Skip to content
| “பூ”வெடுத்து | நீவரவோ! | பொன்னெடுத்து | நான்தரவோ! |
| “பா”வெடுத்து | நீவரவோ! | பண்ணெடுத்து | நான்தரவோ! |
| “நா”வெடுத்து | நீவரவோ! | நல்லதமிழ் | நான்தரவோ! |
| தேனெடுத்து | நீவரவோ! | தீருமட்டும் | நான்பெறவோ! |
| | | |
| | | |
| வில்லெடுத்து | புருவத்தால் | விழியம்பை | வீசுறியே! |
| மல்லெடுக்கத் | தயங்காத | மார்பகத்தால் | மயக்குறியே! |
| கல்லெடுத்து | அடிப்பதுபோல் | கண்ணடித்துப் | போடுறியே! |
| சொல்லிருக்கு; | பேச்சு;இல்லை | சொக்குதடி | என்மனசு! |
| | | |
| | | |
| பேருக்கு | நீயாரோ! | பிறருக்கு | நான்யாரோ! |
| ஊருக்குத் | தெரியாது; | உன்உறவு! | என்உறவு! |
| சீரிருக்கு | நம்உறவில்; | சிறப்பிருக்கு | யார்அறிவார்! |
| நேருக்கு | நேர்சேர்வோம்; | நெருக்கமாய் | வாகண்ணே! |
| | | |
| | | |
| கோவைக்கனி | தின்னுதற்குக் | கொத்தும்கிளி | நான் வாரேன்! |
| பாவையே | கன்னத்தைப் | பத்திரமாய் | வைத்திடடீ! |
| தேவையை | நிறைவேற்றத் | தேடிவாரேன் | உன்னிடத்தில்! |
| தீர்வைநீ | தரவேண்டும் | சிந்தாமல் | சிதறாமல்! |
| | | |
| | | |
| கொஞ்சுமொழி | அஞ்சுகமே | கோமளமே! | ரஞ்சிதமே! |
| வஞ்சிமல | ரேயெனக்கு | வாழ்வுதர | வருபவளே! |
| நெஞ்சில்எனைச் | சேர்த்தவளே! | நீக்கமற | ஏற்றவளே! |
| செஞ்செடுத்த | சிலைவடிவே! | செந்தமிழே! | வாகண்ணே! |
| | | |
| | | |
| காரிருக்கும் | நாள்வரைக்கும் | கடலிருக்கும் | நாள்வரைக்கும் |
| சூரியசந் | திரரெல்லாம் | சுழன்றிருக்கும் | நாள்வரைக்கும் |
| ஊரிருக்கும் | நாள்வரைக்கும் | உறவிருக்கும் | நாள்வரைக்கும் |
| பாரிருக்கும் | நாள்வரைக்கும் | பாகாலம் | வாழ்ந்திருப்போம்! |
Back to Top