Skip to content
| உனக்கொரு | காலம் | உண்டடா | மனிதா |
| கவலையை | விட்டுவிடு | –உன்னை | |
| இகழ்ந்தவர் | புகழ்ந்திட | வாழ்ந்து | காட்டிடு |
| தலையை | நிமிர்த்திவிடு | | |
| | | |
| தாழ்ந்தவன் | உயர்வதும் | உயர்ந்தவன் | தாழ்வதும் |
| தலைவிதி | இல்லையடா | – அறிவு | |
| தன்னை | வளர்த்திடு; | உழைப்பில் | நிலைத்திடு |
| தழைத்திடும் | வாழ்க்கையடா! | | |
| | | |
| விழியைத் | திறந்திடு; | விதியை | மறந்திடு |
| விடிந்திடும் | வாழ்க்கையடா | – உனக்குள் | |
| உறுதியும் | இருக்குது; | உணர்வும் | இருக்குது |
| உயர்த்திடும் | உன்னையடா! | | |
| | | |
| படிப்படி | யாகவே | நீஉயர் | அதுதரும் |
| வெற்றித் | திலகமடா | – உன்னைப் | |
| பழித்து | நகைத்தவர் | வியந்து | அடங்குவார் |
| பகட்டு | உலகமடா! | | |
| | | |
| தூண்டில் | போடு; | கண் | மிதவை |
| மீனைப் | பிடித்திடடா | - கொஞ்சம் | |
| பாதை | மாறினால் | தேடிய | கோடியும் |
| பாழாய்ப் | போகுமடா! | | |
| | | |
| செல்வம் | சேர்ந்ததும் | செருக்கும் | சேர்ந்திடும் |
| தூரத் | துரத்திடடா | – அதுஉன் | |
| சீரையும் | கெடுக்கும் | பேரையும் | கெடுக்கும் |
| சிந்தனை | செய்திடடா! | | |
| | | |
| அடக்கம் | வள்ளுவர் | குறள்நெறி | கூறும் |
| அதுதான் | வாழ்க்கையடா | – இதை | |
| அறிந்தே | வாழ்ந்திடு; | அறியா | மூடர்கள் |
| அழிவார் | உண்மையடா! | | |
| | | |
| பணமும் | குணமும் | பலருக் | குதவனும் |
| பசிப்பிணி | போக்கிடடா | – ஏழைகள் | |
| பலன்பெற | நலம்பெற | பாங்குடன் | வாழ்ந்திடப் |
| பாதை | திறந்திடடா!! | | |
| | | |
| புத்தரே | சுநபி | காந்தி | வள்ளலார் |
| போதனை | ஏற்றிடடா | – உனது | |
| முத்திரை | உழைப்பின் | அமுத | சுரபியால் |
| முடவர்க்கும் | உதவிடடா! | | |
Back to Top