Skip to content
மன்னவனே! | என்னுளத்தைக் | கொள்ளை | கொண்ட |
மாதவனே! | காமனென | வந்த | தேவே! |
சின்னவளைப் | பார்வைவலை | தன்னால் | சுற்றி |
சிறைபடுத்தி | உன்வலையில் | போட்ட | கண்ணா! |
பெண்னெனக்குப் | பெருநிதியாய்க் | கிடைத்த | தென்னா! |
பேதையெனைச் | சீதையாக்க | வந்த | ராமா! |
உன்னைநினைத் | துருகுவது | எந்தன் | வேலை |
ஓடிவரக் | கூடாதா | இந்த | வேளை! |
வரும்தென்றல் | காற்றுனது | பெருமை | சொல்லும் |
வளர்பச்சை | தத்தையதும் | அதையே | சொல்லும் |
பெரும் | ஒளிசேர் | கதிருமுந்தன் | புகழைச் |
பிறைநிலவும் | மணமலரும் | அதையே | சொல்லும் |
கரைபுரளும் | காட்டாற்று | வெள்ளம் | போலே |
காரிகையென் | காதலுணர் | வெல்லை | தாண்டி |
வருவதினை | அறியாயோ | வாவா | கண்ணா! |
வாழ்வெனக்குத் | தரவேண்டும் | மன்னா | வாவா! |
நீலநிற | கண்பார்த்துப் | பூத்துப் | போச்சு! |
நின்றுஎதிர் | பார்த்துக்கால் | ஓய்ந்து | போச்சு! |
மீளமுடி | யாதமனம் | தவித்துப் | போச்சு! |
மெல்லியலென் | மேனிதுரும் | பாகிப் | போச்சு! |
வாழநினைத் | திருந்துமனம் | ஏங்கிப் | போச்சு! |
வரவிலையேல் | நின்றுவிடும் | உடலில் | மூச்சு! |
பாழ்மனத்தைத் | தாங்கவுடன் | வந்தா | லாச்சு! |
பதைத்திறந்து | உயிர்போனால் | உனக்கே | ஆச்சு! |
Back to Top