Skip to content
ஆயிரமா | யிரம்தேனீ | காலை | மாலை |
அலைந்தலைந்து | பூவமர்ந்து | எடுத்த | தேனை |
ஆயிரமா | யிரம்அறைசேர் | கூட்டுக் | குள்ளே |
அன்றாடம் | சிறுசிறுக | சேர்த்து | வைக்கும்! |
ஏழைசிறு | உண்டியலில் | காசைப் | போட்டு |
எப்போது | நிறையுமெனக் | காத்தி | ருப்பான்! |
ஏழையிவன் | உண்டியலைத் | திருடன் | கொண்டால் |
என்னாகும்; | தேனியையும் | இணைத்துப் | பாரீர்! |
தேன்கூட்டைக் | கட்டியதற் | கார்தான் | தந்தார்! |
தேனெடுத்து | யாரதற்குச் | சேர்த்துத் | தந்தார்! |
ஊனுறக்க | மின்றிமலர் | மலர்க்குத் | தாவி |
ஓய்வின்றி | உழைத்ததுவும் | தேனீ | யன்றோ! |
வான்மழையில் | கடும்வெயிலில் | வறட்டுக் | காற்றில் |
வகைதொகையாய்க் | காத்திருந்த | தெவரோ | சொல்வீர்! |
மானமொடு | எவருதவி | தயவும் | இன்றி |
மாண்புடனே | வாழுவதும் | தேனீ | யன்றோ! |
மாடெருமை | ஆடுபசு | குருவி | கோழி |
மனிதனதற் | குணவளித்துக் | காப்ப | துண்டு |
பாடதற்கு | மனிதனவன் | படுவதாலே | |
பல | வகையில் | பங்கெடுக்கும் | உரிமை |
கேடெவர்க்கும் | எண்ணாமல் | அடிமை | யின்றி |
கிடைத்ததேன் | உண்டுவாழ் | கின்ற | தேனீ |
கூடழித்தான்; | தேனெடுத்தான்; | மனிதன் | உண்டான் |
கொள்ளையிது! | பெருங்கொடுமை!! | மாற்று | காண்பீர்! |
Back to Top