Skip to content
நரிபுடிச்சோம் | முயல்புடிச்சோம் | காடைபுடிச்சோம் | ஆயாலோ! |
காணாங்கோழி | கூழக்கடா | மான்புடிச்சோம் | ஆயாலோ! |
கொம்புநகம் | பல்லுதோலு | வாலுவிப்போம் | ஆயாலோ! |
வம்புவாது | சூதுபொய்யி | பேசமாட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டம்கூடி | டப்பாதாளம் | ஆட்டம்போடுவோம் | ஆயாலோ! |
குடுத்தகஞ்சி | காசுவாங்கி | கும்புடுவோம் | ஆயாலோ! |
இப்பஎங்க | நெலமைவேறே | இதுதெரிமா | ஆயாலோ! |
பாசிமணிகள் | ஊசிவித்துப் | பணம் | குமிக்கிறோம் |
| | | |
அரசுதந்த | கெட்டிவீட்டுல | அண்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
அங்கேநாலு | வாழைதென்னை | வச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
கரண்டுவௌக்கு | டிவிரேடியோ | குடிநீரோட | ஆயாலோ! |
கட்டித்தந்தார் | பள்ளிக்கூடம் | படிச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
| | | |
பள்ளிப்படிப்பை | நாங்கபடிச்சோம் | பாட்டன்போல | இல்லீங்க |
பக்குவமா | உலகத்தோட | ஒட்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
வேட்டிகட்டி | சட்டைமாட்டி | வெளியேவாரோம் | ஆயாலோ! |
வெட்டிப்புட்டோம் | குடுமியைத்தான் | குளிக்கிறொமை | ஆயாலோ! |
| | | |
கல்யாணவீடு | போறதில்லை | எலைஎடுக்கலே | ஆயாலோ! |
எங்கவிட்டுலே | கல்யாணத்திலே | எலைச்சாப்பாடு | ஆயாலோ! |
சாமிசாமி | நாங்கசொன்னோம் | சிச்சியின்னிங்க | ஆயாலோ! |
சமத்துவமா | மதிக்கயிப்போ | ஒசந்துபுட்டோம் | ஆயாலோ! |
| | | |
கூட்டுறவுலே | அரிசிபருப்பு | கொடுக்கிறாக | ஆயாலோ! |
ஓட்டுப்போடும் | உரிமைகூட | இருக்குதுங்க | ஆயாலோ! |
காட்டுநரிக் | குறவர்இப்போ | நெறிக்குறவரா | ஆயிட்டோம்! |
கருணையோட | அரசாங்கந்தான் | காத்துவருது | ஆயாலோ! |
| | | |
காடுவேலை | கழனிவேலை | களத்துமேட்டுலே | ஆயாலோ! |
கருத்தைமாத்தி | உழைக்கிறதைக் | காணவாங்க | ஆயாலோ! |
கூத்தாடிவயல் | அறந்தாங்கியிலே | திருச்சிதேவ | ராயநேரி |
குடியிருக்குறோம் | நாற்பதாண்டா | பிழைத்திருக்கிறோம் | ஆயாலோ! |
Back to Top