Skip to content
| இனிஎவரும் | அணிமாறி | ஆட்சிக் | கட்டில் |
| ஏறிடலாம்; | தமிழ்நாட்டில் | ஏழை | பெற்ற |
| கனிபோன்ற | திட்டத்தை | நிறுத்தி | டாமல் |
| கண்டிப்பாய் | தொடர்ந்ததனை | செயத்தான் | வேண்டும்! |
| நனிமிக்க | சாணக்யன் | அர்த்த | சாஸ்த்ரம் |
| நவிலுகிற | ஆட்சிமுறை | இதையே | சொல்லும்! |
| எனக்கென்ன | என்றிருந்தால்; | ஆட்சி; | வீழ்ச்சி |
| எவ்வழியோ | நடந்திடலாம்; | வரலா | றுண்டு! |
| | | |
| கொலைகளவு; | கற்பழிப்பு; | ஜாதி | மோதல் |
| கட்டப்பஞ் | சாயத்து; | கந்து | வட்டி |
| தலைமுறையை | அழித்தொழிக்கும் | குடிப்ப | ழக்கம்! |
| தனைமறக்கும் | அபின்கஞ்சா | போதைப் | பாதை |
| நிலைகுலைக்கும் | கடத்தல்கலப் | படப்ப | துக்கல் |
| நெறிதவறும் | நீதிமுறை | கள்ள | நோட்டு |
| விலைபோடும் | கொத்தடிமை | சிறார் | கொடுமை! |
| வறுமையினைப் | பஞ்சத்தை | ஒழிக்க | வேண்டும்! |
| | | |
| மத்தியிலே | ஆட்சிமொழி! | நீதி | மன்றில் |
| வழங்குமொழி | தமிழ்வேண்டும்! | சென்னை | தன்னைச் |
| சுற்றிலுமே | துணைநகரம் | அமைக்க | வேண்டும்! |
| திருக்குறள்தே | சியநூலாய் | ஆக்க | வேண்டும்! |
| வற்றாத | நதிகளையே | ஒன்றாய் | ஆக்கி |
| வளம்மிகுந்த | தமிழகமாய் | உயர்த்த | வேண்டும்! |
| வெற்றுரைஏன் | மெட்ரோரயில் | சேதுத் | திட்டம் |
| வியக்கும்வகை | செயல்படுத்தி | ஆள | வேண்டும்! |
| | | |
| மின்சாரம் | பெருக்கிடவே | திட்டம் | வேண்டும்! |
| மிகுமின்சார | ரம்பிறர்க்கு | விற்க | வேண்டும்! |
| தென்சாரல் | மலையோரம் | காற்றா | லைகள் |
| திசையெங்கும் | அனல்புனல்சூ | ரியமின்சாரம் | |
| தன்சாரம் | பார்க்காமல் | பெருக்க | வேண்டும்! |
| தகுதிமிகு | பெருந்தொழிலின் | அதிபர்; | மற்றும் |
| பொன்சாரம் | கோபுரத்தில் | போர்த்தும் | தக்கார் |
| போன்றவரை | முதலீட்டார் | ஆக்க | வேண்டும்! |
| | | |
| காவிரிநீர்த் | தாவாவைத் | தீர்க்க | வேண்டும்! |
| கல்வியில் | சமச்சீர்தான் | ஓங்க | வேண்டும் |
| மேவிய”தை” | முதலே | தமிழ் | ஆண்டு |
| மேலும்பல | காட்டாற்றில் | அணைகள் | வேண்டும்! |
| தாவிவரும் | மழைநீரை | ஏரி | குளத்தில் |
| தடுத்தாளக் | கரையுயர்த்த | வேண்டும்; | மேற்கே |
| பாய்நதியைக் | கீழ்திசையில் | திருப்ப | வேண்டும்! |
| பரிந்துரையால் | பெரியார்அணைத் | தீர்வு | வேண்டும்! |
| | | |
| கடற்கரையில் | நதிக்கரையில் | கூவம் | ஓரம் |
| காலமெலாம் | வாழ்வோரின் | நிலையு | யர்த்தி |
| இடர்பாடு | இலாநிலையில் | வாழு | தற்கு |
| ஏற்றதொரு | வழிகாண | வேண்டும்; | உழவர் |
| தொடர்வருவாய் | பெற்றுயர்ந்து | வாழத் | தக்க |
| திட்டங்கள் | வகுத்திடவும் | வேண்டும்; | நாட்டை |
| அடர்வருவாய் | மாநிலமாய்த் | தொழில்கள் | கூட்டி |
| ஆண்டிடவும் | வேண்டும்என் | வேண்டு | கோளே! |
| | | |
| அதிகாரம் | “அதி” | “காரம்” | ஆய்வி |
| அகங்காரம் | ஆணவங்கள் | ஓங்கி | டாமல் |
| விதிமீறல், | லஞ்சமொடு, | ஊழல் | தன்னை |
| விளைக்காமல் | அரசுவழி | தொடர | வேண்டும்! |
| விதிப்பயனே | என்றிருந்த | காலம் | போச்சு |
| விம்முகிற | நிலை; | ஏழை | பெறுவா |
| கொதிப்படக்க | வல்லவர்கள் | எவரும் | இல்லை! |
| குறியிடுவார்! | வாக்களிப்பார்! | ஆட்சி | மாறும்! |
| | | |
| வேண்டுதல்வேண் | டாநிலையை | ஏற்றி | டாமல் |
| விருப்புவெறுப் | பிலாநிலையை | போற்றி | டாமல் |
| தூண்டுதல்செய் | அறநெறியை | அறிஞர் | கூற்றைத் |
| துச்சமென | இகழ்ந்ததனால்; | இடிப்பா | றின்றி |
| மாண்டழிந்த | ஆட்சிபல | உண்டு; | இதுதான் |
| வரலாறு; | ஆள்பவர்கள் | உணர | வேண்டும்! |
| ஆண்டழிந்தான் | இராவணனே! | விபீச | னன்தன் |
| அறிவுரைகள் | ஏற்கவில்லை; | முடிவு | என்னே? |
Back to Top