மீட்டாத புதுயாழ்

(கவிப்பேரரசர் கண்ணதாசன் பாராட்டிய கவிதை)

மேகத்தைஒத்தகரும்கூந்தல்;பாயும்
மீன்அம்பைஒத்தஇருகண்கள்;காதல்
வேகத்தைதூண்டுகிறபார்வை;வட்ட
வெண்ணிலவைப்போலமுகத்தோற்றம்;உற்ற
சோகத்தைமாற்றுகிறவனப்பு;இன்பச்
சுனைத்தேக்கம்இன்னமுதக்கூட்டு;மோக
தாகத்தைமீட்டுகிறஇளமை;கொண்ட
தளிர்மேனி;இளமொட்டு;நங்கைநல்லாள்!
ஓவியந்தான்!உயிரின்பக்கவிதையேதான்!
ஒளிகுன்றாசுடர்மணிதான்!ஒப்பேஇல்லாக்
காவியந்தான்!கற்பனையால்காணக்கிட்டாக்
காரிகைத்தான்!கனிக்கொத்து!கன்னற்சாறு!
மேவியதேன்!எழிற்குன்றுமென்மைத்தண்பூ!
மீட்டாதபுதுயாழ்தான்!இளைஞன்தன்னை
ஆவியிலேகலந்துய்யமணந்தாள்;அந்தோ!
அன்றிரவேஅவனிறந்தான்விதவையானாள்!
கோவில்லை;அவள்கணவன்இல்லை; அந்தக்
கோதைக்குவாழ்வில்லை;இன்பமில்லை;
பூவில்லை;பொட்டில்லை;மஞ்சள்இல்லை;
புதுவண்ணப்பூப்போட்டசேலைஇல்லை
தேவில்லை;அவள்தெய்வமஇல்லை;
தெளிவில்லை;ஒளியில்லை;தெம்பும்இல்லை;
சாவில்லை;அதுகிட்டும்;அதுதான்சொந்தம்
சாகாமல்யார்வாழ்ந்தார்உண்டா?இல்லை!
நிலவுநிறஆடையவள்உடுத்தினாலும்
நீங்காதஆசைஅலைபுரட்சிசெய்யும்!
உலவாமல்,உரத்தகுரல்பேச்சில்லாமல்
ஓடாமல்,ஆடாமல்,ஒடுங்கினாலும்
செலவாகும்பருவத்தைத்தேக்கிவைத்தால்
தீராதவேதனைதான்;இளமைக்கோலம்
வளமற்றுப்போகவில்லைவாடவில்லை
வாதனைக்குஅளவில்லை,வாழ்வா?சாவா?
ஒருமணந்தான்ஒருபெண்ணுக்கிருக்கவேண்டும்
ஒருமணத்தின்பயனெதையும்அவள்கண்டாளா?
திருமணந்தான்அவள்கண்டாள்;பலன்என்
தீராதவேதனைதான்கண்டாள்;இந்த
ஒருமணத்தின்முறையிங்கேதகர்ந்தாலென்ன?
ஓர்ந்திடுவீர்நாட்டோரே!உணர்வைப்பாரீர்!
மறுமணத்தின்முறையிங்கேவேண்டும்வேண்டும்
மறுத்திடிலோமங்கையினைபழிதான்தீண்டும்!
உள்ளத்தால்பண்பட்டவயதானாலும்
ஓதறியாத்துன்பங்கள்ஏற்றல்கிட்டும்.
வெள்ளையினால்ஆடையினைக்கட்டிக்கொண்டால்
விரகமென்னநீங்கிடுமா?தரையில்போட்ட
துள்ளுகிறமீனைப்போல்வாழ்வில்இன்பம்
துய்த்துய்யத்தவிக்கின்றஇளமைதன்னைக்
கள்ளத்திற்கிடம்விட்டுக்கருக்கிடாதீர்!
காசினியீர்!கருணையுடன்விளக்கம்காண்பீர்!
பட்டுவிடவில்லையவள்;பட்டுமேனிப்
பளபளப்புமாறவில்லை;கன்னிக்கோலம்
கெட்டுவிடவில்லையவள்;கற்புவிற்கக்
கீழிறங்கவில்லையவள்;இல்வாழ்வின்பம்
விட்டுவிடவில்லையவள்;வாழ்ந்தாலென்ன?
வேரறுந்தபேரெல்லாம்ஆடும்போது
தொட்டுவிடக்கூடாதாஇல்லறத்தை
துயர்துடைக்கக்கூடாதாநாட்டீர்சொல்வீர்!
தடுத்திட்டான்மணமானஅவள்தன்அண்ணன்
தப்பென்றாள்குழந்தைக்கைஅவள்தன்அண்ணி!
விடுத்திட்டாள்புராணத்துக்குப்பைதந்த
வீம்புமொழிஅர்ச்சனையைஅவள்தன்அத்தை
கெடுத்திட்டாள்பெற்றதாய்ஏற்கவில்லை
கேட்பானேன்தந்தையினைஉற்றார்மற்றார்
மடுத்திட்டார்;பள்ளத்தில்உணர்ச்சிவெள்ளம்
மாய்கிறதுசாய்கிறதுமதிப்பார்யாரோ?
பூப்போலஅவள்மலந்தாள்வாடைகொண்டாள்
பொல்லாதவிதவையெனும்சொல்லால்உள்ளம்
தீப்போலசுடர்விட்டுக்கொந்தளிக்க
திகைக்கின்றாள்;தேம்புகிறாள்;தௌவில்லாத
பாப்போலகுழம்புகிறாள்;பவளச்செவ்வாய்
பசிகொண்டுதுடிக்கின்றாள்அவளைப்
காப்போர்யார்?வாழ்வீப்பீர்!தவறோசொல்வீர்!
கட்டாயம்விதவைமணம்வேண்டும்!வேண்டும்!
மங்காதாபுராணத்துமடமைச்செய்கை
மடியாதாவிதவையெனும்மாறாத்தீச்சொல்!
பொங்காதாமறுமலர்ச்சி!புதுமைஎண்ணம்
பொலியாதாநாட்டிடத்தில்;இளமைவேகம்
திங்காதாஉள்ளத்தை;கண்டும்ஏனோ
தெரியாதார்போல்நடித்தீர்என்னேமிச்சம்!
தங்காதாமறுமணத்தின்வேட்கை;எங்கும்
தளிராதாமுற்போக்கு;அந்நாள்!எந்நாள்?

கோதை தரும் போதை

சிந்துதாளம்தரும்சந்தம்மேவுநடை
தண்டகால்கள்தனையுடையாள்– அவள்
அந்திமாலைவரும்மந்தமாருதத்தின்
விந்தைமேவுசுகமுடையாள்– பல
கந்தமாமலர்கள்சிந்தும்நறுமணத்தின்
சொந்தம்கூறும்செவ்வுடலாள்– அவள்
முந்துதென்றல்குளிர்தந்ததமிழ்மொழியின்
சந்தம்ஏழெனும்மென்குரலாள்
வெல்லும்சிரிப்பிலவள்முல்லைமுத்தடுக்கி
சொல்லிச்செதுக்கியவெண்பல்லினாள்– அவள்
தேனுகற்கண்டுமலைவாழைநல்மாபலா
சேர்த்துப்பிழிந்ததனிச்சொல்லினாள்– அவள்
கடலைக்கடைந்தநல்அமுதம்எடுத்தபோல்
கனிந்தபக்குவநற்பருவத்தாள்– அவள்
காமன்இந்திரனைக்ககனச்சந்திரனை
கலங்கித்தவிக்கவிடும்உருவத்தாள்
மஞ்சம்தந்திடும்நல்விஞ்சும்சுகமனைத்தும்
கொஞ்சித்தந்திடுநற்கோதையாள்– இவள்
பஞ்சுமலரடியில்அஞ்சுபுலத்தின்வழி
மிஞ்சத்தரும்சுகப்போதையாள்
வஞ்சிஇவளுடையஎஞ்சும்உடலழகால்
நஞ்சைத்தேனாக்கும்செயலினாள்– முனிவர்
அஞ்சித்தடுமாறிஅலைந்துநிலைமாறி
துஞ்சும்நிலைக்காக்கும்மயலினாள்

முக்கனி

பெண்ணோ அவள்மின்னோசுடர்பொன்னோஒளிர்தேகம்!
கண்ணோசுகக்காந்தம் தரும்கதிரோ அவள்பார்வை!
மானோமறிதானோஅவள்துள்ளும்நடைஅழகு!
தேனோகற்கண்டோஅமிழ்தூற்றோஅவள்பேச்சு!
வண்ணம்பலகண்ணக்கவர்வான்வில்அவள்புருவம்!
தின்னத்திகட்டாமுக்கனிதினைதேன்அவள் பருவம்!
எண்ணங்கவர்கொற்கைத்தனிஎழில்முத்தவள்பற்கள்!
பண்ணோடொருபரதம்சதிர் பயிர்க்கும்அவள்கால்கள்!
தென்றல்இளம்காற்றில்அசைந்தாடும்இவள்இடைதான்!
தினமேநறுமணமேதருமலர்தான்அவள்உள்ளம்!
நிலவேதவழ்கருமேகமோநீளும்அவள்கூந்தல்!
நினைக்குந்தொரும்மணக்குஞ்சந்தனமோஅவள்உறவு!
வரவும்அவள்தரவும்அவள்உறவும்அவள்தானே!
நிறைவைத்தரும்நினைவைத்தரும்உருவம்அவள்தானே!
பாதைதடுமாற்றும்முனிவர்க்கும்;இவள்அங்கம்
போதையினித்தேவையிலைபாவைஇவள்சங்கம்!
ஓரம்துளும்பார்வையதற்குலகைப்பரிசிடலாம்!
வீரர்தனைவீழ்த்தும்புன்சிரிப்பிற்கெதைத்தரலாம்!

மாயக்காரியோ

இல்லைஇடை;அவள்நடையில்தெரியுது!
ஈக்காற்றுக்கிவள்இடையும்நெளியுது!
பல்லினைமுத்தும்பார்த்துஏங்குது!
பவளம்செவ்விதழ்நிறத்தில்மயங்குது!
மார்பைப்பார்த்துமாங்கனிமலைக்குது!
மணிமொழிகேட்டிடத்தேன்தவமிருக்குது!
கொள்ளைஅழகின்குவியலோஇவளுடல்!
கூறுவதெப்படி?கூப்பிடுகவிஞரை!
கண்ணதாசன்மருதகாசி
கவிஞர்வாலிபட்டுக்கோட்டை
வைரமுத்துஉடுமலைக்கவிஞர்
இவர்கள்பார்வையில்எப்படிதப்பினாள்
செப்படிவித்தைமாயக்காரியோ
ஈரேழுலகிலும்இவள்பேரழகியோ
தந்திரமந்திரபுன்னகைமோகினி
நால்வரில்எவள்;இவள்உருவில்வந்தவள்
பஞ்சின்மென்மைப்பசுந்தளிர்பாதம்
அன்னநடைபயின்றசைந்துகுலுங்க
வஞ்சிவந்தவள்;வஞ்சமனத்தவள்!
நஞ்சுபோன்றவள்;என்றுகம்பரும்
சூர்ப்பனகைதனைச்சுட்டிக்காட்டினார்!
அந்தஅழகியோஇங்குவந்தவள்!
பார்க்கும்இடமெலாம்பாவையின்தோற்றம்!
பரவசம்;நவரசம்;பாய்ந்துதாக்குதே!
மலர்ந்தஇவள்முகம்மதியோ!ரதியோ!
மாராப்புக்குள்குமுதமோ!அமுதமோ!
வளர்ந்தகுழல்கருநாகமோ!மேகமோ!
வாயிதழ்உமிழ்நீர்சுரபியோ!அமுதமோ!
கண்களென்னகணையோ!வினையோ!
காலன்தூதோ!ஆலமோ!சூலமோ!
பெண்கள்இவள்முன்எதிரியோ!உதிரியோ!
பேரழகில்இவள்மயிலோ!புயலோ!
கள்ளப்பார்வைகாந்தமோ!சுடரோ!
உள்ளம்உருகுதே!உணர்வுதுடிக்குதே!
புன்சிரிப்பெழிலோபொசுக்குதே!எரிக்குதே!
போதைஏற்றியேமயக்கிச்சாய்க்குதே!
மாலைத்தென்றல்மனதைஆட்டுதே!
மதுவோ!மாதோ!சிந்தைமயங்குதே!
முல்லைமலர்க்கணைதொடுத்துமன்மதன்!
வில்லைவளைத்தேவீசுறான்ஆயிரம்!

காமரசக் கடல்

பூவாடைஎனைமயக்கத்திரும்பிப்பார்த்தேன்
பொன்னோடைஎழில்மேனிபொலிவுகூட்டும்
பாவாடைதாவணியில்பருவமங்கை
பார்வையிலேசுருக்கிட்டுஎனையிழுத்தாள்!
மாவாட்டும்கற்குழவியாகியெந்தன்
மனஞ்சுழலஉணர்வுந்தஆர்வத்தாலே
நாவாடஉளந்துணிந்தேன்;அவளோமெல்ல
நடைபெயர்ந்தாள்;நான்தொடர்ந்தேன்;கடலோபக்கம்
பார்வையிலேஎனையிழந்தேன்;கன்னலாளின்
பசப்பினிலேநினைவிழந்தேன்;கொவ்வைச்செந்தேன்
கோர்வையிதழ்ச்சிவப்பினிலேசெயலிழந்தேன்
குலைக்கனியாம்கன்னத்தைமார்பைக்கண்டு
ஊர்வெளியைச்சூழ்நிலையைமறந்தே
உளறுமொழிக்கிறுக்கனைப்போல்புலம்பலானேன்
கூர்விழியாள்கடற்கரையேஅடைந்தபோது
குமுறுமுணர்வோடங்கநானும்சேர்ந்தேன்.
நான்பார்த்தேன்;மான்பார்த்துத்திரும்பிக்கொண்டாள்
நான்பார்க்காப்பாவணையில்திரும்பும்போது
மான்பார்த்தாள்;நேர்க்கோட்டில்விழிகள்சேர
மணிபார்த்தேன்;இரவெட்டு;நிலவோநல்ல
தேன்வார்த்துஒளிகொட்டும்;அலைகள்
திசையெங்கும்இன்பமோஇன்பம்என்று
தான்ஆர்த்துகாதலர்கள்இளமை
தணித்திருந்தார்;நாங்களங்கேதனித்திருந்தோம்
முன்னலையைப்பின்னலைகளவாங்கிக்கொஞ்சி
முத்தமிடும்காட்சியினைஎங்கள்கண்கள்
கன்னலினைஉண்பதுபோல்சுவைத்துப்பார்த்துக்
கருத்தினைந்தபோதங்கேமேகம்ஒன்று
தண்ணொளியின்நிலவணைத்துத்தழுவக்கண்டு
தளிருடலைநான்தழுவத்துடித்துநின்றேன்
மின்னொளிக்கண்மெல்லிடையாள்நெருங்க;நாங்கள்
மோகமெனும்காமரசக்கடலில்வீழ்ந்தோம்!

கோயிலுக்குப் போனாள் கோதை!

பன்னீரில்குளித்தாள்!பஞ்சுதுகிலால்தலையை
தண்ணீர்சுவடகலத்தாட்டினாள்!குழல்மணக்கப்
புகைகாட்டினாள்;கந்தப்பொடியூட்டினாள்;நூறு
வகைகாட்டிஆடிமுன்வடிவழகைமெருகிட்டாள்!
கொடிமுல்லைப்பூச்சரத்தைக்கொத்தாகக்குழல்சொருகி
விடிவெள்ளிகார்குழலில்விழித்திருக்கப்பூரித்தாள்!
பொட்டிட்டாள்!மையிட்டாள்!பொற்பதுமைசிரித்துத்தன்
மொட்டுப்பல்சீர்பார்த்தாள்!முகப்பளிங்குக்கன்னத்தில்
தன்னழகைமேலுயர்த்தத்தளிர்க்கரத்தால்கருப்பிட்டாள்!
முன்னழகைப்பின்னழகைமுடியழகைரசித்திட்டாள்!
நேர்வகிடுதானெடுத்தாள்!நெத்திப்பிறையிட்டாள்!
வார்குழலில்ஒன்றிரண்டைவரிபிரித்துத்தொங்கவிட்டாள்!
பதட்டமுடன்வாலிபர்கள்பார்த்துக்களிகொள்ளும்
உதட்டுக்குச்சாயமிட்டாள்!உடுத்திடவேவிதவிதமாய்
கட்டழகைக்கூட்டும்காஞ்சிபுரம்பட்டு
தொட்டஇடம்வழுக்கும்தோகைமயில்வண்ணத்தில்
மைசூருபெங்களூருபனாரஸ்கொல்லேகால்
கைசோரும்மட்டும்கலைத்துப்பின்மனம்விரும்பும்
திருப்புவனம்பட்டைத்தேர்ந்துஎடுத்திட்டாள்!
இருப்பாளே!பறப்பாளோ!எனவியக்கஅணிந்திட்டாள்!
திருப்பிநின்றுள்ளாடைசீர்திருத்திபூச்செண்டை
அரும்பும்தன்பேரழகின்அணிமாடம்ஆக்கிட்டாள்!
காதணிகள்,கையணிகள்,கம்மலொடுகழுத்துநகை
போதுமட்டும்அணிந்தாள்!பொன்பட்டுஆடைமேல்
கந்தங்கள்தெளித்தாள்!காமனுக்கேமயக்கம்வரும்!
சித்திரப்பூப்போட்டசிறுகைக்குட்டையினை
முத்திரைமோதிரம்போல்முன்கொசுவம்சொருகிட்டாள்
இந்தவிதமாகஎழிலரசிபுறப்பட்டாள்!
வீடுவிட்டாள்,வாசல்விட்டாள்.வீதிதொட்டாள்.முகில்கண்டு
கூடும்,மயில்மெய்சிலிர்த்துக்குலுங்குவது
விண்ணிருந்தநிலவிறங்கிவீதிக்குவந்ததுவோ!
பெண்ணணங்கோ!மாயையோ!பேரழகோ!அடடா
மேனகையோ!ரம்பையோ!திலோத்தமையோ!ஊர்வசியோ
மோகினியோ!ரதிதானோ!மெல்லியலாள்அபரஞ்சி
தானோ!என்றாடவர்கள்தடுமாறப்
மானோ!இவளென்னமண்ணுலவும்தாரகையோ!
என்றஞ்சிவியத்தார்கள்!இளவட்டக்காளையர்கள்
பட்டாடைகட்டிப்பார்ப்போரைமயக்குமிச்
சிட்டாள்,யார்?என்றறியச்சென்றார்பின்
மொட்டவிழ்ந்துமணம்பரப்பும்மோகினியைத்தொட்டுவிட
கிட்டவந்தோர்பலருண்டு!கிறுக்குப்பிடித்தவராய்
வட்டமிடும்வயோதிகவாலிபர்கள்நிறையப்பேர்!
ஊர்வலமோ!உற்சவமூர்த்தியின்அலங்காரத்
தேர்வலமோ!என்றென்னதேவதைகோயில்வந்தாள்!
காற்செருப்புக்கழற்றினாள்!காவலர்பாதுகைவாங்கி
மேற்செருப்பாய்வைத்தார்கள்மிகப்பரிந்துஉள்ளழைத்தார்!
துண்டிப்புக்கட்டிதிருநீருமெய்க்கணிந்த‘
சிண்டாளர்,சிகையாளர்,சீர்மிக்கபூநூலார்
கொண்டாடிவரவேற்றார்!கோலமென்ன?யாரிவளோ?
திண்டாடினார்பக்தர்!திகைத்துத்தவித்தார்கள்?
ஊதுவார்,கொட்டுவார்,உற்றுற்றுப்பார்த்தார்கள்!
ஓதுவார்,பாடுவார்,ஒன்றறியாமல்விழித்தார்!
இட்டஅடிபெயர்த்தாள்!இங்குகம்பன்மகனிருந்தால்
விட்டஇடம்தொட்டுமேலுமொருகாவியத்தை
கொட்டிக்குவித்திருப்பான்!கோயிலிதைமறைந்திருப்பான்!
அட்டியின்றிஅம்பிகாபதிக்கோவைஇரண்டிருக்கும்!
தட்டொன்றுவாங்கத்தன்கண்ணோட்டத்தை
விட்டாள்,கடைமீது!வேதசாஸ்த்திரப்படிக்கு
தேங்காய்,ஊதுபத்தி,திருநீரு,சூரணங்கள்.
பாங்காய்வெற்றிலைபழத்தோடுகற்பூரம்
பலரெடுத்துநீட்டினார்கள்!பாவையோமனம்போல
மலரும்அதிலிருக்கமகிழ்ந்தவளாய்ஓர்தட்டு
விலைகொடுத்துவாங்கினாள்!விழிதரையைப்பார்க்க
தலைகுனிந்து,தட்டேந்தி,தளிர்நடையுடன்வந்தாள்!
காணிக்கைச்செலுத்தினாள்!கைகுவித்துவணங்கினாள்!
மேனிக்கைக்கரம்உயர்த்திவேண்டினாள்;பக்தியுடன்
கற்பூரம்தொட்டாள்;கண்ணொற்றிமெய்மறந்தாள்
பொற்பூரும்மேனிபுல்லரிக்கமவுனியாய்
வினைமறந்துநின்றாள்!விழிதிறந்துமூலவரை
மீண்டுமொருமுறைவணங்கிமேனகைபுறப்பட்டாள்!
ஆண்டவன்அருள்பெற்றாள்ஆங்கு!

அவளா இவள்?

ஆணைமயக்கும்மாயக்காரி!
அறிவைக்கெடுக்கும்பகட்டுக்காரி!
வாளைமழுக்கும்கண்ணுக்காரி!
வார்த்தைதனிலேஜாலக்காரி!
காளையைஅடக்கும்பவுசுக்காரி!
கட்டழகினிலேசொகுசுக்காரி!
சேலைக்கட்டுமவுசுக்காரி!
சிரிச்சுப்பேசும்விஷமக்காரி!
நடக்கும்நடையில்நாட்டியக்காரி!
நாகரீகவினையக்காரி!
கடந்துபோனமுனிவரைக்கூட
காயப்படுத்தும்மோகக்காரி!
இடக்குமடக்குபசப்புக்காரி!
எல்லாம்தெரிந்தஎடுப்புக்காரி!
அடக்கிஆளும்சேட்டைக்காரி!
அதட்டிமிரட்டும்ஆணவக்காரி!
தலுக்குபிலுக்குமினுக்குக்காரி!
தந்திரத்திலேகெட்டிக்காரி!
குலுக்கிநடக்கும்நளினக்காரி!
கோணப்புத்தியில்குதற்கக்காரி!
வழுக்கும்பட்டுமேனிக்காரி!
வடித்தசித்திரஅழகுக்காரி!
உலுக்கிவிட்டுமுதியோர்களையும்
உசுப்புஏற்றும்தோற்றக்காரி!
வண்டுபறக்கும்கண்ணுக்காரி!
வலியஇழுக்கும்காந்தக்காரி!
செண்டுமிஞ்சம்தனத்துக்காரி!
தேனடைமிஞ்சும்கொண்டைக்காரி!
தண்டைசிலம்பொலிகுனுக்குக்காரி!
தாமரைபோன்றமுகத்துக்காரி!
கண்டவர்மயக்கும்மாயக்காரி!
கடவுள்படைப்பிலேகபடக்காரி!

அமராவதி கதி அதோகதி

தாமரைகூடதவமிருக்கும்– அவள்
தங்கமுகத்தைப்பார்ப்பதற்கு!
ரோஜாமலரும்தவமிருக்கும்– அவள்
மேனியின்நிறத்தைப்பார்ப்பதற்கு!
முத்துகள்கூடத்தவமிருக்கும்– அவள்
முல்லைப்பல்லைப்பார்ப்பதற்கு!
கத்தும்குயிலும்காத்துக்கிடக்கும்– அவள்
கனியினும்இனிதாம்குரல்கேட்க!
மானும்மயிலும்தவமிருக்கும்– அவள்
மையல்சாயல்கணிப்பதற்கு!
வானவில்கூடத்தவமிருக்கும்– அவள்
வளைந்தபுருவம்ரசிப்பதற்கு!
கடலும்வானும்தவமிருக்கும்– அவள்
கண்ணில்நீலம்பார்ப்பதற்கு!
அம்பும்மீனும்தவமிருக்கும்– அவள்
அழகியகண்களைப்பார்ப்பதற்கு!
நிலவுகூடத்தவமிருக்கும்– அவள்
நெற்றியில்பிறையைக்காண்பதற்கு!
உலவும்தென்றலும்தவமிருக்கும்– அவள்
உடலைமெதுவாய்த்தொடுவதற்கு!
வலம்வரும்மேகமும்காத்திருக்கும்– அவள்
வளர்கருங்கூந்தலைப்பார்ப்பதற்கு!
மலையும்குன்றும்தவமிருக்கும்– அவள்
பருவஅழகைரசிப்பதற்கு!
நான்மறைமுனிவரும்தவமிருப்பார்– அவள்
நடையுடைபாவனைரசிப்பதற்கு!
சித்தரும்பித்தராய்மாறிடுவார்– அவள்
சிறுநகைகடைவிழிதாக்குதலால்!
பிரமன்இந்திரன்தவமிருப்பார்– அவள்
பேரழகிளமையைரசிப்பதற்கு!
செத்தவர்கூடபிழைத்தெழுவார்– அவள்
சிற்றடிசதங்கைஓசையிலே!
அம்பிகாபதிகூடஇன்றிருந்தால்– அந்த
அமராவதிகதிஅதோகதிதான்!
மஜ்னுகூடஇன்றிருந்தால்– அந்த
லைலாகதியும்எக்கதியோ!
அக்பர்மகன்சலீம்இவளைக்கண்டால்– அந்த
அனார்க்கலிநிலைமையாரறிவார்!
தேவதாஸ்கூடபார்வதிமறப்பான்இந்தத்
தேவதைஅருகேஇருந்துவிட்டால்!

தேனில் விழுந்த ஈ

மாலையிலேஅன்றொருநாள்தென்றல்தேடி
மயக்குகிறதங்கநிறவெயிலும்நாடி
சாலையிலேநான்சென்றேன்;ஊருக்கப்பால்
தனிமையிலேஉலாவுதற்கே;ஆங்கோர்வீட்டில்
பாளையிலேமொட்டடுக்கிவைத்தபல்லின்
பாங்கானஇளநகையைச்சிந்துகின்ற
சோலையிலேஅன்றலர்ந்தமலரைப்போன்ற
சொல்லுக்குள்அடங்காதஒருத்திநின்றாள்!
பருவத்தில்பதினாறுவயதுகொண்டாள்!
பார்வையிலேகாந்தத்தைக்கண்ணில்கொண்டாள்!
உருவத்தில்பொற்பதுமைஉவமைகொண்டாள்!
உள்ளத்தில்காதலெனும்வேட்கைகொண்டாள்!
அறுபத்துநாற்கலையின்மாயம்கொண்டாள்!
அடுத்தெவர்க்கும்இல்லாதஅழகுகொண்டாள்!
பருவத்தைஉருவத்தையார்பார்த்தாலும்
பார்த்தவிழிபார்த்ததுதான்அடிமைகொள்வாள்!
மான்நின்றாள்;நான்சென்றேன்;விழிவீச்சாலே
மதிமறந்துநான்நின்றேன்;இதழ்விரித்தாள்!
ஏன்சென்றேன்ஏன்நின்றேன்அறியானாகி
ஈதேனில்வீழ்ந்ததுபோல்நிலைமைகொண்டேன்!
தேன்வென்றசொல்லாலேஅழைத்ததைப்போல்
தீர்மானம்நான்கொண்டேன்:அவளோ
தான்ஒதுக்கிசரிசெய்தாள்!இன்ப
தனைக்கடந்துகால்பின்னதவித்து
வீட்டினிலேஅவள்தவிரஎவரும்இல்லை!
வீதியிலோசந்தடிகள்அதிகம்இல்லை!
கூட்டினிலேதனித்திருக்கும்பெண்புறாவைக்
கொஞ்சுதற்குநான்துணிந்தேன்;அவளும்
பாட்டினிலேஎனக்குஒருஅழைப்புவிட்டாள்!
பசியாரவரலாமேஎன்பதைப்போல்
கேட்டுவிட்டுநெருங்காமல்நானிருந்தால்
கிறுக்கனுக்கும்எனக்கும்வேறுவமைஉண்டோ!
கரைஉடைத்துகாட்டாறுபுகுந்ததைப்போல்
கதவடுத்துஉட்சென்றேன்;நிமிடம்தன்னில்
அறையடுத்துஅவள்சென்றாள்;நெருங்கிவிட்டேன்
அப்போதுஅவள்சொன்னாள்;அப்பாஅம்மா
வருகின்றநேரமென்றாள்;அப்பாஅம்மா
வந்திடட்டும்தலையறுத்துவீழ்த்துவாரோ!
நிறைமதியுன்கன்னத்தில்முத்தம்தந்த
நீங்காதநினைவோடுசாவேன்என்றேன்.
மற்கட்டுநடந்ததுவா?அதுதான்இல்லை!
மாமழையில்நனைந்தோமா?அதுவும்இல்லை!
சொற்கட்டுஇருந்ததுவா?ஏதும்இல்லை!
சுகங்கண்டுதிளைத்திட்டோம்இதுதான்உண்மை!
கற்கண்டுதொண்டைவரைஇனிக்கும்;ஆனால்
கன்னியிவள்அணுவணுவாய்உடல்பூராவும்
சொற்கொண்டுவிளக்கவொண்ணாஇன்பம்தந்தாள்!
சொன்னாலும்சுவைகுன்றும்அதனால்விட்டேன்.

அமுத கலசம்

மூச்சையடக்கிநான்மூழ்கிஎடுக்கவா
முத்துக் கோர்க்கவா கண்ணே!
ஆழக் கடலிலே அமுத கலசத்தின்
அழகை ருசிக்கவா பெண்ணே!
காற்றுத் திசையிலே கடலின் அலையிலே
கலத்தைச் செலுத்தவா கண்ணே!
சேற்றுத் தாமரை சேர்சுரும் பாகதேன்
ஊற்றில் களிக்கவா பெண்ணே!
மந்த மாலையில் வந்த தென்றலில்
சொந்தம் கொண்டிடும் சுகமே!
சிந்து பூந்தமிழ் தந்த சந்தமே
விந்தை பூத்தபே ரழகே!
மோடி இல்லைநீ கோடி மலர்கூடி
நாடி உருவான நங்கை!
கோடி சுகராகம் பாடி மயக்கும் நீ
தேடி வளஞ்சேர்க்கும் கங்கை!
தங்க நிலாவின் தங்கை நிலாநீ
தரையில் மலர்ந்தபெண் மாயம்!
எங்கு தழுவினும்அங்கம் சுகம்தரும்
அமுத கலசநிறை காயம்!
தொடவும் தொடருமே தொடர படருமே
விடவும் சுடுமே மோகம்!
தொடவும் முடியலே விடவும் முடியலே
அடடா மீறுதே தாகம்!
Back to Top