சித்தாடை | கட்டிவந்த | சிட்டு | – அவள் |
சீனாவிலேயே | நெய்துவந்த | பட்டு! | |
வித்தாரம் | காட்டுகிற | மொட்டு | -அவள் |
மோகினிக்குத் | தங்கை; | தேன் வட்டு! | |
கட்டான | சிலையொத்த | மேனி | – அவள் |
காமனுக்கு | ஊற்றுதரும் | கேணி! | |
சுட்டாலும் | சுடர்வீசும் | சங்கம் | -வளர் |
ஜோதிவடி | வானதிவள் | அங்கம்! | |
துள்ளுவதில் | இவள்கண்ணோ | மீனு | -தூரத் |
தோற்றத்தில் | இவள்சாயல் | மானு! | |
சொல்வதென்ன | இவள்முகமோ | பானு | -வாய் |
சொல்வடித்தால் | கள்வடியும் | தேனு! | |
கண்ணிரண்டும் | கண்டவரைக் | கட்டும் | -அது |
காரிகையின் | பூரிப்பினால் | கிட்டும்! | |
எண்ணிரண்டு | வயதினையே | எட்டும் | -அவள் |
எழிற்கோலம் | முனிவரையும் | தட்டும்! |