Skip to content
தாமரை | கூட | தவமிருக்கும் | – அவள் |
தங்க | முகத்தைப் | பார்ப்பதற்கு! | |
ரோஜா | மலரும் | தவமிருக்கும் | – அவள் |
மேனியின் | நிறத்தைப் | பார்ப்பதற்கு! | |
| | | |
முத்துகள் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
முல்லைப் | பல்லைப் | பார்ப்பதற்கு! | |
கத்தும் | குயிலும் | காத்துக்கிடக்கும் | – அவள் |
கனியினும் | இனிதாம் | குரல்கேட்க! | |
| | | |
மானும் | மயிலும் | தவமிருக்கும் | – அவள் |
மையல் | சாயல் | கணிப்பதற்கு! | |
வானவில் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
வளைந்த | புருவம் | ரசிப்பதற்கு! | |
| | | |
கடலும் | வானும் | தவமிருக்கும் | – அவள் |
கண்ணில் | நீலம் | பார்ப்பதற்கு! | |
அம்பும் | மீனும் | தவமிருக்கும் | – அவள் |
அழகிய | கண்களைப் | பார்ப்பதற்கு! | |
| | | |
நிலவு | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
நெற்றியில் | பிறையைக் | காண்பதற்கு! | |
உலவும் | தென்றலும் | தவமிருக்கும் | – அவள் |
உடலை | மெதுவாய்த் | தொடுவதற்கு! | |
| | | |
வலம்வரும் | மேகமும் | காத்திருக்கும் | – அவள் |
வளர்கருங் | கூந்தலைப் | பார்ப்பதற்கு! | |
மலையும் | குன்றும் | தவமிருக்கும் | – அவள் |
பருவ | அழகை | ரசிப்பதற்கு! | |
| | | |
நான்மறை | முனிவரும் | தவமிருப்பார் | – அவள் |
நடையுடை | பாவனை | ரசிப்பதற்கு! | |
சித்தரும் | பித்தராய் | மாறிடுவார் | – அவள் |
சிறுநகை | கடைவிழி | தாக்குதலால்! | |
| | | |
பிரமன் | இந்திரன் | தவமிருப்பார் | – அவள் |
பேரழ | கிளமையை | ரசிப்பதற்கு! | |
செத்தவர் | கூட | பிழைத்தெழுவார் | – அவள் |
சிற்றடி | சதங்கை | ஓசையிலே! | |
| | | |
அம்பிகா | பதிகூட | இன்றிருந்தால் | – அந்த |
அமரா | வதிகதி | அதோகதிதான்! | |
மஜ்னு | கூட | இன்றிருந்தால் | – அந்த |
லைலா | கதியும் | எக்கதியோ! | |
| | | |
அக்பர் | மகன்சலீம் | இவளைக்கண்டால் | – அந்த |
அனார்க்கலி | நிலைமை | யாரறிவார்! | |
தேவதாஸ் | கூட | பார்வதிமறப்பான் | இந்தத் |
தேவதை | அருகே | இருந்துவிட்டால்! | |
Back to Top