Skip to content
ஆணை | மயக்கும் | மாயக்காரி! |
அறிவைக் | கெடுக்கும் | பகட்டுக்காரி! |
வாளை | மழுக்கும் | கண்ணுக்காரி! |
வார்த்தை | தனிலே | ஜாலக்காரி! |
காளையை | அடக்கும் | பவுசுக்காரி! |
கட்டழ | கினிலே | சொகுசுக்காரி! |
சேலைக் | கட்டு | மவுசுக்காரி! |
சிரிச்சுப் | பேசும் | விஷமக்காரி! |
நடக்கும் | நடையில் | நாட்டியக்காரி! |
நாக | ரீக | வினையக்காரி! |
கடந்து | போன | முனிவரைக்கூட |
காயப் | படுத்தும் | மோகக்காரி! |
இடக்கு | மடக்கு | பசப்புக்காரி! |
எல்லாம் | தெரிந்த | எடுப்புக்காரி! |
அடக்கி | ஆளும் | சேட்டைக்காரி! |
அதட்டி | மிரட்டும் | ஆணவக்காரி! |
தலுக்கு | பிலுக்கு | மினுக்குக்காரி! |
தந்தி | ரத்திலே | கெட்டிக்காரி! |
குலுக்கி | நடக்கும் | நளினக்காரி! |
கோணப் | புத்தியில் | குதற்கக்காரி! |
வழுக்கும் | பட்டு | மேனிக்காரி! |
வடித்த | சித்திர | அழகுக்காரி! |
உலுக்கி | விட்டு | முதியோர்களையும் |
உசுப்பு | ஏற்றும் | தோற்றக்காரி! |
வண்டு | பறக்கும் | கண்ணுக்காரி! |
வலிய | இழுக்கும் | காந்தக்காரி! |
செண்டு | மிஞ்சம் | தனத்துக்காரி! |
தேனடை | மிஞ்சும் | கொண்டைக்காரி! |
தண்டை | சிலம்பொலி | குனுக்குக்காரி! |
தாமரை | போன்ற | முகத்துக்காரி! |
கண்டவர் | மயக்கும் | மாயக்காரி! |
கடவுள் | படைப்பிலே | கபடக்காரி! |
Back to Top