Skip to content
| ஆணை | மயக்கும் | மாயக்காரி! |
| அறிவைக் | கெடுக்கும் | பகட்டுக்காரி! |
| வாளை | மழுக்கும் | கண்ணுக்காரி! |
| வார்த்தை | தனிலே | ஜாலக்காரி! |
| காளையை | அடக்கும் | பவுசுக்காரி! |
| கட்டழ | கினிலே | சொகுசுக்காரி! |
| சேலைக் | கட்டு | மவுசுக்காரி! |
| சிரிச்சுப் | பேசும் | விஷமக்காரி! |
| நடக்கும் | நடையில் | நாட்டியக்காரி! |
| நாக | ரீக | வினையக்காரி! |
| கடந்து | போன | முனிவரைக்கூட |
| காயப் | படுத்தும் | மோகக்காரி! |
| இடக்கு | மடக்கு | பசப்புக்காரி! |
| எல்லாம் | தெரிந்த | எடுப்புக்காரி! |
| அடக்கி | ஆளும் | சேட்டைக்காரி! |
| அதட்டி | மிரட்டும் | ஆணவக்காரி! |
| தலுக்கு | பிலுக்கு | மினுக்குக்காரி! |
| தந்தி | ரத்திலே | கெட்டிக்காரி! |
| குலுக்கி | நடக்கும் | நளினக்காரி! |
| கோணப் | புத்தியில் | குதற்கக்காரி! |
| வழுக்கும் | பட்டு | மேனிக்காரி! |
| வடித்த | சித்திர | அழகுக்காரி! |
| உலுக்கி | விட்டு | முதியோர்களையும் |
| உசுப்பு | ஏற்றும் | தோற்றக்காரி! |
| வண்டு | பறக்கும் | கண்ணுக்காரி! |
| வலிய | இழுக்கும் | காந்தக்காரி! |
| செண்டு | மிஞ்சம் | தனத்துக்காரி! |
| தேனடை | மிஞ்சும் | கொண்டைக்காரி! |
| தண்டை | சிலம்பொலி | குனுக்குக்காரி! |
| தாமரை | போன்ற | முகத்துக்காரி! |
| கண்டவர் | மயக்கும் | மாயக்காரி! |
| கடவுள் | படைப்பிலே | கபடக்காரி! |
Back to Top