கவிஅவைக் கவிஞர்கள்

பொங்குமெழில் கவியரங்கை ஆள வந்த
புகழ்க்கவிஞர் கணக்காயன் கண்ம தியன்
சங்கம்வளர் தமிழ்மார்சல் முருகன் காரைக்
கிழாரோடு அசோக்ராசு தியாக ராசன்
மங்காத தமிழிலக்கு வனாரின் மைந்தர்
மானமிகு திருவள்ளுவர் சென்னை ஆண்ட
தங்குபுகழ் சாகணேசன் ஆண்டவ ரோடு
சவகர்லால் ராஜேந்திரன் டான்ஸ்ரீ குமரன்
டத்தோஸ்ரீ சாமிவேலு செங்குட்டுவன்
இரபியுதீன் அயூப்போடு சேக்அப் துல்லா
டத்தோஆம் நடராஜா அருளின் தந்தை
பேராயர் எஸ்றாசற் குணம்போன் றோர்கள்
இத்தேசம் எத்தேசம் தமிழி ருக்கோ
இவர்களங்கே சிறந்திருப்பர் பசீரலி அப்பாஸ்
உத்தேசம் பலநண்பர் பெயரைச்சொல்லி
உவந்துரைக்க மனமுன்டு நேரம் இல்லை!

களிப்புரை

கவிமாமணி – உனது
கவி “மா” மணி!
அறந்தைத்திருமாறா! நீ என்ன
அன்னைத் தமிழின் ஆணிவேரா!
அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு
வரந்தாங்கி நிற்கிறது!
சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு
ஏற்றம் பாட்டிலுண்டு!
மரபுக் கவிதை – உனக்கு
உறவுக் கவிதையோ!
காவியத் தமிழோ – உன்கவிதை
ஓவியத் தமிழோ!
உன்னை வரவேற்கும் – வருங்கால
சென்னைத் திரையுலகம்!
வாழ்கநீ பல்லாண்டு –
வளமானதமிழ்ச் சொல்லாண்டு!
நிமிர்ந்து
நெஞ்சுயர்த்தி வாழ்த்தும்

கவிஞர். காசி முத்துமாணிக்கம்

Back to Top