Skip to content
| பூவாடை | எனைமயக்கத் | திரும்பிப் | பார்த்தேன் |
| பொன்னோடை | எழில்மேனி | பொலிவு | கூட்டும் |
| பாவாடை | தாவணியில் | பருவ | மங்கை |
| பார்வையிலே | சுருக்கிட்டு | எனையி | ழுத்தாள்! |
| மாவாட்டும் | கற்குழவி | யாகி | யெந்தன் |
| மனஞ்சுழல | உணர்வுந்த | ஆர்வத் | தாலே |
| நாவாட | உளந்துணிந்தேன்; | அவளோ | மெல்ல |
| நடைபெயர்ந்தாள்; | நான்தொடர்ந்தேன்; | கடலோ | பக்கம் |
| | | |
| பார்வையிலே | எனையிழந்தேன்; | கன்ன | லாளின் |
| பசப்பினிலே | நினைவிழந்தேன்; | கொவ்வைச் | செந்தேன் |
| கோர்வையிதழ்ச் | சிவப்பினிலே | செயலி | ழந்தேன் |
| குலைக்கனியாம் | கன்னத்தை | மார்பைக் | கண்டு |
| ஊர் | வெளியைச் | சூழ்நிலையை | மறந்தே |
| உளறுமொழிக் | கிறுக்கனைப்போல் | புலம்ப | லானேன் |
| கூர்விழியாள் | கடற்கரையே | அடைந்த | போது |
| குமுறுமுணர் | வோடங்க | நானும் | சேர்ந்தேன். |
| | | |
| நான்பார்த்தேன்; | மான்பார்த்துத் | திரும்பிக் | கொண்டாள் |
| நான்பார்க்காப் | பாவணையில் | திரும்பும் | போது |
| மான்பார்த்தாள்; | நேர்க்கோட்டில் | விழிகள் | சேர |
| மணிபார்த்தேன்; | இரவெட்டு; | நிலவோ | நல்ல |
| தேன்வார்த்து | ஒளி | கொட்டும்; | அலைகள் |
| திசையெங்கும் | இன்பமோ | இன்பம் | என்று |
| தான் | ஆர்த்து | காதலர்கள் | இளமை |
| தணித்திருந்தார்; | நாங்களங்கே | தனித்தி | ருந்தோம் |
| | | |
| முன்னலையைப் | பின்னலைகள | வாங்கிக் | கொஞ்சி |
| முத்தமிடும் | காட்சியினை | எங்கள் | கண்கள் |
| கன்னலினை | உண்பதுபோல் | சுவைத்துப் | பார்த்துக் |
| கருத்தினைந்த | போதங்கே | மேகம் | ஒன்று |
| தண்ணொளியின் | நிலவணைத்துத் | தழுவக் | கண்டு |
| தளிருடலை | நான்தழுவத் | துடித்து | நின்றேன் |
| மின்னொளிக்கண் | மெல்லிடையாள் | நெருங்க; | நாங்கள் |
| மோகமெனும் | காமரசக் | கடலில் | வீழ்ந்தோம்! |
Back to Top