Skip to content
| காமினி | கண்மணி | நாமினி | ஓரணி |
| மாதுநீ | நீகனி | தா! | |
| தேடிநீ | கூடுநீ | ஆடுநீ | பாடுநீ |
| நாடிநீ | ஓடிநீ | வா! | |
| | | |
| | | |
| காவிலே | கனியொடு | கனியிலே | சாரெடு |
| தேனிலே | ஊறவிடு | தா! | |
| பூவிலே | நிறமெடு | மின்னிலே | பொன்னெடு |
| நாவிலே | தமிழெடு | தா! | |
| | | |
| | | |
| சந்தனச் | சேரெடு | தன்தனம் | பூசிடு |
| வெந்தனல் | போக்கிடு | வா! | |
| முந்திபடு | தென்றலை | முந்தவிடு | தூதுவிடு |
| அந்திபடு | முன்னமே | வா! | |
| | | |
| | | |
| ஊட்டிகுளிர் | ஊட்டிவிடு | ஊடலினை | ஓட்டிவிடு |
| வாட்டுதுயர் | நீக்கிவிடு | வா! | |
| பாட்டுமிளிர் | ராகமாக | கூட்டுசதி | தாளமாக |
| ஆட்டுவிக்க | முன்னெழுந்து | வா! | |
| | | |
| | | |
| அன்பெனும் | துடுப்பெடு | ஆசைகடல் | கடந்திடு |
| வெம்பிடாம | லென்னைநம்பி | வா! | |
| தன்பொழில் | குமுதமே | அமுதமே | பைங்கிளி |
| தயங்கிடாம | லென்னைத்தேடி | வா! | |
Back to Top