Skip to content
அவன்:- | செக்கச் | சிவந்த | நிற | மிருக்கு! | |
| சிரிப்பில் | ஆயிரம் | கதை | இருக்கு! | |
| முக்கனிச் | சாறாய்ச் | பேச்சி | ருக்கு! | |
| முழுநில | வாக | முகமி | ருக்கு! | |
| | | | | |
அவள்:- | சிங்கம் | தந்தது | நடை | யழகு! | |
| செந்தமிழ் | தந்தது | சொல்ல | ழகு! | |
| தங்கம் | தந்தது | குணத்த | ழகு! | |
| தந்தம் | தந்தது | உடல | ழகு! | |
| | | | | |
அவன்:- | மயிலும் | தோற்குமுன் | ஆட்டத் | திலே! | |
| மானும் | தோற்குமுன் | சாய | லிலே! | |
| குயிலும் | தோற்குமுன் | குரலி | னிலே! | |
| குங்குமம் | தோற்குமுன் | உதட்டி | னிலே! | |
| | | | | |
அவள்:- | படையும் | தோற்குமுன் | நடையி | னிலே! | |
| பழமை | தோற்குமுன் | உடையி | னிலே! | |
| விடிந்தே | தெரியும் | திறமை | யெலாம்! | |
| விடையினைக் | கூறும் | இளமை | யெலாம்! | |
| | | | | |
அவன்:- | காதல் | வந்தால் | அன்பு | வரும்! | |
| அன்பு | வந்தால் | ஆசை | வரும்! | |
| ஆசை | வந்தால் | பாசம் | வரும்! | |
| பாசம் | வந்தால் | பழக | வரும்! | |
| | | | | |
அவள்:- | எட்ட | இருந்தால் | மோகம் | வரும்! | |
| இணைபிரிந் | தாலோ | தாகம் | வரும்! | |
| கிட்ட | இருந்தால் | உறவு | வரும்! | |
| கிடைத்திட | அரிய | இன்பம் | வரும்! | |
Back to Top