Skip to content
| தாமரை | கூட | தவமிருக்கும் | – அவள் |
| தங்க | முகத்தைப் | பார்ப்பதற்கு! | |
| ரோஜா | மலரும் | தவமிருக்கும் | – அவள் |
| மேனியின் | நிறத்தைப் | பார்ப்பதற்கு! | |
| | | |
| முத்துகள் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
| முல்லைப் | பல்லைப் | பார்ப்பதற்கு! | |
| கத்தும் | குயிலும் | காத்துக்கிடக்கும் | – அவள் |
| கனியினும் | இனிதாம் | குரல்கேட்க! | |
| | | |
| மானும் | மயிலும் | தவமிருக்கும் | – அவள் |
| மையல் | சாயல் | கணிப்பதற்கு! | |
| வானவில் | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
| வளைந்த | புருவம் | ரசிப்பதற்கு! | |
| | | |
| கடலும் | வானும் | தவமிருக்கும் | – அவள் |
| கண்ணில் | நீலம் | பார்ப்பதற்கு! | |
| அம்பும் | மீனும் | தவமிருக்கும் | – அவள் |
| அழகிய | கண்களைப் | பார்ப்பதற்கு! | |
| | | |
| நிலவு | கூடத் | தவமிருக்கும் | – அவள் |
| நெற்றியில் | பிறையைக் | காண்பதற்கு! | |
| உலவும் | தென்றலும் | தவமிருக்கும் | – அவள் |
| உடலை | மெதுவாய்த் | தொடுவதற்கு! | |
| | | |
| வலம்வரும் | மேகமும் | காத்திருக்கும் | – அவள் |
| வளர்கருங் | கூந்தலைப் | பார்ப்பதற்கு! | |
| மலையும் | குன்றும் | தவமிருக்கும் | – அவள் |
| பருவ | அழகை | ரசிப்பதற்கு! | |
| | | |
| நான்மறை | முனிவரும் | தவமிருப்பார் | – அவள் |
| நடையுடை | பாவனை | ரசிப்பதற்கு! | |
| சித்தரும் | பித்தராய் | மாறிடுவார் | – அவள் |
| சிறுநகை | கடைவிழி | தாக்குதலால்! | |
| | | |
| பிரமன் | இந்திரன் | தவமிருப்பார் | – அவள் |
| பேரழ | கிளமையை | ரசிப்பதற்கு! | |
| செத்தவர் | கூட | பிழைத்தெழுவார் | – அவள் |
| சிற்றடி | சதங்கை | ஓசையிலே! | |
| | | |
| அம்பிகா | பதிகூட | இன்றிருந்தால் | – அந்த |
| அமரா | வதிகதி | அதோகதிதான்! | |
| மஜ்னு | கூட | இன்றிருந்தால் | – அந்த |
| லைலா | கதியும் | எக்கதியோ! | |
| | | |
| அக்பர் | மகன்சலீம் | இவளைக்கண்டால் | – அந்த |
| அனார்க்கலி | நிலைமை | யாரறிவார்! | |
| தேவதாஸ் | கூட | பார்வதிமறப்பான் | இந்தத் |
| தேவதை | அருகே | இருந்துவிட்டால்! | |
Back to Top