Skip to content
கதிரும் | கதிரால் | கடலைப் | புணர்ந்திட |
கார்முகில் | பிறந்ததுவே | மழைதரும் | |
கார்முகில் | எழுந்ததுவே! | | |
| | | |
கதிரின் | ஒளியைத் | தடுத்திடும் | குடையாய் |
மேகம் | முகிழ்ந்ததுவே | மண்மேல் | |
மேகம் | பறந்ததுவே! | | |
| | | |
ஓடிடும் | மேகமும் | மேகமும் | மோதிட |
ஓஙகி | ஒலித்ததுவே | இடியொலி | |
வாங்கி | ஒலித்ததுவே! | | |
| | | |
கூடிடும் | தோகை | மயில்கள் | இணைந்துமே |
ஆடிக் | களித்தனவே | இன்பம் | |
கூடிக் | களித்தனவே! | | |
| | | |
வானம் | பொழிந்தது | பூமிகு | ளிர்ந்தது |
வயல்கள் | நிரம்பினவே | ஏரிகள் | |
வயிறு | நிரம்பினவே! | | |
| | | |
தானமும் | தவமும் | தர்மம் | தழைத்திட |
வானம் | பொழிந்ததுவே | வெம்மை | |
வஞ்சம் | அழிந்ததுவே! | | |
| | | |
காளைகள் | பூட்டினர் | கழனிகள் | ஓட்டினர் |
உழவர் | நடந்தனரே | உழைக்கும் | |
உழவர் | நடந்தனரே! | | |
| | | |
கலயங் | களேந்தினர் | கழனியில் | கன்னியர் |
கஞ்சி | கொணர்ந்தபடி | புல்வெளிப் | |
பஞ்சில் | நடந்தபடி! | | |
| | | |
ஆடியும் | பாடியும் | ஓடியும் | உழைத்தனர் |
அன்பில் | நனைந்தபடி | தமிழரின் | |
பண்பில் | நிலைத்தபடி! | | |
| | | |
ஊற்றையும் | சேற்றையும் | நாற்றையும் | இணைத்தே |
பயிரை | வளர்த்தனரே | நாட்டின் | |
உயிரை | வளர்த்தனரே! | | |
| | | |
பாடிடும் | பூங்குயில் | இன்னிசை | தென்றலில் |
ஆடி | வளர்ந்ததுவே | பயிரும் | |
நாடி | வளர்ந்ததுவே! | | |
| | | |
புதையல் | போலவே | கதிரின் | கருவரப் |
பொதிகள் | கட்டினவே | பயிரின் | |
வயிறும் | முட்டினவே! | | |
| | | |
உதய | மாகும்ஒளி | உலகில் | நீள்வபோல் |
கதிரும் | நீண்டதுவே | அங்கே | |
கருணை | ஆண்டதுவே. | | |
| | | |
ஞானம | நிறைந்தவர் | தானடங் | கினர்போல் |
நாணி | இருந்ததுவே | கதிர்தலை | |
கோணி | இருந்ததுவே! | | |
| | | |
கூனல் | கிழவரின் | வானவில் | முதுகென |
குலைகள் | வளைந்தனவே | நெல்மணி | |
ஒலிகள் | எழுந்தனவே! | | |
| | | |
காணி | கொழித்தது | வீடு | நிறைந்தது |
“பூ”மகள் | தந்தனளே | தந்தனளே | பொன்நிகர் |
நென்மணி | தந்தனளே1 | | |
| | | |
வயல்கள் | விளைந்தன | விளைந்தன | வயல்கள் |
தைமகள் | தந்தனளே | தைதையென | |
தைமகள் | வந்தனளே1 | | |
| | | |
வறுமை | ஒழிந்தது | செழுமை | பிறந்தது |
வாழ்வு | மலர்ந்ததுவே | விவசாயி | |
தாழ்வு | மறைந்ததுவே! | | |
| | | |
தையும் | பிறந்தது | வழியும் | பிறந்தது |
உய்யும் | வழிகாண்போம் | உலகோர் | |
உயரும் | வழிகாண்போம்! | | |
| | | |
பொங்கலோ | பொங்கல் | பொழிக | என்றுமே |
பொங்கலும் | பொங்கட்டுமே | எங்குமே | |
மங்களம் | தங்கட்டுமே! | | |
Back to Top