Skip to content
| பஞ்சத்தை | ஓட்டிடுவார்; | மக்கள் | மீளப் |
| பகுத்தறிவை | ஊட்டிடுவார்; | துணிவைத் | தந்து |
| அஞ்சுநிலை | போக்கிடுவார்; | விழிப்பு | தந்து |
| அவலநிலை | நீக்கிடுவார்; | அடிமை | ஆண்டான் |
| கெஞ்சுநிலை | துறத்திடுவார்; | கீழும் | மேலும் |
| கெடுப்பவனின் | வேரறுப்பார்; | கொடியோர் | நாட்டில் |
| மிஞ்சுநிலை | தடுத்திடுவார்; | அவரைத் | தானே |
| மேதினியில் | மனிதரிலே | தெய்வம் | என்போம்! |
| கொத்தடிமை | ஒழித்தவரை; | கொடுமை | கண்டு |
| குமுறியெழும் | குணத்தவரை; | ஏழை | வாழ |
| நித்தமுழைக் | கின்றவரை; | நேர்மை | நீதி |
| நிலைக்கவழி | செய்பவரை; | உலகே | மெச்சும் |
| வித்தையிலே | வல்லவரை; | நாடு | ஓங்க |
| விடியலினைத் | தந்தவரை; | காலந் | தோறும் |
| முத்தமிழே; | ஆருயிரே; | அமுதே | என்று |
| மூவுலகும் | தலைவணங்கும் | மறுப்பா | ருண்டோ? |
| பசித்திருப்போர் | நிலையறிந்து | அதனைப் | போக்க |
| பாதைவழி | தேடியவர் | புத்த | ரென்போம்! |
| கசிந்துருகிப் | பயிர்வாட | தானும் | வாடும் |
| கருணைமனங் | கொண்டவர்தான் | ராம | லிங்கர்! |
| நசிந்துடலில் | நோயுற்ற | உயிருக் | காக |
| நற்புதுமை | நிகழ்த்தியவர் | ஏசு | நாதர்! |
| புசித்திடவே | புறாகேட்ட | வேட | னுக்குப் |
| பொன்னுடலைச் | “சிபி” | தந்தார்! | உண்டோ |
| சாந்தியொற்று | மையமைதி | சமத்து | வத்தைத் |
| தாரணிக்குத் | தந்து | “நபி” | நெறியில் |
| மாந்தரது | மடமையிருள் | போக்க | வந்த |
| மணிவிளக்கு | சாக்ரட்டீஸ் | லிங்கன் | கமால் |
| காநதி, | பெரி | யார்அண்ணா | திருவள் |
| காட்டும்வழி | நடந்துநல் | அறிவை | ஆள்வோர் |
| ஏந்துசுடர் | ஒளியினிலே | உலகே | உய்யும்! |
| ஏதுயினி | மானுடத்திற் | கிடர்பா | டேது? |
| கண்ணும் | கண்ணும் | காணும் | போது |
| கவிதை | பேசுது! | கணைகள் | வீசுது! |
| காந்தம் | பிறக்குது! | கதவு | திறக்குது! |
| காதல் | துளிர்க்குது | கதையே | மாறுது! |
| | | |
| | | |
| பெண்ணை | ஆணைப் | பிணைக்குது! | இணைக்குது! |
| பேதம் | மறக்குது! | வேதம் | துறக்குது! |
| துடிக்குது! | முடிக்குது! | துள்ளிக் | குதிக்குது! |
| வெடிக்குது | வெறுக்குது! | விளங்க | மறுக்குது! |
| | | |
| | | |
| நெறியை | மீறுது! | நிலைமை | மாறுது! |
| உலகைத் | துருப்பென | ஒதுக்கிப் | போடுது! |
| மதியை | அழிக்குது! | மனதை | மயக்குது! |
| சொந்தம் | இழக்குது! | சுகமே | நினைக்குது! |
| | | |
| | | |
| உள்ளம் | உடைக்குது! | ஊமை | யாக்குது! |
| உணர்வைத் | தூண்டுது! | உணவை | மறக்குது! |
| கலகம் | விளைக்குது! | கனவில் | மிதக்குது! |
| இன்பம் | தேடுது! | இறகு | முளைக்குது! |
| | | |
| | | |
| பொறுமை | இழக்குது! | பெருமை | குலைக்குது! |
| உரிமை | மீறாது! | உறவை | உதறுது! |
| வறுமை | வளமை | வாழ்வை | மறக்குது! |
| வசைவோர்! | இசைவோர்! | ஒன்றென | எண்ணுது! |
| | | |
| | | |
| உயரப் | பறக்குது! | ஊஞ்சலில் | ஆடுது! |
| துயரம் | நொறுக்குது! | துணிச்சல் | பெருக்குது! |
| உயிரில் | நுழையுது! | ஒளிந்து | சிரிக்குது! |
| நெஞ்சைப் | பிழியுது! | நெருப்பாய் | எரிக்குது! |
| | | |
| | | |
| கட்டும் | கயிராய்! | காலன் | விடமாய்! |
| தூண்டில் | முள்ளாய்த் | தொடருது | படருது |
| கிட்ட | அழைக்குது! | கிறுக்கைப் | பெருக்குது! |
| முட்டா | ளாக்குது! | மோகம் | ஊட்டுது! |
| | | |
| | | |
| வீரப் | போர்பல | விளைக்குது! | அழிக்குது! |
| “வெறி”யைத் | தூண்டுது! | வெல்லுது! | கொல்லுது! |
| வெற்றியில் | சிரிக்குது! | கண்ணீர் | இனிக்குது! |
| வீழ்ச்சியில் | சிரிக்குது! | கண்ணீர் | கரிக்குது! |
| | | |
| | | |
| அண்ணலும் | நோக்கிட | அவளும் | நோக்கிட |
| கண்ணின் | பிரசவம் | கம்பன் | காவியம்! |
| மும்தாஜ் | ஷாஜகான் | விழிகளும் | நோக்கிட |
| தாஜ்மகால் | பிறந்தது! | உலகம் | வியந்தது! |
| | | |
| | | |
| கண்ணொடு | கணணினை | நோக்கிட | வாய்ச்சொல் |
| காணுமோ | பயனெதும்; | வள்ளுவர் | கேட்டார்! |
| அமரா | வதிஅம் | பிகாபதி | கண்மொழி |
| காதலை | வளர்த்தது! | வாய்ச்சொல் | அழித்தது! |
| | | |
| | | |
| ரோமியோ | சூலியட் | லைலா | மஜ்னு |
| காவியம் | வந்தது | கண்வழி | தந்தது! |
| அனார்கலி | “கண்”-”வாள்” | சலீமைத் | தாக்கிட |
| அக்பரை | பகைத்தது! | அழிவை | விளைத்தது! |
| | | |
| | | |
| சாம்ராஜ் | யங்கள் | எழுந்ததும் | விழுந்ததும் |
| சரித்திரக் | கண்வழிச் | சாதனை! | வேதனை! |
| கண்கள் | கண்களைக் | காண்பது | தவறோ! |
| கண்களில் | வலிமை | தந்தவர் | எவரோ! |
| நரிபுடிச்சோம் | முயல்புடிச்சோம் | காடைபுடிச்சோம் | ஆயாலோ! |
| காணாங்கோழி | கூழக்கடா | மான்புடிச்சோம் | ஆயாலோ! |
| கொம்புநகம் | பல்லுதோலு | வாலுவிப்போம் | ஆயாலோ! |
| வம்புவாது | சூதுபொய்யி | பேசமாட்டோம் | ஆயாலோ! |
| | | |
| கூட்டம்கூடி | டப்பாதாளம் | ஆட்டம்போடுவோம் | ஆயாலோ! |
| குடுத்தகஞ்சி | காசுவாங்கி | கும்புடுவோம் | ஆயாலோ! |
| இப்பஎங்க | நெலமைவேறே | இதுதெரிமா | ஆயாலோ! |
| பாசிமணிகள் | ஊசிவித்துப் | பணம் | குமிக்கிறோம் |
| | | |
| அரசுதந்த | கெட்டிவீட்டுல | அண்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
| அங்கேநாலு | வாழைதென்னை | வச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
| கரண்டுவௌக்கு | டிவிரேடியோ | குடிநீரோட | ஆயாலோ! |
| கட்டித்தந்தார் | பள்ளிக்கூடம் | படிச்சுப்புட்டோம் | ஆயாலோ! |
| | | |
| பள்ளிப்படிப்பை | நாங்கபடிச்சோம் | பாட்டன்போல | இல்லீங்க |
| பக்குவமா | உலகத்தோட | ஒட்டிக்கிட்டோம் | ஆயாலோ! |
| வேட்டிகட்டி | சட்டைமாட்டி | வெளியேவாரோம் | ஆயாலோ! |
| வெட்டிப்புட்டோம் | குடுமியைத்தான் | குளிக்கிறொமை | ஆயாலோ! |
| | | |
| கல்யாணவீடு | போறதில்லை | எலைஎடுக்கலே | ஆயாலோ! |
| எங்கவிட்டுலே | கல்யாணத்திலே | எலைச்சாப்பாடு | ஆயாலோ! |
| சாமிசாமி | நாங்கசொன்னோம் | சிச்சியின்னிங்க | ஆயாலோ! |
| சமத்துவமா | மதிக்கயிப்போ | ஒசந்துபுட்டோம் | ஆயாலோ! |
| | | |
| கூட்டுறவுலே | அரிசிபருப்பு | கொடுக்கிறாக | ஆயாலோ! |
| ஓட்டுப்போடும் | உரிமைகூட | இருக்குதுங்க | ஆயாலோ! |
| காட்டுநரிக் | குறவர்இப்போ | நெறிக்குறவரா | ஆயிட்டோம்! |
| கருணையோட | அரசாங்கந்தான் | காத்துவருது | ஆயாலோ! |
| | | |
| காடுவேலை | கழனிவேலை | களத்துமேட்டுலே | ஆயாலோ! |
| கருத்தைமாத்தி | உழைக்கிறதைக் | காணவாங்க | ஆயாலோ! |
| கூத்தாடிவயல் | அறந்தாங்கியிலே | திருச்சிதேவ | ராயநேரி |
| குடியிருக்குறோம் | நாற்பதாண்டா | பிழைத்திருக்கிறோம் | ஆயாலோ! |
| ஆக்குவதும் | காப்பதுவும் | அழிப்ப | தெல்லாம் |
| ஆண்டவனின் | செயலென்று | அன்றே | சொன்னார்! |
| ஆக்குவது | அவன்செயல்தான்; | நம்மால் | இல்லை |
| ஆக்கியநல் | உயிர்,பொருளை | யார்காக் | கின்றார்! |
| ஆக்கமுடன் | உயிரினங்கள் | உழைத்து | ழைத்து |
| அரும்பாடாய் | உயிர்,பொருள்கள் | காக்கக் | கண்டோம் |
| நீக்கமற | இறையவனே | காப்பா | னென்றால் |
| நிறை,குறைகள் | நிந்தனைஏன்? | தீர்ப்பு | உண்டா? |
| | | |
| ஒருவன்மற் | றொருவனுயிர் | போக்கி | விட்டால் |
| ஊருலகம் | கொலைகாரன் | என்றே | சொல்லும்! |
| ஒருகொலைக்கே | சிறையுண்டு; | தூக்கு | உண்டு! |
| ஓருயிரா? | ஜப்பானில் | சென்டாய் | மினாமி |
| பெருநகரே | அழிந்துபட | சுனாமி | தந்த |
| பெருந்துரயம்; | இருபதினா | யிரவர் | மாண்டார்! |
| விரும்பித்தான் | இறைவன்கொலை | செய்கின் | றானா? |
| விடையிலையா? | பொறுப்பாளி | இதற்கில் | லையா? |
| | | |
| வீடுமுதல் | கார்கப்பல் | ரயில்வி | மானம் |
| விரிவாக்க | அணுவுலைகள் | பெட்ரோல் | டீசல் |
| தேடறிய | விஞ்ஞான | சாத | னங்கள் |
| திகைப்பூட்டும் | தொழில்நுட்பம்; | அனைத்தும் | வீழ்த்தி |
| நாடழித்துப் | போட்டசெயல் | நன்றோ; | தெய்வம் |
| நன்மைசெயத் | தானுண்டு; | இதுவோ | கொடுமை! |
| வாடிடுதே | மக்கள்மனம் | உலக | மெங்கும்! |
| வடிக்கிறதே | கண்ணீர்;இறை | அறிந்தா | லென்ன? |
| | | |
| போர்வெறிகொண் | டமெரிக்கா | ஜப்பான் | நாட்டில் |
| போட்டஅணு | குண்டாலே | மூன்று | லட்சம் |
| பேர்மாண்டார்; | ஹிரோஷிமா, | நாக | சாஹி, |
| பெருந்துயரைக் | கண்டது;பின் | மீள | லாச்சு! |
| வேரறுத்த | அமெரிக்கா | குனிய | லாச்சு! |
| வீழ்ந்துபட்ட | ஜப்பானோ | நிமிர | லாச்சு! |
| சீரழித்தாய் | சுனாமியே | ஜப்பான் | மீளும்! |
| சீருபெரும்; | பேருபெறும்; | உலகம் | காணும்! |
| | | |
| போனவுயிர் | மீண்டிடுமா? | பால்கு | டித்த |
| பிஞ்சுமுதல் | வயோதிகரை | அழிக்க | லாமா? |
| நாணமிலாச் | செயலன்றோ; | தெய்வத் | திற்கோ |
| நற்கருணை | சிறிதில்லை; | உலகே | தூற்றும் |
| ஈனசெயல்; | சுனாமியே | தாக்க | லாமா? |
| எங்கள்தமிழ் | நாட்டோடு | இலங்கை | சேர்த்து |
| போனமுறை | நீயழித்தாய்; | ஜப்பான் | இன்று |
| புதைகுழியாய் | மாறியதே | இனிவா | ராதே! |
| | | |
| சாகாமல் | வாழ்ந்தவர்கள் | யாரும் | இல்லை! |
| சாவுக்கும் | விதிமுறைகள் | வகுத்தாய் | நீயே |
| சாவுக்கு | அஞ்சியஞ்சும் | காலம் | போச்சு! |
| சாவுண்டு; | இதையறிந்தே | வாழு | கின்றோம்! |
| தீவுமுழு | தாய்அழித்தாய்; | ஜப்பான் | நாட்டார் |
| தீமையவர் | செய்ததென்ன? | கொடுமை | யன்றோ |
| சாதிக்கப் | பிறந்தவர்கள்; | ஜப்பான் | நாட்டை |
| சாவுலகு | அனுப்பிடினும் | மீண்டும் | வெல்வார்! |
| ஒடிச்சுப் | போட்ட | இலையைத் | தின்னு |
| ஊத்தி | வச்ச | கழனிகுடிச்சு | |
| ஒங்கபின்னே | சுத்திவந்த | ஆடுங்க | –நாங்க |
| உண்மையிலே | நம்பிவந்தோம் | பாருங்க | |
| | | |
| கெடயைப் | போட்டு | வயல் | வெளியிலே |
| புளுக்கை | சிறுநீர் | எருவா | மாத்தி |
| விடிஞ்சதுமே | தண்ணிகாட்டி | விட்டீங்க | –எங்களை |
| விரட்டிநல்லா | புல்வெளியிலே | விட்டீங்க | |
| | | |
| ஆத்து | ஓரம் | காட்டு | ஓரம் |
| அருகி | ருக்கும் | செடியின் | ஓரம் |
| மாத்திமாத்தி | மேயவிட்டீங்க | எங்களை | –நாங்க |
| மறக்கமாட்டோம் | உயிருள்ளவரை | உங்களை | |
| | | |
| நம்பி | வந்த | எங்க | ளுக்கு |
| நல்ல | தையே | செய்த | நீங்க |
| அன்புகாட்டத் | தவறினது | என்னங்க | –கழுத்தை |
| அறுத்துயெங்கள் | உயிர்பறிப்பது | என்னங்க | |
| | | |
| காலு | நாலைக் | கட்டிப் | போட்டு |
| கழுத் | தறுத்த | போது | முங்கள் |
| கருணையைத்தான் | நினைச்சிருப்போம் | அய்யாவே | –நாங்க |
| கதறுவதுஉங்க | நினைப்பிலே | மெய்யாவே | |
| | | |
| காந்தி | புத்தர் | மகா | வீரர் |
| கருணை | ராம | லிங்க | அடிகள் |
| சாந்திமார்க்கம் | சத்தியத்தைச் | சொன்னீங்க | –எங்களைச் |
| சந்தைக்கடையில் | கழுத்தறுத்துக் | கொன்றீங்க. | |
| | | |
| உலகத் | திற்கே | சாமா | தானம் |
| ஒற்று | மையோ | டிஹிம்சை | கூறி |
| கலகமின்றி | கொலைதடுத்தது | நீங்கதான் | –எங்களை |
| கழுத்தறுத்து | போடுறதும் | நீங்கதான். | |
| | | |
| காட்டில் | வாழும் | மிருகங் | களும் |
| ஓடி | ஒளிந்து | பிழைக் | குதுங்க |
| வீட்டில்உங்க | கூட | வாழ்ந்தோம் | நாங்களே |
| வெட்டிப்பலி | கொடுபபதுவோ | நீங்களே | |
| ஆயிரமா | யிரம்தேனீ | காலை | மாலை |
| அலைந்தலைந்து | பூவமர்ந்து | எடுத்த | தேனை |
| ஆயிரமா | யிரம்அறைசேர் | கூட்டுக் | குள்ளே |
| அன்றாடம் | சிறுசிறுக | சேர்த்து | வைக்கும்! |
| ஏழைசிறு | உண்டியலில் | காசைப் | போட்டு |
| எப்போது | நிறையுமெனக் | காத்தி | ருப்பான்! |
| ஏழையிவன் | உண்டியலைத் | திருடன் | கொண்டால் |
| என்னாகும்; | தேனியையும் | இணைத்துப் | பாரீர்! |
| தேன்கூட்டைக் | கட்டியதற் | கார்தான் | தந்தார்! |
| தேனெடுத்து | யாரதற்குச் | சேர்த்துத் | தந்தார்! |
| ஊனுறக்க | மின்றிமலர் | மலர்க்குத் | தாவி |
| ஓய்வின்றி | உழைத்ததுவும் | தேனீ | யன்றோ! |
| வான்மழையில் | கடும்வெயிலில் | வறட்டுக் | காற்றில் |
| வகைதொகையாய்க் | காத்திருந்த | தெவரோ | சொல்வீர்! |
| மானமொடு | எவருதவி | தயவும் | இன்றி |
| மாண்புடனே | வாழுவதும் | தேனீ | யன்றோ! |
| மாடெருமை | ஆடுபசு | குருவி | கோழி |
| மனிதனதற் | குணவளித்துக் | காப்ப | துண்டு |
| பாடதற்கு | மனிதனவன் | படுவதாலே | |
| பல | வகையில் | பங்கெடுக்கும் | உரிமை |
| கேடெவர்க்கும் | எண்ணாமல் | அடிமை | யின்றி |
| கிடைத்ததேன் | உண்டுவாழ் | கின்ற | தேனீ |
| கூடழித்தான்; | தேனெடுத்தான்; | மனிதன் | உண்டான் |
| கொள்ளையிது! | பெருங்கொடுமை!! | மாற்று | காண்பீர்! |
| பூமியிலே | அழகழகாய்ப் | புற்று | தோன்றும்! |
| புனிதமிகும் | கோபுரம்போல் | உயர்ந்து | காணும்! |
| சாமியில்லை | புற்றுக்குள்; | எறும்புக் | கூட்டம் |
| சமத்துவத்தை | ஒற்றுமையை | மனிதர் | கட்கு |
| காமிக்கும் | வகையாக | வாழ்ந்து | காட்டி |
| கருத்துடனே | கூட்டுறவின் | உயர்வை | நாட்டும்! |
| சேமிக்கும் | பழக்கத்தை | மனிதர் | கட்டு |
| சொல்லியதே | எறும்புகளின் | கூட்டம் | தானே. |
| அலையலையாய் | சுறுசுறுப்பாய் | அங்கும் | இங்கும் |
| அலைந்தலைந்து | உணவுகளைத் | திரட்டி | வந்து |
| வலைக்குள்ளே | சேமித்து | மழைக்கா | லத்தில் |
| வாழ்வதற்கு | வழிகண்ட | எறும்புக் | கூட்டம் |
| மலையளவு | அறிவுரையை | மனித | னுக்கு |
| மணிமணியாய்த் | தந்ததுவும்; | கூட்டு | வாழ்க்கை |
| குலையாமல் | வாழ்ந்துகாட்டி | ஒரேபுற் | றுக்குள் |
| குறைவின்றி | வாழ்வதுவும் | எறும்பு | தானே! |
| புற்றதற்குக் | கட்டுதற்குக் | கற்றுத் | தந்த |
| பொறியாளர் | எவருண்டு; | போர்க்கா | லத்துப் |
| பற்றுடைய | வீரன்போல் | பரப | ரத்துப் |
| பாங்குடனே | சிறுவாயில் | மண்சு | மந்து |
| பொற்கொல்லர் | நகைசெய்தல் | போலே | அந்தப் |
| புற்றுதனைக் | கட்டுவது | அடடா! | அந்தப் |
| பொற்புடைய | சாதனைகள் | மனித | னுக்குப் |
| பொறுமைக்கும் | திறமைக்கும் | சவாலே | யன்றோ! |
| மன்னன்தன் | நாட்டிலுள்ள | மக்கள் | காக்க |
| மகத்தான | கோட்டையதை | கட்டி | ஆங்கே |
| எண்ணற்ற | தானியங்கள் | களஞ்சி | யத்தில் |
| எப்போதும் | வைத்திருப்பான்; | பசிபஞ் | சங்கள் |
| தன்னாட்டு | மக்களினைத் | தாக்கா | வாறு |
| தடுத்தாள்வான் | போர்க்காலம் | காப்பான். | இந்த |
| பொன்னரிய | தத்துவத்தை | மனித | னுக்குப் |
| புகட்டியது | புற்றுகளும் | எறும்பும் | தானே! |
| போரில்லா | ஓருலகம் | புற்றுக் | குள்ளே |
| புரிந்துசெயல் | படுகின்ற | தலைமை | அங்கே |
| நீருக்கும் | நிலத்திற்கும் | சண்டை | இல்லை! |
| நீபெரியன் | & | நான்பெரியன் | & |
| யாருணவை | யார்பறித்தல் | பதுக்கல் | இல்லை! |
| யாவருக்கும் | சமச்சீர்தான் | புதுமை | ஆட்சி |
| ஊருலகைக் | கட்டியாளும் | மனிதன்; | இந்த |
| ஒப்புமைஇல் | லாச்செயலைப் | போற்ற | வேண்டும்! |
| முன்னேற்றம் | வேண்டுமென்ற | முனைப்புக் | கொள்ளு! |
| மூவுலகும் | துணைநிற்கும் | விழித்துக் | கொள்ளு! |
| உன்னேற்றம் | உன்எழுச்சி | முயற்சி | யாலே |
| உலகையே | துயிலெழுப்பு; | செயல்கள் | செய்நீ! |
| கண்ணோட்டம் | கருத்தோட்டம் | புதுமை | யாக்கு! |
| காலடியில் | உலகமே | சுழலும் | காண்பாய்! |
| முன்னோட்டப் | படிக்கட்டில் | முந்தி | நில்லு! |
| முப்பிறப்பின் | பலனிப்போ | உன்னைத் | தேடும்! |
| | | |
| விலைகொடுத்தும் | வினைமுடிக்கும் | துணிவு | வேண்டும்! |
| வீராப்பு | வெறும்பேச்சு | வென்றி | டாது! |
| மலையேற | வேண்டுமெனில் | வலிமை | வேண்டும்! |
| மனத்துணிவு | நம்பிக்கை | உறுதி | வேண்டும்! |
| நிலைஉயர | வேண்டுமெனில் | உழைக்க | வேண்டும்! |
| நெறிதவறாக் | குறிதவறா | முயற்சி | வேண்டும்! |
| அலையைப்போல் | முன்னோக்கும் | ஆற்றல் | வேண்டும்! |
| அது | உனக்குத் | தரும்வெற்றி! | தோல்வி |
| | | |
| நேர்மையுடன் | உழைத்துப்பார்! | நெஞ்சு | தூக்கி |
| நித்தம்நீ | பாடுபடு! | வெற்றி | உன்னை |
| ஓர்மையுடன் | தேடிவரும்! | உலகம் | உன்னை |
| உத்தமனாய் | அடையாளம் | காட்டும்! | காண்பாய்! |
| சீர்மைக்குச் | சிறுமையே | இல்லை; | நீயும் |
| சிந்தித்துச் | செயத்தக்க | செய்து | பாரு! |
| வேர்வைக்குத் | தான்வெற்றி! | ஏய்ப்போர்க் | கல்ல! |
| வியந்துயர்த்தும் | உலகம்உனைப் | போற்றிப் | பாடும்! |
| ஆண்சாதி | பெண்சாதி | இரண்டே | யன்றி |
| அடுக்கடுக்காய்ச் | சாதிகள்ஏன்? | ஒழிந்தா | லென்ன? |
| தான்சாதி | தானுயர்வு | மற்ற | சாதி |
| தாழ்ந்ததெனும் | நிலையழிந்து | போனா | லென்ன? |
| வீண்சாதி | பேசுவதால் | மோதல் | சாதல் |
| விடிவில்லா | பாழிருட்டே | சேர்க்கும்; | இந்த |
| தான்தோன்றி | சாதிமுறை | வேண்டாம்; | நாட்டில் |
| சமத்துவத்தைப் | பயிர்செய்வோம்; | அமைதி | சேர்ப்போம்! |
| | | |
| எத்தனையோ | நூற்றாண்டாய் | சாதி | பேசி |
| இப்புனித | மனிதத்தைச் | சீர | ழித்தார்! |
| வித்தகமாய் | நால்வருண | குலஆச் | சாரம் |
| வேரூன்ற | மனிதகுலம் | வீழ்த்திச் | சாய்த்தார்! |
| கொத்தடிமை | ஏற்றத்தாழ் | விகழ்ச்சி | பேசி |
| கொடுஞ்செயலாம் | தீண்டாமை | தூண்டி | விட்டார்! |
| சத்துணவில் | “சமத்துவ | புரத்தில்” | “பஸ்ஸில் |
| சந்தையினில்” | சமச்சீரில்” | உண்டோ | சாதி |
| | | |
| கடைபோட்டு | சாதிவெறி | வளர்க்க | லாமோ |
| கண்மூடித் | தனம்விட்டு | விழித்தா | லென்ன? |
| நடைபோட்டுச் | சட்டத்தின் | துணையி | னோடு |
| நாளுமதைக் | காப்பதுவும் | நீதி | தானா? |
| விடைகண்ட | பலதலைவர் | சாதி | வாரி |
| வியூகங்கள் | ஆய்கின்றார் | ஞாயம் | தானா? |
| தடைவேண்டும்; | இனம்ஒன்றே | ஆக்கல் | வேண்டும்! |
| தப்பேது | சமுதாயம் | நிமிர | வேண்டும்! |
| | | |
| மனிதமுண்டு | சாதியில்லை | என்றே | கூறும் |
| மகத்தான | நாள்வரும்நாள் | எந்த | நாளோ? |
| அணிதிரண்டு | சாதிவாரி | போர்கள் | செய்வோர் |
| அதைமறந்து | ஓரணியில் | திரள்வ | தெந்நாள்? |
| பிணியொத்த | சாதிசதி | ஒழிந்த | தென்றே |
| பிரகடணப் | படுத்தும்நாள் | எந்த | நாளோ? |
| கனியிருக்கக் | காய்கவர்தல் | தீர்வ | தெந்நாள்? |
| கருமுதலே | சாதியின்றிப் | பிறப்ப | தெந்நாள்? |
| மூடப் | பழக்கத்தை | மூடு | – வாழ்வின் |
| முன்னேற்ற | வழித்தடத்தை | நாடு! | |
| ஓடிப் | பொருள்புகழ் | தேடு | – அயரா |
| உழைப்புதான் | உயர்வென்று | பாடு! | |
| | | |
| எவரெவரும் | சமமென்று | ஆக்கு | – நாட்டில் |
| ஏழைபணக் | காரன்நிலை | நீக்கு! | |
| தவறாது | கல்விதொழில் | ஊக்கு | – ஆய்ந்து |
| தளிர்க்கட்டும் | இளைஞர்மனப் | போக்கு! | |
| | | |
| வளரவிடு | புதுமைகளைப் | பற்றி | – அது |
| வழிதிறந்தால் | உலகுபெறும் | வெற்றி! | |
| புலரட்டு | அறிவுலகம் | பெற்றி | – ஆங்கே |
| போய்மறையும் | பேதமைகள் | வற்றி! | |
| | | |
| பஞ்சமினி | யில்லெயெனச் | சொல்லு | – ஆன்ற |
| பகுத்தறிவால் | உலகத்தை | வெல்லு! | |
| துஞ்சுவதை | கெஞ்சுவதைக் | கொல்லு | – எதிலும் |
| துடிப்போடு | முன்னேறி | நில்லு! | |
| | | |
| நம்பிக்கை | கொண்டு | நீவாழு | – அறிவு |
| நன்மைதரும் | இன்பமெலாம் | சூழும்! | |
| தெம்புகொள் | உறுதியுனை | ஆளும் | – எட்டுத் |
| திசைமுழுதும் | புகழ்பரவி | நீளும்! | |
Back to Top