யார் ஆண்டாலும்!

இனிஎவரும்அணிமாறிஆட்சிக்கட்டில்
ஏறிடலாம்;தமிழ்நாட்டில்ஏழைபெற்ற
கனிபோன்றதிட்டத்தைநிறுத்திடாமல்
கண்டிப்பாய்தொடர்ந்ததனைசெயத்தான்வேண்டும்!
நனிமிக்கசாணக்யன்அர்த்தசாஸ்த்ரம்
நவிலுகிறஆட்சிமுறைஇதையேசொல்லும்!
எனக்கென்னஎன்றிருந்தால்;ஆட்சி;வீழ்ச்சி
எவ்வழியோநடந்திடலாம்;வரலாறுண்டு!
கொலைகளவு;கற்பழிப்பு;ஜாதிமோதல்
கட்டப்பஞ்சாயத்து;கந்துவட்டி
தலைமுறையைஅழித்தொழிக்கும்குடிப்பழக்கம்!
தனைமறக்கும்அபின்கஞ்சாபோதைப்பாதை
நிலைகுலைக்கும்கடத்தல்கலப்படப்பதுக்கல்
நெறிதவறும்நீதிமுறைகள்ளநோட்டு
விலைபோடும்கொத்தடிமைசிறார்கொடுமை!
வறுமையினைப்பஞ்சத்தைஒழிக்கவேண்டும்!
மத்தியிலேஆட்சிமொழி!நீதிமன்றில்
வழங்குமொழிதமிழ்வேண்டும்!சென்னைதன்னைச்
சுற்றிலுமேதுணைநகரம்அமைக்கவேண்டும்!
திருக்குறள்தேசியநூலாய்ஆக்கவேண்டும்!
வற்றாதநதிகளையேஒன்றாய்ஆக்கி
வளம்மிகுந்ததமிழகமாய்உயர்த்தவேண்டும்!
வெற்றுரைஏன்மெட்ரோரயில்சேதுத்திட்டம்
வியக்கும்வகைசெயல்படுத்திஆளவேண்டும்!
மின்சாரம்பெருக்கிடவேதிட்டம்வேண்டும்!
மிகுமின்சாரரம்பிறர்க்குவிற்கவேண்டும்!
தென்சாரல்மலையோரம்காற்றாலைகள்
திசையெங்கும்அனல்புனல்சூரியமின்சாரம்
தன்சாரம்பார்க்காமல்பெருக்கவேண்டும்!
தகுதிமிகுபெருந்தொழிலின்அதிபர்;மற்றும்
பொன்சாரம்கோபுரத்தில்போர்த்தும்தக்கார்
போன்றவரைமுதலீட்டார்ஆக்கவேண்டும்!
காவிரிநீர்த்தாவாவைத்தீர்க்கவேண்டும்!
கல்வியில்சமச்சீர்தான்ஓங்கவேண்டும்
மேவிய”தை”முதலேதமிழ்ஆண்டு
மேலும்பலகாட்டாற்றில்அணைகள்வேண்டும்!
தாவிவரும்மழைநீரைஏரிகுளத்தில்
தடுத்தாளக்கரையுயர்த்தவேண்டும்;மேற்கே
பாய்நதியைக்கீழ்திசையில்திருப்பவேண்டும்!
பரிந்துரையால்பெரியார்அணைத்தீர்வுவேண்டும்!
கடற்கரையில்நதிக்கரையில்கூவம்ஓரம்
காலமெலாம்வாழ்வோரின்நிலையுயர்த்தி
இடர்பாடுஇலாநிலையில்வாழுதற்கு
ஏற்றதொருவழிகாணவேண்டும்;உழவர்
தொடர்வருவாய்பெற்றுயர்ந்துவாழத்தக்க
திட்டங்கள்வகுத்திடவும்வேண்டும்;நாட்டை
அடர்வருவாய்மாநிலமாய்த்தொழில்கள்கூட்டி
ஆண்டிடவும்வேண்டும்என்வேண்டுகோளே!
அதிகாரம்“அதி”“காரம்”ஆய்வி
அகங்காரம்ஆணவங்கள்ஓங்கிடாமல்
விதிமீறல்,லஞ்சமொடு,ஊழல்தன்னை
விளைக்காமல்அரசுவழிதொடரவேண்டும்!
விதிப்பயனேஎன்றிருந்தகாலம்போச்சு
விம்முகிறநிலை;ஏழைபெறுவா
கொதிப்படக்கவல்லவர்கள்எவரும்இல்லை!
குறியிடுவார்!வாக்களிப்பார்!ஆட்சிமாறும்!
வேண்டுதல்வேண்டாநிலையைஏற்றிடாமல்
விருப்புவெறுப்பிலாநிலையைபோற்றிடாமல்
தூண்டுதல்செய்அறநெறியைஅறிஞர்கூற்றைத்
துச்சமெனஇகழ்ந்ததனால்;இடிப்பாறின்றி
மாண்டழிந்தஆட்சிபலஉண்டு;இதுதான்
வரலாறு;ஆள்பவர்கள்உணரவேண்டும்!
ஆண்டழிந்தான்இராவணனே!விபீசனன்தன்
அறிவுரைகள்ஏற்கவில்லை;முடிவுஎன்னே?
Back to Top