Skip to content
| வண்ணமலர் | பூத்திருக்கு | வண்டுவந்து | காத்திருக்கு | |
| என்னவளே | தேனெடுத்து | இன்பம்தரவா | -கண்ணே | |
| கன்னமுத | வாயிதழில் | கள்குடிக்கவா! | | |
| | | | |
| நேத்துஎன்னைப் | பார்த்துவிட்டு | நிற்காமே | போனியேடி | |
| காத்துநிற்க | விடுவதுதான் | காதலொக்குமா | -கண்ணே | |
| காரணத்தைக் | கூறடியோ | கண்ணுப்பக்கமா! | | |
| | | | |
| அன்னத்திடம் | சொன்னதென்ன | ஆருக்குநீ | தூதுவிட்டே | |
| என்னக்கிட்ட | வரவில்லையே | என்னகதையோ | -கண்ணே | |
| ஏக்கம் | என்னைத்தாக்குதடி | வண்ணக்கிளியே! | | |
| | | | |
| ஏபுள்ளே | தூக்குனேனே | இளவட்டக் | கல்லுரெண்டு | |
| காளையை | அடக்குனேனே | காணவில்லையா | – உன்னைக் | |
| கட்டிக்கொள்ள | என்னசெய்ய | கூறடிபெண்ணே! | | |
| | | | |
| கம்புச்சண்டை | கத்திச்சண்டை | குத்துச்சண்டை | மல்லுக்கட்டு | |
| சேவச்சண்டை | கடாச்சண்டை | ஜெயிக்கட்டுமா | – இல்லை | |
| ஆடுபுலி | வேடமிட்டு | ஆடட்டுமா! | | |
| | | | |
| வானவில்லைக் | கயிறாக்கி | சந்திரனை | சூரியனை | |
| நட்சத்திரக் | கூட்டத்தைக் | கட்டிவரவா | -இல்லை | |
| வானுலகக் | காமதேனைக் | கூட்டிவரவா ! | | |
| | | | |
| தேன்எடுத்துத் | தேன்தரவா | தேவையென்ன | கூறடியோ | |
| காமனுக்கு | ரதிபோல | வந்துசேரடி | – இந்த | |
| மாமனின்னும் | எத்தனைநாள் | காத்திருப்பேன்டி ! | | |
Back to Top