Skip to content
| கதிரும் | கதிரால் | கடலைப் | புணர்ந்திட |
| கார்முகில் | பிறந்ததுவே | மழைதரும் | |
| கார்முகில் | எழுந்ததுவே! | | |
| | | |
| கதிரின் | ஒளியைத் | தடுத்திடும் | குடையாய் |
| மேகம் | முகிழ்ந்ததுவே | மண்மேல் | |
| மேகம் | பறந்ததுவே! | | |
| | | |
| ஓடிடும் | மேகமும் | மேகமும் | மோதிட |
| ஓஙகி | ஒலித்ததுவே | இடியொலி | |
| வாங்கி | ஒலித்ததுவே! | | |
| | | |
| கூடிடும் | தோகை | மயில்கள் | இணைந்துமே |
| ஆடிக் | களித்தனவே | இன்பம் | |
| கூடிக் | களித்தனவே! | | |
| | | |
| வானம் | பொழிந்தது | பூமிகு | ளிர்ந்தது |
| வயல்கள் | நிரம்பினவே | ஏரிகள் | |
| வயிறு | நிரம்பினவே! | | |
| | | |
| தானமும் | தவமும் | தர்மம் | தழைத்திட |
| வானம் | பொழிந்ததுவே | வெம்மை | |
| வஞ்சம் | அழிந்ததுவே! | | |
| | | |
| காளைகள் | பூட்டினர் | கழனிகள் | ஓட்டினர் |
| உழவர் | நடந்தனரே | உழைக்கும் | |
| உழவர் | நடந்தனரே! | | |
| | | |
| கலயங் | களேந்தினர் | கழனியில் | கன்னியர் |
| கஞ்சி | கொணர்ந்தபடி | புல்வெளிப் | |
| பஞ்சில் | நடந்தபடி! | | |
| | | |
| ஆடியும் | பாடியும் | ஓடியும் | உழைத்தனர் |
| அன்பில் | நனைந்தபடி | தமிழரின் | |
| பண்பில் | நிலைத்தபடி! | | |
| | | |
| ஊற்றையும் | சேற்றையும் | நாற்றையும் | இணைத்தே |
| பயிரை | வளர்த்தனரே | நாட்டின் | |
| உயிரை | வளர்த்தனரே! | | |
| | | |
| பாடிடும் | பூங்குயில் | இன்னிசை | தென்றலில் |
| ஆடி | வளர்ந்ததுவே | பயிரும் | |
| நாடி | வளர்ந்ததுவே! | | |
| | | |
| புதையல் | போலவே | கதிரின் | கருவரப் |
| பொதிகள் | கட்டினவே | பயிரின் | |
| வயிறும் | முட்டினவே! | | |
| | | |
| உதய | மாகும்ஒளி | உலகில் | நீள்வபோல் |
| கதிரும் | நீண்டதுவே | அங்கே | |
| கருணை | ஆண்டதுவே. | | |
| | | |
| ஞானம | நிறைந்தவர் | தானடங் | கினர்போல் |
| நாணி | இருந்ததுவே | கதிர்தலை | |
| கோணி | இருந்ததுவே! | | |
| | | |
| கூனல் | கிழவரின் | வானவில் | முதுகென |
| குலைகள் | வளைந்தனவே | நெல்மணி | |
| ஒலிகள் | எழுந்தனவே! | | |
| | | |
| காணி | கொழித்தது | வீடு | நிறைந்தது |
| “பூ”மகள் | தந்தனளே | தந்தனளே | பொன்நிகர் |
| நென்மணி | தந்தனளே1 | | |
| | | |
| வயல்கள் | விளைந்தன | விளைந்தன | வயல்கள் |
| தைமகள் | தந்தனளே | தைதையென | |
| தைமகள் | வந்தனளே1 | | |
| | | |
| வறுமை | ஒழிந்தது | செழுமை | பிறந்தது |
| வாழ்வு | மலர்ந்ததுவே | விவசாயி | |
| தாழ்வு | மறைந்ததுவே! | | |
| | | |
| தையும் | பிறந்தது | வழியும் | பிறந்தது |
| உய்யும் | வழிகாண்போம் | உலகோர் | |
| உயரும் | வழிகாண்போம்! | | |
| | | |
| பொங்கலோ | பொங்கல் | பொழிக | என்றுமே |
| பொங்கலும் | பொங்கட்டுமே | எங்குமே | |
| மங்களம் | தங்கட்டுமே! | | |
Back to Top