அமுத கலசம்

மூச்சையடக்கிநான்மூழ்கிஎடுக்கவா
முத்துக் கோர்க்கவா கண்ணே!
ஆழக் கடலிலே அமுத கலசத்தின்
அழகை ருசிக்கவா பெண்ணே!
காற்றுத் திசையிலே கடலின் அலையிலே
கலத்தைச் செலுத்தவா கண்ணே!
சேற்றுத் தாமரை சேர்சுரும் பாகதேன்
ஊற்றில் களிக்கவா பெண்ணே!
மந்த மாலையில் வந்த தென்றலில்
சொந்தம் கொண்டிடும் சுகமே!
சிந்து பூந்தமிழ் தந்த சந்தமே
விந்தை பூத்தபே ரழகே!
மோடி இல்லைநீ கோடி மலர்கூடி
நாடி உருவான நங்கை!
கோடி சுகராகம் பாடி மயக்கும் நீ
தேடி வளஞ்சேர்க்கும் கங்கை!
தங்க நிலாவின் தங்கை நிலாநீ
தரையில் மலர்ந்தபெண் மாயம்!
எங்கு தழுவினும்அங்கம் சுகம்தரும்
அமுத கலசநிறை காயம்!
தொடவும் தொடருமே தொடர படருமே
விடவும் சுடுமே மோகம்!
தொடவும் முடியலே விடவும் முடியலே
அடடா மீறுதே தாகம்!
Back to Top