் | பாரு! |
தூளியிலே | கைக்குழந்தை | போட்டு | அங்கே |
துண்டுதுண்டாய்க் | கல்லுடைக்கம் | தாயைப் | பாரு! |
கேலியிதைச் | செய்வார்யார்? | யார்க்கும் | அஞ்சும் |
கீழ்நிலையோ | அவர்க்கில்லை; | வெற்றி | நோக்கு! |
நீ | நினைத்தால் | வானம்உன் | கைக்கு |
நினைவாலே | செயலாலே | உயர்தோர் | பல்லோர்! |
தீ | நினைவைத் | தீய்த்துவிடு; | வெற்றி |
திருப்பத்தை | நோக்கிநடை | எட்டிப் | போடு! |
வா | உன்னை | இவ்வுலகு | புரிந்து |
வரவேற்கும்; | வாழ்த்தளிக்கும்; | வழிகள் | நீளும்! |
ஏ | மகனே | உன்னைநீ | எண்ணிப் |
எது | உன்னால் | முடியாது; | காண்பாய் |
கண்திறக்கும் | முன்னாலே | சிலைக்கு | அங்கே |
கடவுள்நிலை | கிட்டாது; | நீயும் | உந்தன் |
கண்திறந்தால் | உலகறிந்தால் | வாழ்வு | கிட்டும்! |
கண்மூடித் | தனத்தைவிடு; | விழித்து | நோக்கு! |
பொன்பொருள் | புகழ்வெற்றி | உன்னைத் | தேடி |
போட்டியிட்டு | வந்துசேரும்; | வளமை | ஓங்கும் |
தன்னம்பிக் | கைகொள்நீ | அஞ்சி | டாதே |
தளராதே | எதிர்கொள்நீ | ஏறு | மேலே! |
முல்லைக்கு தேர் வேண்டாம்
கொடு; | இல்லா | தவர்க்குநீ | கொடு! |
குடும்பத்தை | வாழ்விக்கக் | கொடு! | – |
வடு, | எவரும் | படாதிருக்கக் | கொடு:- |
வடிக்குமுன் | காத்தவரை | வாழ்விக்கக் | கொடு! |
பசித்துயரை | நீக்கிவிடக் | கொடு! | – |
பார்வையிலே | அதையறிந்து | கொடு! | நீயும் |
புசிக்கும் | போ | தும்பிறர்க்குக் | கொடு! |
பூத்திருக்கும் | இறைமனமும் | பூத்திருக்கும் | கொடு! |
பிறவியிலே | கண்ணில்லார் | காலில்லார் | உழைக்கக் |
கையில்லார் | நிலையறிந்து | கருணையொடு | கொடு |
உறவிழந்து | வயதிழந்து | நடைதளர்ந்த | பேர்க்கு |
உன்னாலே | அவர்க்கியன்ற | உதவிகளைக் | கொடு! |
கையில்லா | மயிலுக்குப் | போர்வைதர | வேண்டாம் |
கையாலா | காநிலைபேர் | கண்டறிந்து | கொடு! |
கொடிமுல்லை | படரவொரு | கொம்பின்றி | தேர் |
குடிசையிலே | வறுமையிலே | குமுறுவோர்க்குக் | கொடு! |
படிப்பதற்குப் | பணமின்றி | தவிப்பவர்க்குக் | கொடு! |
பரதேசி | நிலைமாற | துணிவகைகள் | கொடு! |
நொடிப்பொழுதில் | இரத்தம்அவர் | இறக்குமுன் | கொடு! |
நோய்நொடியில் | தவிப்போர்க்கு | அதுநீங்க | கொடு! |
கொடுப்பார்க்குச் | செல்வங்கள் | குறையாது | கொடு! |
கொடுஉனக்கு | இறைவனள்ளிக் | கொடுத்தபொருள் | கொடு! |
கொண்டுவந்த | தேதுஅவன் | கொடுக்காத | போது |
கொண்டுநீ | போவதெங்கே | கொடுத்துவிடு | இங்கே! |
எங்கள் நாடு தமிழ் நாடு
தெங்குகன்னல் | வாழைபலா | சேர்ந்ததெங்கள் | நாடு | |
சீருலாபோல் | காருலாவும் | சிறப்புமிகு | நாடு | |
மங்களஞ்சேர் | மஞ்சளிஞ்சி | மாங்கனிக | ளோடு | |
மணமிகுந்த | சந்தனமும் | அகில்விளையும் | நாடு | |
பொங்குபுனல் | பாயும்ஆறு | புகழ்மிகுந்த | நாடு | |
பொதிகையெனும் | மலைதழுவி | தென்றல்தரும் | நாடு | |
தட்டினாலும் | தங்கமெங்கும் | வெட்டினாலும் | வெள்ளி | |
பிளாட்டினமு | மிரும்புமலு | மினியமுள்ள | நாடு | |
தங்குபுகழ் | தாங்கிநிற்கும் | தனிச்சிறப்பு | நாடு | |
தாவும்அலை | மேவுகடல் | முத்துகொண்ட | நாடு | |
சிங்கமொத்த | வீரமக்கள் | சிறந்திருக்கும் | நாடு | |
சேரசோழ | பாண்டிமன்னர் | ஆண்டிருந்த | நாடு | |
கங்கையோடு | கடாரமீழம் | வெற்றிகொண்ட | நாடு | |
காரிமய | உச்சியிலே | கொடிபொறித்த | நாடு | |
கனகனையும் | விஜயனையும் | கல்சுமக்க | வைத்து | |
கண்ணகிக்குச் | சிலைவடித்த | காட்சிகண்ட | நாடு | |
வாரணங்கள் | போரடிக்க | சோறுடைத்த | நாடு | |
பாரதப்போர் | நடந்தபோதும் | பசியொழித்த | நாடு | |
முத்துமணி | பவளம்ஏலம் | மயில்தோகை | யோடு | |
மிதந்துகடல் | கடந்துதந்தம் | விற்றுவந்த | நாடு | |
எட்டுத்தொகை | பத்துப்பாட் | டுப்பதினெண் | கணக்கும் | |
இயலுமிசை | கூத்துகுறள் | இனிதுயர்ந்த | நாடு | |
கம்பரொட்டக் | கூத்தர்புக | ழேந்தியவ்வை | யோடு | |
கபிலரிளங் | கோவாழ்ந்த | புலவர்மிகு | நாடு | |
மொழிவளர்க்கச் | சங்கமாய்ந்த | மூத்ததமிழ் | நாடு | |
விழித்திருந்து | மொழிகாத்து | விருதுகொண்ட | நாடு | |
உலகமெல்லாம் | செம்மொழியாய் | உயர்ந்ததமிழ் | நாடு | |
உண்டுபல | மதமெனினும் | ஒன்றிவாழும் | நாடு | |
மாரியொத்த | பாரிஓரி | காரிவள்ளல் | நாடு | |
மீறிடாத | மனிதநேயம் | மிகுந்திருக்கும் | நாடு | |
பிச்சையாளர் | தொழுநோயாளி | ஆதரவில் | லாதார் | |
பெருமையுடன் | மகிழ்ந்துவாழ | வழிவகுத்த | நாடு | |
கஞ்சியூற்ற | ஆளிலாத | முதியோரினைத் | தாங்கி | |
காலமெலாம் | உதவித்தொகை | வழங்குகின்ற | நாடு | |
கண்கண்ணாடி | காற்செருப்பு | கருணையில்லம் | தந்து | |
காப்புறுதி | தந்துநோயைத் | தோற்கடித்த | நாடு | |
ஏழைவாழ | குடிசைமாற்றி | வீடுதரும் | நாடு | |
இரந்துஉண்டு | வாழ்வோரிலா | ஏற்றமிகு | நாடு | |
வேட்டிசேலை | துணியணிகள் | ஏழைகளுக் | கீந்து | |
வீட்டுக்கொரு | விளக்கெரிய | வழிவகுத்த | நாடு | |
ஒருரூபாய் | கிலோஅரிசி | உவந்துதரும் | நாடு | |
உணவளித்து | முட்டையுடன் | கல்விதரும் | நாடு | |
கிணற்றுக்கில | வசமின்சாரம் | கிடைக்கச்செயும் | நாடு | |
கேட்காமலே | விவசாயிதன் | கடன்தீர்க்கும் | நாடு | |
நாடில்லாத | நரிக்குறவர் | வீடுபெற்ற | நாடு | |
நாலுவகைப் | படிப்பறிவை | அவர்க்களித்த | நாடு | |
ஏழைகளும் | சிரித்திருக்க | ஏற்றதொண்டு | செய்தே | |
இறைவனையே | குடிசைக்குள் | இருக்கவிட்ட | நாடு | |
இந்தநாடு | “எங்கள்நாடு” | இனியதமிழ் | நாடு | |
ஏற்றமிக்க | நாடுவேறு | இதற்குஇல்லை | ஈடு! |
2011 ஜனவரி 22-23 தேதியில் திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கவிஞர்கள் பேரவை – மற்றும் – தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் இணைந்து ஆய்வுசெய்து தேர்ந்து கவிஞர் அறந்தைத் திருமாறனுக்கு கவிமாமணி விருது வழங்கினார்கள். ஆய்விற்கு எடுத்துக் கொண்ட கவிதை இது…
உனக்கொரு காலம்வரும்
உனக்கொரு | காலம் | உண்டடா | மனிதா |
கவலையை | விட்டுவிடு | –உன்னை | |
இகழ்ந்தவர் | புகழ்ந்திட | வாழ்ந்து | காட்டிடு |
தலையை | நிமிர்த்திவிடு | ||
தாழ்ந்தவன் | உயர்வதும் | உயர்ந்தவன் | தாழ்வதும் |
தலைவிதி | இல்லையடா | – அறிவு | |
தன்னை | வளர்த்திடு; | உழைப்பில் | நிலைத்திடு |
தழைத்திடும் | வாழ்க்கையடா! | ||
விழியைத் | திறந்திடு; | விதியை | மறந்திடு |
விடிந்திடும் | வாழ்க்கையடா | – உனக்குள் | |
உறுதியும் | இருக்குது; | உணர்வும் | இருக்குது |
உயர்த்திடும் | உன்னையடா! | ||
படிப்படி | யாகவே | நீஉயர் | அதுதரும் |
வெற்றித் | திலகமடா | – உன்னைப் | |
பழித்து | நகைத்தவர் | வியந்து | அடங்குவார் |
பகட்டு | உலகமடா! | ||
தூண்டில் | போடு; | கண் | மிதவை |
மீனைப் | பிடித்திடடா | - கொஞ்சம் | |
பாதை | மாறினால் | தேடிய | கோடியும் |
பாழாய்ப் | போகுமடா! | ||
செல்வம் | சேர்ந்ததும் | செருக்கும் | சேர்ந்திடும் |
தூரத் | துரத்திடடா | – அதுஉன் | |
சீரையும் | கெடுக்கும் | பேரையும் | கெடுக்கும் |
சிந்தனை | செய்திடடா! | ||
அடக்கம் | வள்ளுவர் | குறள்நெறி | கூறும் |
அதுதான் | வாழ்க்கையடா | – இதை | |
அறிந்தே | வாழ்ந்திடு; | அறியா | மூடர்கள் |
அழிவார் | உண்மையடா! | ||
பணமும் | குணமும் | பலருக் | குதவனும் |
பசிப்பிணி | போக்கிடடா | – ஏழைகள் | |
பலன்பெற | நலம்பெற | பாங்குடன் | வாழ்ந்திடப் |
பாதை | திறந்திடடா!! | ||
புத்தரே | சுநபி | காந்தி | வள்ளலார் |
போதனை | ஏற்றிடடா | – உனது | |
முத்திரை | உழைப்பின் | அமுத | சுரபியால் |
முடவர்க்கும் | உதவிடடா! |
செம்மை வழி நீளும்
பொறுமையாக | வாழ்ந்துபாரு | போதும் – அதுவே |
பொன்பொருள் | புகழ்தருமெப் | போதும்! |
திறமையோடு | பெருமைகளை | சேர்ப்பாய் – இதைவுன் |
சிந்தனையின் | வித்தாக | ஏற்பாய்! |
அடக்கமது | வாழ்வுயர்த்தும் | சீரு – அன்பு |
ஆட்சி;பள்ளம் | நிறைக்கவரும் | நீரு! |
ஒழுக்கம்தான் | உனையுயர்த்தும் | பாரு – இதை |
உயிரைவிட | உயர்ந்ததென்று | தேறு! |
அடுத்தவர்க்கு | உதவுவது | பாண்மை – நல்ல |
அறச்செயல்கள் | செய்வதுவே | மேன்மை! |
கெடுத்தவர்க்கும் | நன்மைசெய்ய | தாண்மை – கெட்ட |
கீழ்குணத்தார் | உறவறுத்தல் | கேண்மை! |
கல்வியறி | வைப்பெருக்கு | நாளும் – அது |
கற்றிடக்கற் | றிடப்பெருகிச் | சூழும்! |
வளமையோடு | வலிமையுனை | ஆளும் – நல்ல |
வழிநடந்தால் | செம்மைவழி | நீளும்! |
குணமிருந்தால் | மனம் தருமே | மார்க்கம் – உன்னை |
குன்றிலிட்ட | விளக்கைப்போ | லாக்கும்! |
அனைவர்க்கும் | நன்மைசெய்யும் | நோக்கம் – இது |
அடுத்ததலை | முறைக்குன்னைச் | சேர்க்கும்! |
குடி – குடியைக் கெடுக்கும்
சாராயத்தைக் | குடிக்காதேடா | சம்பந்தம் | –அதுஉன் |
சரித்திரத்தை | அழிக்குமடா | சம்பந்தம்! | |
ஓராயிரம் | தடவைசொல்றேன் | சம்பந்தம் | –அதுஏன் |
உனக்குப்புரிய | வில்லையடா | சம்பந்தம்! | |
குடிச்சிப்புட்டு | புலம்புறியே | கோபாலு | –அந்தக் |
குடி&குடியைக் | கெடுக்குமடா | கோபாலு! | |
படிச்சுப்படிச்சுச் | சொல்லுறேனே | கோபாலு | –உனது |
பாதையைநீ | மாத்தலையே | கோபாலு! | |
அழிஞ்சுபோச்சு | குடும்பம்பாரு | ஆனந்தா | -அவுங்க |
அழுதுதவிக்கும் | அவதிபாரு | ஆனந்தா! | |
ஒழிஞ்சுபோன | பலரைப்பாரு | ஆனந்தா | -நீஏன் |
உணர்ந்துபார்க்க | மறுக்குறியே | ஆனந்தா! | |
கண்ணுகெடுது | புத்திகெடுது | கண்ணையா | –அது |
கல்லீரலைக் | குடல்கெடுக்குது | கண்ணையா! | |
பொன்னுபொருள் | புகழ்அழியுது | கண்ணையா | -இதை |
புரிஞ்சுதிருந்தி | வாழ்ந்துபாரு | கண்ணையா! | |
நாலுபேரு | நகைக்கிறாகளே | நல்லையா | –உனக்கு |
நாணம்வெட்கம் | வீரமில்லையா | நல்லையா! | |
காலுபின்னுது | வேட்டிநழுவுது | நல்லையா | –உன்னைக் |
கழுதைகூட | மதிக்கலையே | நல்லையா! | |
குடிச்சவன்தான் | உருளுரானே | குப்பண்ணா | –அவள் |
குடும்பம்தெருவில் | அலையதுபார் | குப்பண்ணா! | |
குடிக்காதநீ | பார்த்தியேயிதை | குப்பண்ணா | -நீயும் |
குடிக்கலாமோ | வெட்கக்கேடு | குப்பண்ணா! | |
காந்திபெரியார் | அண்ணாசொன்னார் | கந்தையா | -நீயும் |
கைதொடாதே | மதுவகையைக் | கந்தையா! | |
வாந்திமயக்கம் | வறுமையிழிவு | கந்தையா | -உனக்கும் |
வராதிருக்கத் | திருந்திக்கடா | கந்தையா! | |
மாடுமனை | தாலிவித்தியே | மன்னாரு | –குடிச்சு |
மானம்மரி | யாதைகெட்டியே | மன்னாரு! | |
கேடுகெட்ட | குடியைவிடுடா | மன்னாரு | –சொன்னா |
கேட்டுக்கடா | திருந்திக்கடா | மன்னாரு! |