Skip to content
| உறவாட | வாகண்ணா | இரவோடும் | முன்னாலே |
| ஒருகோடி | இன்பம் | இங்கே! | |
| உறங்காமல் | விரகமொடு | உனக்காகக் | காத்திருப்பேன் |
| வரவேண்டும் | வாவா | கண்ணா! | |
| தரவேண்டும் | நீஇன்பம் | பெறவேண்டும் | நானதனை |
| வரம்,வேண்டிக் | கேட்கிறேன் | கண்ணா! | |
| பொறுப்பேனோ | மனமில்லை | மறுத்துநீ | போவாயோ |
| வெறுத்துயிரை | விடுவேன் | கண்ணா! | |
| கண்ணுக்குத் | தெரியாத | இமையாக | நீயிருப்பாய் |
| காத்திருப்பேன் | வாவா | கண்ணா! | |
| கருமைநிற | மானாலும் | காரிருளில் | நானறிவேன் |
| கண்மறைந்து | ஏய்க்காதே | கண்ணா! | |
| தென்றலெந்தன் | தோள்தொடவே | உனையெண்ணி | நான்மலர்ந்தேன் |
| திண்டாட | விடலாமா | கண்ணா! | |
| பெண்பாவம் | பொல்லாது | என்னைநீ | கொல்லாதே |
| பொறுமையெனக் | கிலையே | கண்ணா! | |
Back to Top