வேர்வைக்குத்தான் வெற்றி

முன்னேற்றம்வேண்டுமென்றமுனைப்புக்கொள்ளு!
மூவுலகும்துணைநிற்கும்விழித்துக்கொள்ளு!
உன்னேற்றம்உன்எழுச்சிமுயற்சியாலே
உலகையேதுயிலெழுப்பு;செயல்கள்செய்நீ!
கண்ணோட்டம்கருத்தோட்டம்புதுமையாக்கு!
காலடியில்உலகமேசுழலும்காண்பாய்!
முன்னோட்டப்படிக்கட்டில்முந்திநில்லு!
முப்பிறப்பின்பலனிப்போஉன்னைத்தேடும்!
விலைகொடுத்தும்வினைமுடிக்கும்துணிவுவேண்டும்!
வீராப்புவெறும்பேச்சுவென்றிடாது!
மலையேறவேண்டுமெனில்வலிமைவேண்டும்!
மனத்துணிவுநம்பிக்கைஉறுதிவேண்டும்!
நிலைஉயரவேண்டுமெனில்உழைக்கவேண்டும்!
நெறிதவறாக்குறிதவறாமுயற்சிவேண்டும்!
அலையைப்போல்முன்னோக்கும்ஆற்றல்வேண்டும்!
அதுஉனக்குத்தரும்வெற்றி!தோல்வி
நேர்மையுடன்உழைத்துப்பார்!நெஞ்சுதூக்கி
நித்தம்நீபாடுபடு!வெற்றிஉன்னை
ஓர்மையுடன்தேடிவரும்!உலகம்உன்னை
உத்தமனாய்அடையாளம்காட்டும்!காண்பாய்!
சீர்மைக்குச்சிறுமையேஇல்லை;நீயும்
சிந்தித்துச்செயத்தக்கசெய்துபாரு!
வேர்வைக்குத்தான்வெற்றி!ஏய்ப்போர்க்கல்ல!
வியந்துயர்த்தும்உலகம்உனைப்போற்றிப்பாடும்!
Back to Top