Skip to content
| பன்னீரில் | குளித்தாள்! | பஞ்சுதுகி | லால்தலையை |
| தண்ணீர் | சுவடகலத் | தாட்டினாள்! | குழல்மணக்கப் |
| புகைகாட்டி | னாள்;கந்தப் | பொடியூட்டி | னாள்;நூறு |
| வகைகாட்டி | ஆடிமுன் | வடிவழகை | மெருகிட்டாள்! |
| கொடிமுல்லைப் | பூச்சரத்தைக் | கொத்தாகக் | குழல்சொருகி |
| விடிவெள்ளி | கார்குழலில் | விழித்திருக்கப் | பூரித்தாள்! |
| பொட்டிட்டாள்! | மையிட்டாள்! | பொற்பதுமை | சிரித்துத்தன் |
| மொட்டுப்பல் | சீர்பார்த்தாள்! | முகப்பளிங்குக் | கன்னத்தில் |
| தன்னழகை | மேலுயர்த்தத் | தளிர்க்கரத்தால் | கருப்பிட்டாள்! |
| முன்னழகைப் | பின்னழகை | முடியழகை | ரசித்திட்டாள்! |
| நேர்வகிடு | தானெடுத்தாள்! | நெத்திப் | பிறையிட்டாள்! |
| வார்குழலில் | ஒன்றிரண்டை | வரிபிரித்துத் | தொங்கவிட்டாள்! |
| பதட்டமுடன் | வாலிபர்கள் | பார்த்துக் | களிகொள்ளும் |
| உதட்டுக்குச் | சாயமிட்டாள்! | உடுத்திடவே | விதவிதமாய் |
| கட்டழகைக் | கூட்டும் | காஞ்சி | புரம்பட்டு |
| தொட்ட | இடம்வழுக்கும் | தோகைமயில் | வண்ணத்தில் |
| மைசூரு | பெங்களூரு | பனாரஸ் | கொல்லேகால் |
| கைசோரும் | மட்டும் | கலைத்துப்பின் | மனம்விரும்பும் |
| திருப்புவனம் | பட்டைத் | தேர்ந்து | எடுத்திட்டாள்! |
| இருப்பாளே! | பறப்பாளோ! | எனவியக்க | அணிந்திட்டாள்! |
| திருப்பிநின் | றுள்ளாடை | சீர்திருத்தி | பூச்செண்டை |
| அரும்பும்தன் | பேரழகின் | அணிமாடம் | ஆக்கிட்டாள்! |
| காதணிகள், | கையணிகள், | கம்மலொடு | கழுத்துநகை |
| போதுமட்டும் | அணிந்தாள்! | பொன்பட்டு | ஆடைமேல் |
| கந்தங்கள் | தெளித்தாள்! | காமனுக்கே | மயக்கம்வரும்! |
| சித்திரப் | பூப்போட்ட | சிறுகைக் | குட்டையினை |
| முத்திரை | மோதிரம்போல் | முன்கொசுவம் | சொருகிட்டாள் |
| இந்தவித | மாக | எழிலரசி | புறப்பட்டாள்! |
| வீடுவிட்டாள், | வாசல்விட்டாள். | வீதிதொட்டாள். | முகில்கண்டு |
| கூடும், | மயில் | மெய்சிலிர்த்துக் | குலுங்குவது |
| விண்ணிருந்த | நிலவிறங்கி | வீதிக்கு | வந்ததுவோ! |
| பெண்ணணங்கோ! | மாயையோ! | பேரழகோ! | அடடா |
| மேனகையோ! | ரம்பையோ! | திலோத்தமையோ! | ஊர்வசியோ |
| மோகினியோ! | ரதிதானோ! | மெல்லியலாள் | அபரஞ்சி |
| தானோ! | என் | றாடவர்கள் | தடுமாறப் |
| மானோ! | இவளென்ன | மண்ணுலவும் | தாரகையோ! |
| என்றஞ்சி | வியத்தார்கள்! | இளவட்டக் | காளையர்கள் |
| பட்டாடை | கட்டிப் | பார்ப்போரை | மயக்குமிச் |
| சிட்டாள், | யார்? | என்றறியச் | சென்றார்பின் |
| மொட்டவிழ்ந்து | மணம்பரப்பும் | மோகினியைத் | தொட்டுவிட |
| கிட்டவந்தோர் | பலருண்டு! | கிறுக்குப் | பிடித்தவராய் |
| வட்டமிடும் | வயோதிக | வாலிபர்கள் | நிறையப்பேர்! |
| ஊர்வலமோ! | உற்சவ | மூர்த்தியின் | அலங்காரத் |
| தேர்வலமோ! | என்றென்ன | தேவதைகோ | யில்வந்தாள்! |
| காற்செருப்புக் | கழற்றினாள்! | காவலர்பா | துகைவாங்கி |
| மேற்செருப்பாய் | வைத்தார்கள் | மிகப்பரிந்து | உள்ளழைத்தார்! |
| துண்டிப்புக் | கட்டி | திருநீரு | மெய்க்கணிந்த‘ |
| சிண்டாளர், | சிகையாளர், | சீர்மிக்க | பூநூலார் |
| கொண்டாடி | வரவேற்றார்! | கோலமென்ன? | யாரிவளோ? |
| திண்டாடி | னார்பக்தர்! | திகைத்துத் | தவித்தார்கள்? |
| ஊதுவார், | கொட்டுவார், | உற்றுற்றுப் | பார்த்தார்கள்! |
| ஓதுவார், | பாடுவார், | ஒன்றறியா | மல்விழித்தார்! |
| இட்ட | அடிபெயர்த்தாள்! | இங்குகம்பன் | மகனிருந்தால் |
| விட்டஇடம் | தொட்டு | மேலுமொரு | காவியத்தை |
| கொட்டிக் | குவித்திருப்பான்! | கோயிலிதை | மறைந்திருப்பான்! |
| அட்டியின்றி | அம்பிகா | பதிக்கோவை | இரண்டிருக்கும்! |
| தட்டொன்று | வாங்கத் | தன்கண் | ணோட்டத்தை |
| விட்டாள், | கடைமீது! | வேதசாஸ்த் | திரப்படிக்கு |
| தேங்காய், | ஊதுபத்தி, | திருநீரு, | சூரணங்கள். |
| பாங்காய் | வெற்றிலை | பழத்தோடு | கற்பூரம் |
| பலரெடுத்து | நீட்டினார்கள்! | பாவையோ | மனம்போல |
| மலரும் | அதிலிருக்க | மகிழ்ந்தவளாய் | ஓர்தட்டு |
| விலைகொடுத்து | வாங்கினாள்! | விழிதரை | யைப்பார்க்க |
| தலைகுனிந்து, | தட்டேந்தி, | தளிர்நடை | யுடன்வந்தாள்! |
| காணிக்கைச் | செலுத்தினாள்! | கைகுவித்து | வணங்கினாள்! |
| மேனிக்கைக் | கரம்உயர்த்தி | வேண்டினாள்; | பக்தியுடன் |
| கற்பூரம் | தொட்டாள்; | கண்ணொற்றி | மெய்மறந்தாள் |
| பொற்பூரும் | மேனி | புல்லரிக்க | மவுனியாய் |
| வினைமறந்து | நின்றாள்! | விழிதிறந்து | மூலவரை |
| மீண்டுமொரு | முறைவணங்கி | மேனகை | புறப்பட்டாள்! |
| ஆண்டவன் | அருள்பெற்றாள் | ஆங்கு! | |
Back to Top