செம்மை வழி நீளும்

பொறுமையாகவாழ்ந்துபாருபோதும் – அதுவே
பொன்பொருள்புகழ்தருமெப்போதும்!
திறமையோடுபெருமைகளைசேர்ப்பாய் – இதைவுன்
சிந்தனையின்வித்தாகஏற்பாய்!
அடக்கமதுவாழ்வுயர்த்தும்சீரு – அன்பு
ஆட்சி;பள்ளம்நிறைக்கவரும்நீரு!
ஒழுக்கம்தான்உனையுயர்த்தும்பாரு – இதை
உயிரைவிடஉயர்ந்ததென்றுதேறு!
அடுத்தவர்க்குஉதவுவதுபாண்மை – நல்ல
அறச்செயல்கள்செய்வதுவேமேன்மை!
கெடுத்தவர்க்கும்நன்மைசெய்யதாண்மை – கெட்ட
கீழ்குணத்தார்உறவறுத்தல்கேண்மை!
கல்வியறிவைப்பெருக்குநாளும் – அது
கற்றிடக்கற்றிடப்பெருகிச்சூழும்!
வளமையோடுவலிமையுனைஆளும் – நல்ல
வழிநடந்தால்செம்மைவழிநீளும்!
குணமிருந்தால்மனம் தருமேமார்க்கம் – உன்னை
குன்றிலிட்டவிளக்கைப்போலாக்கும்!
அனைவர்க்கும்நன்மைசெய்யும்நோக்கம் – இது
அடுத்ததலைமுறைக்குன்னைச்சேர்க்கும்!
Back to Top