
| கவிமாமணி – உனது |
| கவி “மா” மணி! |
| அறந்தைத்திருமாறா! நீ என்ன |
| அன்னைத் தமிழின் ஆணிவேரா! |
| அறந்தாங்கி நிற்கிறாய் – உன்பாட்டு |
| வரந்தாங்கி நிற்கிறது! |
| சீற்றம் ஏட்டிலுண்டு – தமிழுக்கு |
| ஏற்றம் பாட்டிலுண்டு! |
| மரபுக் கவிதை – உனக்கு |
| உறவுக் கவிதையோ! |
| காவியத் தமிழோ – உன்கவிதை |
| ஓவியத் தமிழோ! |
| உன்னை வரவேற்கும் – வருங்கால |
| சென்னைத் திரையுலகம்! |
| வாழ்கநீ பல்லாண்டு – |
| வளமானதமிழ்ச் சொல்லாண்டு! |
| நிமிர்ந்து |
| நெஞ்சுயர்த்தி வாழ்த்தும் |
கவிஞர். காசி முத்துமாணிக்கம்






