Skip to content
“பூ”வெடுத்து | நீவரவோ! | பொன்னெடுத்து | நான்தரவோ! |
“பா”வெடுத்து | நீவரவோ! | பண்ணெடுத்து | நான்தரவோ! |
“நா”வெடுத்து | நீவரவோ! | நல்லதமிழ் | நான்தரவோ! |
தேனெடுத்து | நீவரவோ! | தீருமட்டும் | நான்பெறவோ! |
| | | |
| | | |
வில்லெடுத்து | புருவத்தால் | விழியம்பை | வீசுறியே! |
மல்லெடுக்கத் | தயங்காத | மார்பகத்தால் | மயக்குறியே! |
கல்லெடுத்து | அடிப்பதுபோல் | கண்ணடித்துப் | போடுறியே! |
சொல்லிருக்கு; | பேச்சு;இல்லை | சொக்குதடி | என்மனசு! |
| | | |
| | | |
பேருக்கு | நீயாரோ! | பிறருக்கு | நான்யாரோ! |
ஊருக்குத் | தெரியாது; | உன்உறவு! | என்உறவு! |
சீரிருக்கு | நம்உறவில்; | சிறப்பிருக்கு | யார்அறிவார்! |
நேருக்கு | நேர்சேர்வோம்; | நெருக்கமாய் | வாகண்ணே! |
| | | |
| | | |
கோவைக்கனி | தின்னுதற்குக் | கொத்தும்கிளி | நான் வாரேன்! |
பாவையே | கன்னத்தைப் | பத்திரமாய் | வைத்திடடீ! |
தேவையை | நிறைவேற்றத் | தேடிவாரேன் | உன்னிடத்தில்! |
தீர்வைநீ | தரவேண்டும் | சிந்தாமல் | சிதறாமல்! |
| | | |
| | | |
கொஞ்சுமொழி | அஞ்சுகமே | கோமளமே! | ரஞ்சிதமே! |
வஞ்சிமல | ரேயெனக்கு | வாழ்வுதர | வருபவளே! |
நெஞ்சில்எனைச் | சேர்த்தவளே! | நீக்கமற | ஏற்றவளே! |
செஞ்செடுத்த | சிலைவடிவே! | செந்தமிழே! | வாகண்ணே! |
| | | |
| | | |
காரிருக்கும் | நாள்வரைக்கும் | கடலிருக்கும் | நாள்வரைக்கும் |
சூரியசந் | திரரெல்லாம் | சுழன்றிருக்கும் | நாள்வரைக்கும் |
ஊரிருக்கும் | நாள்வரைக்கும் | உறவிருக்கும் | நாள்வரைக்கும் |
பாரிருக்கும் | நாள்வரைக்கும் | பாகாலம் | வாழ்ந்திருப்போம்! |
Back to Top