Skip to content
| |
| |
மேகமே | “வா” என் |
வேதனை | கேளு! |
மோகமோ | “தீ” ப்போல் |
மூள்வதைப் | பாரு! |
தாகமோ | மீறுது! |
தனிமை | தகிக்கிது! |
சோகமே | சூழுது! |
சொல்அவ | ரிடத்தில்! |
| |
பொங்குது | ஆசை! |
புழுங்குது | உள்ளம்! |
திங்குது | வேட்கை! |
திகைக்குது | மனது! |
எங்கிருப் | பாரோ |
என்னுயிர் | அவரிடம்! |
தங்கிடத் | தாங்கிடத் |
தயக்கமேன் | வரச்சொல்! |
| |
பறந்து | திரிகிறாய்! |
பலஊர் | அலைகிறாய்! |
மறந்தி | டாதே |
மதிதவழ் | முகிலே! |
பிறந்தேன் | அவர்க்கென |
பிரிய | முடியுமோ! |
இறந்து | படுமுன் |
என்னிடம் | வரச்சொல்! |
| |
தாகமோ | விரகமோ! |
தாக்கிடும் | புயலோ! |
வேகமோ | நாகமோ! |
வில்விடு | வினையோ! |
தேகமும் | எரியுது! |
ஏகமும் | எரியுது! |
நோகவோ | சாகவோ! |
நிம்மதி | தரச்சொல்! |
| |
கண்டேன் | அவரை! |
உண்டேன் | அழகை! |
கொண்டேன் | மையல்! |
குலநலன் | இழந்தேன்! |
பண்டுநாள்; | சிறுமிநான் |
பழகிய | பாங்கினை |
எண்ணிப் | பார்த்து |
என்னிடம் | வரச்சொல்! |
| |
காவியம் | படைத்திட |
களிநடம் | பூத்திட |
மேவிய | உணர்வால் |
மெலிந்தேன் | உடலும்! |
ஓவிய | மாயென் |
உளம் | ஒளிர்பவரை! |
ஆவிபோய் | சாகுமுன் |
மேகமே | வரச்சொல்! |
| |
தூவிய | மலர்விரி |
துயில்கொளு | மஞ்சம் |
தேவியென் | உடல்பட |
சேர்வது | எந்நாள்? |
நாவினில் | இன்சொல் |
நவிலு | மேகமே! |
பூவினில் | தேன்பெற |
புசித்திட | வரச்சொல்! |
| |
கண்” அவர் | எனக்கவர்! |
காத்திட | வரச்சொல்! |
பெண்” உயிர் | அவரிடம் |
பேணிட | வரச்சொல் |
மென்மை | மேனியை |
மேவிட | வரச்சொல்! |
தண்” குளிர் | மேகமே |
தாங்கேன் | தூதுபோ! |
Back to Top