Skip to content
| | | |
| காதல்வேகம் | கட்டுக்காவல் | மீறச்செய்யுது: | ஆசை |
| கனிவுகொண்டு | இனிமைகாணத் | துடித்து | நிற்குது: |
| ஈதல் | என்ற | தத்துவமே | இங்குவிளைந்தது! |
| இறைவனாகி | அருள்சுரந்து | வளரச்செய்யுது! | |
| மாலைவேளை | வந்ததுமே | மயக்கம்சேருது! | &இளமை |
| மானைப்போல | துள்ளியாடி | இன்பம்தேடுது! | |
| பாலைத்தேனை | சுவைகெடுத்து | நிலவுஇனிக்குது: | உணர்ச்சி |
| பாட்டுத்தாளம் | பூட்டுச்சாவி | யாகத்துடிக்குது. | |
| ஊரடங்கும் | வேளைகூட | விழித்திருக்குது: | கலப்பு |
| உறவுக்காக | உலகத்தையே | இழுக்கத்துணியுது! | |
| ஈரநெஞ்சில் | இளமைவேகம் | மின்னலாகுது! | தடுக்க |
| எவரினாலும் | முடிவதில்லை | எல்லைக்காணுது! | |
| கலந்துவிட்ட | உறவிலங்கு | அமைதிகாணுது! | வாய்கள் |
| கதவடைத்த | இதயத்தாலே | பேச்சை | மறக்குது! |
| எழுச்சிகொண்ட | உணர்ச்சியங்கு | உறைந்துவிட்டது! | காதல் |
| இன்பமென்ற | கடலின்எல்லை | அலைகள் | பாடுது! |
Back to Top