Skip to content
| முன்னேற்றம் | வேண்டுமென்ற | முனைப்புக் | கொள்ளு! |
| மூவுலகும் | துணைநிற்கும் | விழித்துக் | கொள்ளு! |
| உன்னேற்றம் | உன்எழுச்சி | முயற்சி | யாலே |
| உலகையே | துயிலெழுப்பு; | செயல்கள் | செய்நீ! |
| கண்ணோட்டம் | கருத்தோட்டம் | புதுமை | யாக்கு! |
| காலடியில் | உலகமே | சுழலும் | காண்பாய்! |
| முன்னோட்டப் | படிக்கட்டில் | முந்தி | நில்லு! |
| முப்பிறப்பின் | பலனிப்போ | உன்னைத் | தேடும்! |
| | | |
| விலைகொடுத்தும் | வினைமுடிக்கும் | துணிவு | வேண்டும்! |
| வீராப்பு | வெறும்பேச்சு | வென்றி | டாது! |
| மலையேற | வேண்டுமெனில் | வலிமை | வேண்டும்! |
| மனத்துணிவு | நம்பிக்கை | உறுதி | வேண்டும்! |
| நிலைஉயர | வேண்டுமெனில் | உழைக்க | வேண்டும்! |
| நெறிதவறாக் | குறிதவறா | முயற்சி | வேண்டும்! |
| அலையைப்போல் | முன்னோக்கும் | ஆற்றல் | வேண்டும்! |
| அது | உனக்குத் | தரும்வெற்றி! | தோல்வி |
| | | |
| நேர்மையுடன் | உழைத்துப்பார்! | நெஞ்சு | தூக்கி |
| நித்தம்நீ | பாடுபடு! | வெற்றி | உன்னை |
| ஓர்மையுடன் | தேடிவரும்! | உலகம் | உன்னை |
| உத்தமனாய் | அடையாளம் | காட்டும்! | காண்பாய்! |
| சீர்மைக்குச் | சிறுமையே | இல்லை; | நீயும் |
| சிந்தித்துச் | செயத்தக்க | செய்து | பாரு! |
| வேர்வைக்குத் | தான்வெற்றி! | ஏய்ப்போர்க் | கல்ல! |
| வியந்துயர்த்தும் | உலகம்உனைப் | போற்றிப் | பாடும்! |
Back to Top