Skip to content
| முன்னேற்றம் | தந்திடுமே | முயற்சி; | அதனை |
| முறையாக | மேற்கொண்டால் | உயர்ச்சி; | நல்ல |
| எண்ணோட்டம் | வேண்டுமடா | உனக்கு; | இதுவே |
| எப்போதும் | உனைஉயர்த்தும் | கணக்கு; | அறிவுக் |
| கண்ணோட்டம் | கரையேற்றும் | பாரு! | ஆழ்ந்த |
| கருத்தோட்டம் | மதிப்புயுர்த்தும் | சீரு! | என்றும் |
| தன்னோட்டம் | தடம்மாறாப் | போக்கு; | முயன்று |
| தாங்கிப்பார் | வாழ்வுயரும் | வறுமை | நீங்கும்! |
| பாடுபடு | பலனுண்டு; | மண்ணை | வெட்டி |
| பகுத்துப்பார் | தங்கமொடு | வைரம் | உண்டு! |
| கேடுவிடு; | பிறர்வாழத் | தொண்டு | செய்நீ! |
| கேட்காத | போதுமிறை | அருள்கி | டைக்கும்! |
| ஆடுவிட | காடுகெடும்; | நாணல் | இட்டால் |
| ஆறுகெடும்; | இதுபோன்ற | செயல்கள் | நீக்கு! |
| ஈடுபடு; | ஊறுபடா | செயல்கள் | செய்நீ! |
| எப்போதும் | வாழ்வினிக்கும் | இன்பம் | தேங்கும்! |
| அறுவடைதான் | வேண்டுமெனில் | விதைக்க | வேண்டும் |
| அறுபடையான் | விதைவிதையான் | வினைதான் | தீர்ப்பான்! |
| உருப்படியாய் | ஓர்ந்துபார் | ஓலம் | வேண்டாம் |
| உன்னுழைப்பு | நேர்மைதான் | உயர்த்திக் | காட்டும்! |
| ஒருவிடையும் | காணாத | கேள்வி | உண்டா! |
| ஒவ்வொன்றாய்க் | கேட்டுப்பார் | நிகரே | நீதான்! |
| வரும்பொருளாய் | இறைவனத்தில் | ஏற்றம் | சேர்ப்பான்! |
| வற்றாத | வளவாழ்வு | அமையும் | காண்பாய்! |
| தொட்டால்தான் | செயல்துலங்கும்; | தூர | நின்று |
| துதிபாடிப் | பயனில்லை; | இனிப்பு | தன்னை |
| எட்டவைத்துப் | பார்த்திருந்தால் | சுவைதான் | உண்டா! |
| இப்போதே | எழுவிழிநீ | செயலை | நோக்கு! |
| அட்டியில்லை | வெற்றியினை | அடைந்தே | தீர்வாய்! |
| அதைத்தடுக்க | எவருண்டு | புதுமை | செய்நீ |
| பெட்டியிலே | அடைபட்டுக் | கிடந்தி | டாதே |
| புறப்படுநீ | சிறப்புடனே | ஏற்றம் | காண்பாய்! |
| மூழ்கினவன் | முத்தெடுப்பான்; | நூல்கள் | தன்னை |
| முறையாகப் | பயின்றவன்தான் | வெற்றி | காண்பான் |
| ஏழ்மையினைக் | தகர்த்தெறிநீ | ஏற்றம் | கொள்வாய் |
| இன்சொல்நற் | பண்புழைப்பு | கொள்வாய் | வெல்வாய் |
| ஆள்வதற்கு | ஆற்றல்கொள்; | ஆமை | யாநீ! |
| ஐந்தடங்கி | ஒடுங்கிடாதே; | அடிமை | நீக்கு |
| தாழ்ந்துழலும் | எண்ணத்தை | அறுத்து | வீசு |
| தலைநிமிரு; | எழுகதிராய்; | தயக்கம் | ஏனோ |
| கோபுரம்போல் | நீஉயரு; | கொள்கை | மாறாக் |
| குணக்குன்றாய் | வாழ்ந்திடுநீ; | பயிர்கள் | வாழ்த்தும் |
| காவிரிபோல் | வளங்கூட்டு; | வானம் | தந்த |
| கருணைமிகு, | மழையாகு, | எளியர் | ஏழை |
| ஆவியுள்ள | வரைமறவா | உதவி | செய்நீ |
| அரும்பசிக்கு | உணவளிநீ; | தெய்வம் | வாழ்த்தும் |
| தீயவர்கள் | உறவுவிடு; | நல்லோர் | நாடு |
| திருவருளும் | அறம்பொருளும் | சிறக்கும் | காண்பாய் |
Back to Top