| மா | தந்தது | கன்ன | மல்லவோ! |
| மதி | தந்தது | முக | மல்லவோ! |
| பூ | தந்தது | நிற | மல்லவோ! |
| புதுமை | தந்தது | இளமை | யல்லவோ! |
| மின்னல் | தந்தது | பார்வை | யல்லவோ! |
| மேகம் | தந்தது | கூந்த | லல்லவோ! |
| கன்னல் | தந்தது | பேச்சு | அல்லவோ! |
| கருணை | தந்தது | இறைவ | னல்லவோ! |
| உதடு | தந்தது | ஊர்வசி | யல்லோ |
| தனம் | தந்தது | மேனகை | யல்லோ |
| நகை | தந்தது | ரம்பை | யல்லவோ |
| நளினம் | தந்தது | திலோத்தமை | யல்லோ |
| நீலம் | தந்தது | கண்க | ளல்லவோ! |
| நெருப்பு | தந்தது | கற்பு | அல்லவோ! |
| ஆசை | தந்தது | உறவு | அல்லவோ! |
| அன்பு | தந்தது | பாச | மல்லவோ! |
| அச்சம் | தந்தது | அடக்க | மல்லவோ! |
| நாணம் | தந்தது | பெண்மை | யல்லவோ! |
| மடம் | தந்தது | மரபு | அல்லவோ! |
| பயிர்ப்பு | தந்தது | பண்பு | அல்லவோ! |
