Skip to content
| கள்ளிருக்கும் | உன்னிதழை | வண்ணமலரே – வண்டு |
| கண்டுசுற்றி | வட்டமிட்ட | தென்னமலரே! |
| உன்னழகைக் | கண்டுவண்டு | உள்ளேவந்தா&உன்னில் |
| ஊறிவரும் | தேன்குடிக்க | ஓடிவந்ததா! |
| | |
| | |
| காதலெனச் | சொல்லுகிறார் | என்னமலரே – கண்ணில் |
| கண்டபெண்ணை | ரசிக்கிறார் | சொல்லுமலரே! |
| பேதமின்றி | பலமலரில் | தேனீஅமரும்-அந்தப் |
| பாதையிங்கே | சரிதானா | சொல்லுமலரே! |
| | |
| | |
| வாடிவிட்ட | மலர்தேடித் | தேனீவருமா – அந்த |
| வாசல்வழி | பறக்குமா | சொல்லுமலரே! |
| கட்டுடலும் | கெட்டழகு | விட்டபின்னங்கே – காதல் |
| மொட்டுவிட்டு | மலருமா | சொல்லுமலரே! |
| | |
| | |
| காதலென்ன | பருவத்தின் | மயக்கமல்லவா – அது |
| மாறிஉரு | மாறிவய | தேறிமீறினால் |
| ஆசைபாசம் | அன்புநட்பு | காதலெலாமே – ஒரு |
| கானலென்னும் | மாயையாவ | துண்மையல்லவா! |
| | |
| | |
| அம்பிகாப | திஅமரா | வதிசலீமொடு-அந்த |
| அனார்க்கலி | மஜ்னுலைலா | கண்டதுமென்ன |
| காதலென்றார் | காதல்போயின் | சாதலேயென்றார் அந்த |
| காதல் பாதை | யார் தொடர்ந்தார்; | கடந்த துண்டுமா? |
Back to Top