Skip to content
அத்தானைத் | தேடிவந்த | மானே | -ஒன்றாய் |
ஆலாலம் | பாடலாம்வா | தேனே | |
முத்தாரப் | பல்வரிசை | காட்டி | -என்னை |
பித்தாக்கி | னாய்காதல் | ஊட்டி | |
| | | |
| | | |
தடையாரு | விடைகூறு | தமிழ்தாங்கி | வருவேன் |
இடையூறு | இனியேது | வா | -இளங் |
கொடிமுல்லை | இடைநெளிய | படைவெல்லும் | விழியோடு |
விடிவெள்ளி | யொளிகூட்டி | வா | -என்னுடன் |
விளையாட | உறவாட | வா | |
| | | |
| | | |
மாஞ்சோலை | குயில்கூவ | மயில்கூடி | நடமாட |
பூஞ்சோலை | இளங்காற்றே | வா | -அமுத |
சாந்தத்தை | முகத்திலே | காந்தத்தைக் | கண்ணிலே |
சேர்ந்திணைத்த | சிலையே நீ | வா | – எழில் |
சித்திரப் | புதையலே | வா | |
| | | |
| | | |
இருகனியில் | முக்கனியின் | சுவைகூட்டித் | தருமழகே |
இன்பத்தேன் | சுவையூற்றே | வா | -அரும் |
திருக்குறளின் | பொருளாக | கவிகம்பன் | பாட்டாக |
சேர்ந்தசெந் | தமிழே நீ | வா | -என்னைச் |
சேர்ந்தென்றும் | துணையிருக்க | வா. | |
Back to Top