Skip to content
| | | |
காதல்வேகம் | கட்டுக்காவல் | மீறச்செய்யுது: | ஆசை |
கனிவுகொண்டு | இனிமைகாணத் | துடித்து | நிற்குது: |
ஈதல் | என்ற | தத்துவமே | இங்குவிளைந்தது! |
இறைவனாகி | அருள்சுரந்து | வளரச்செய்யுது! | |
மாலைவேளை | வந்ததுமே | மயக்கம்சேருது! | &இளமை |
மானைப்போல | துள்ளியாடி | இன்பம்தேடுது! | |
பாலைத்தேனை | சுவைகெடுத்து | நிலவுஇனிக்குது: | உணர்ச்சி |
பாட்டுத்தாளம் | பூட்டுச்சாவி | யாகத்துடிக்குது. | |
ஊரடங்கும் | வேளைகூட | விழித்திருக்குது: | கலப்பு |
உறவுக்காக | உலகத்தையே | இழுக்கத்துணியுது! | |
ஈரநெஞ்சில் | இளமைவேகம் | மின்னலாகுது! | தடுக்க |
எவரினாலும் | முடிவதில்லை | எல்லைக்காணுது! | |
கலந்துவிட்ட | உறவிலங்கு | அமைதிகாணுது! | வாய்கள் |
கதவடைத்த | இதயத்தாலே | பேச்சை | மறக்குது! |
எழுச்சிகொண்ட | உணர்ச்சியங்கு | உறைந்துவிட்டது! | காதல் |
இன்பமென்ற | கடலின்எல்லை | அலைகள் | பாடுது! |
Back to Top